இவர்களுக்கு நல்ல சாவு வருமா...?

இதைவிட கேவலமானவர்கள் இருப்பார்களா? அரசியலுக்கு வேண்டி வேறு என்ன விதமாக கேடுகெட்ட வேலைகள் எல்லாம் இவர்கள் செய்வார்களோ தெரியவில்லை...! இவர்களின் வீட்டில் இருக்கும் பெண்கள் சற்று கவனமாக இருப்பது நலம்..

போலியோ பாதிப்பினால் ஊனமுற்ற குழந்தைகள் அற்ற சமுதாயம் பெற்றிட வேன்டும் என்ற உயரிய நோக்குடன் வருடத்திற்கு 2 முறை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசு இலவச போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கிறது. பல ஆண்டுகளாக செவ்வனே சென்றுக்கொண்டிருக்கும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களை இந்த ஆண்டு அரசியல் தரித்திரம் பிடித்து தான் வேதனை..

13 ஆன்டுகளுக்கு மேலாக இந்த முகாம்கள் சலசலப்பின்றி நடந்துக்கொண்டிருக்க இந்த வருடம் மட்டும் ஏன் இந்த பீதி?

எல்லாம் பாழாய்ப்போன அரசியல் காழ்ப்பு..

ஆம் , போலியோ சொட்டு மருந்து போட்ட குழந்தை இறந்தது என்று ஜெயா டீவியின் இடைவிடாது போடப்பட்ட ப்ளாஷ் நியுஸ் இந்த வதந்திக்கு மூலக்காரணமாகி ஒரு களேபரத்தை நடத்திவிட்டது.

அரசியல் காழ்ப்பு காரணமாக செய்தியின் உண்மை அறியாது, ப்ளாஷ் நியுஸ் ஓட விட்ட இந்த தொலைக்காட்சியின் கேடுகெட்ட செயலை என்னவென்று சொல்வது?

சத்தியமங்கலத்தை சேர்ந்த அண்ணாதுரை, அ தி மு க காரரின் குழந்தை போலியோ மருந்து கொடுத்து சில மனி நேரங்களி இறந்து விடுகிறது... இது தான் ஜெயாவில் வந்த முதல் ப்ளாஷ்.. அ தி மு க காரரின் குழந்தை இறந்துவிட்டது என்று ச்க அ தி மு க வினர் அடிந்த பேக்ஸ் தான் இந்த பீதிக்கு முதல் காரணம்.

உடனே ஆங்காங்கே. அ தி மு க வினர் திரண்டு , 5 பேர் பலி, 10 பேர் , 30 பேர் பலி என்று திட்டமிட்டு கணக்கு சொல்லி பீதியை கிளப்பினர்..

ஆனால் உண்மையிலே அந்த குழந்தை இறந்ததக்கு காரணம் அந்த குழந்தைக்கு நிகழ்ந்த மூளைச்சாவு தான்.. பிறக்கும் போதே மூளையில் கட்டியுடன் பிறந்த அந்த குழந்தை இன்றோ , நாளையோ என்று தன் நாட்களை கடத்திக்கொண்டிருந்தது . தற்செயலாக போலியோ மருந்து போடப்பட்ட நாளில் இறந்தது என்பது தவிர இந்த குழந்தையின் இறப்புக்கும் , போலியோ மருந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அண்ணாதுரையும், அந்த குழந்ததையை பார்த்துவந்த டாக்டரும் தெரிவித்துள்ளனர்.

அண்ணாதுரை அ தி மு க காரர் என்ற ஒரே காரணத்தினால் , அ தி மு க காரர்கள் இதனை தங்கள் வசதிக்கு வளைத்துவிட்டனர்.

இது தொடர்ந்து நடந்த மறியல் போராட்டத்தில் அ தி மு க கரை வேட்டிகள் வதந்தியை கிளப்பியபடியே இருந்துள்ளது.. எங்கிருந்தோ வந்த உத்தரவுகளால்.. ஆங்காங்கே பீதி கிளப்பபட்டது..

சில இடங்களில் சில அ தி மு க வினர் கருனாநிதி ஆட்சியில் இப்படித்தான்.. அம்மா இருந்திருந்தால் இது நடக்குமா , ஆகவே ரெட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்று சில ஓட்டு பொறுக்கிகள் குரல் விட்டுக்கொண்டிருந்தது ஊடகத்தில் பதிவாகியுள்ளது..

தூ.. நாயே.. ஒரு குழந்தையின் மரணத்தில் இப்படி அரசியல் செய்கிறாயே உனக்கு நல்ல சாவு வருமா? உன் குடும்பத்தில் இருக்கும் பென்கள் உஷாராக இருக்கவேண்டும்.. இல்லையெனில் அ தி மு க ஆட்சி வரவேண்டும் என்று நீ எதுவும் செய்வாய்..

வேதனையான விஷயம் , இவர்கள் கிளப்பிவிட்ட இந்த பீதியால் சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் பயத்தில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளவில்லை.. 1.5 லட்சம் குழந்தையில் ஒரு குழந்தைக்கு போலியோ தாக்குதல் ஏற்பட்டாலும், அந்த பாவம் இந்த கேடு கெட்ட நாய்களை சும்மா விடாது..

எதில் எதிலோ விளையாடிய இந்த கேடு கெட்ட அரசியல் , குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் இந்த விஷயத்திலுமா தன் விளையாட்டை காண்பிக்கவேண்டும்??

இந்த சொறிநாய்கள் தான் நாளை ஆட்சிக்கு வந்து நம் எதிர்க்காலத்தை தீர்மாணிக்க திட்டம் போடுகிறது என்பது தான் வேதனை..

ஒரு சாதாரன செய்தியை கூட அது ஒரு குறீப்பிட்ட டீ வி யில் வந்தது என்பதால் தூக்கி வந்து ருத்ரம் ஆடும் பல பதிவர்கள்.. கேட்டால் அம்மாவையும்,அம்மா டீவியையும் மயிலறாகால் வருடி விட்டு நாங்க நடுநிலைவியாதிகள் என்று மார் தட்டுபவர்கள் இந்த விஷயத்தை அந்த ம்யிலிறகு தடவல் கூட செய்யாது எங்கே ஒளிந்துள்ளார்களே..

3 கருத்துக்கள்:

muthu said...

நெத்தியடி.. உரைக்குமா இந்த நாய்களுக்கு?

வாக்காளன் said...

இது அரசியல் அநாகரீகத்தின் அடுத்த பரிமாணம்..

madhu said...

இவர்களுக்கு நல்ல சாவு வருமா...?"

NO WAY