அவன் வருவானா? 18 வயது மேற்பட்டோர் மட்டும் படிக்கவும்

"கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன " டயலர் ட்யூன் பாடலை ரசித்துக்கொண்டே தன் உயிர் நன்பன் சுந்தர் கைப்பேசியில் பதில் சொல்லும் தருனத்திற்கு காத்திருந்தான் யுவராஜ்.

டயலர் ட்யூன் துண்டிக்கப்பட்டு மறுமுனையில் இருந்து சுந்தரின் குரல் - சொல்லு யுவா,

மாப்ள, எங்கேடா இருக்கே..

வீட்ல தான்டா இருக்கேன்.. என்ன மேட்டர்..சொல்லு

டேய்.. வீட்ல எல்லோரும் திருச்சிக்கு போறாங்க , வர ரெண்டு நாளாகும்.. நைட் இங்கே வந்துடு ஒரு சின்ன பார்ட்டி போட்டிரலாம்.. என்ன சொல்ற..

ஒக்கேடா....நம்மளும் பார்ட்டி போட்டு ஆறு மாசமாகுது.. கண்டிப்பா வரேன்டா.. 6 மனிக்கு என் சித்தி பையன் வருவான்டா.. அவன் வந்துட்டு கிளம்பின அப்புறம் நான் வரேன்டா, எப்படியும் அங்கே வர 8.30 ஆகும்..

சரிடா, வா.. நான் எல்லா ஏற்பாடும் பன்னிடறேன்.. சரியா.. மறக்காம வந்துடு..

ஷ்யூர் மச்சி.. வெச்சிடறேன்டா..

இனைப்பு துன்டிக்கப்பட்டது.

யுவராஜ் மற்ற வேலைகளில் மூழ்கினான்..

இரவு மணி 6.50..
"எப்போ கிளம்புறே?" - சுந்தருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினான்..இன்னும் 15 நிமசத்துல கிளம்பிடுவேன்டா.. பதில் வந்தது..

மணி 8.15
சுந்தருக்கு பிடிச்ச ஒரு புல் பாட்டில் மால்ட் விஸ்கி, 2 குளிர்ந்த பீர். 2 அரை லிட்டர் லெகர் சோடா, ஒரு அரை லிட்டர் செவென் அப், பகோடா, சிப்ஸ், சிக்கன் 65, 5 முட்டை.. ஒரு பாக்கட் பில்டர் கிங்க்ஸ்.

எல்லாம் சரியா இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டான் யுவராஜ்..

அச்சோ.. அவனுக்கு ஊறுகாய் இருந்தாதானே சரக்கு உள்ள போகும்.. சமையலறைக்கு சென்று ஊறுகாய் டப்பாவை தேடி எடுத்துவந்தான்..

மனி 9 .02. சற்று பொறுமை இழந்தான்.. என்னடா இவன் , சொன்ன நேரத்துக்கு வரவேண்டாமா.. 8.30க்கு சொன்னான் , மனி 9:00 தாண்டுது.. அலுத்துக்கொண்டான்..

மீண்டும் அவன் கைப்பேசிக்கு அழைத்தான்.. ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.... சரி வரட்டும் , இருக்கு அவனுக்கு..

தொலைக்காட்சியில் மூழ்க்கினான். மனி பத்தை நெருங்கியது..

நாய், இப்படி ஏமாத்திட்டானே... செல் ஆப் பன்னிவெச்சு ஆட்டம் காட்டறான்.. இருக்கு அவனுக்கு. முனகிக்கொண்டே, இதற்கு மேல் தாங்காது என்று வீட்டு கதவை மூடிவிட்டு.. ப்ரிட்ஜ் திறந்து ஒரு பீரை எடுத்து ருசிக்க ஆரம்பித்தான்..

மனி 11.10.. ஒரு பீரும் , 1 ரவுண்ட் விஸ்க்கியும் உள்ளே போயிருந்தது..
பலமாக கதவை தட்டும் சத்தம். கொஞ்சம் பயந்து போனான்..மெதுவாக சென்று கதவை திறந்தவனுக்கு அதிர்ச்சி.

அங்கே சுந்தர் நின்றிருந்த கோலம் அப்படி.. தலையெல்லாம் கலைந்து.. கண்கள் சிவந்து.. சட்டை கிழிந்து. ஆங்காங்கே சிராய்ப்பு..

என்னடா மாப்ளே , என்ன கோலம் இது.. என்னடா ஆச்சு , பதறினான்..உள்ளே சென்ற பீரும், விஸ்கியும் ஏற்படுத்தியிருந்த கிறுகிறுப்பும் சுத்தமாக இறங்கியிருந்தது..

ஒன்னுமில்லேடா பயப்படாதே.. என் சித்திப்பையன் லேட்டாதான் கிளம்பினான்டா.. அவனை அங்க வீட்ல ட்ராப் பன்னிட்டு வர லேட் ஆகிடுச்சு... வர வழில ஒரு வேன் காரன் வேகமா வந்து இடிச்சுட்டான்.. ஒரு மைனர் ஆக்சிடென்ட்..வேற ஒன்னும் இல்லை.

சரி சரி, முதல்ல உள்ள வா.. இப்படி உட்கார்..

கொஞ்சம் பஞ்சும் டிஞ்சரும் எடுத்து வந்து முதலுதவி செய்தான்.. இருவரும் இப்போது சற்று இறுக்கம் தளர்ந்து சகஜ நிலைக்கு வந்திருந்தார்கள்..

டேய் மாப்ள .. வீட்டுக்குள்ளே அடிக்கறத விட மொட்ட மாடில அடிச்சா அம்சமா இருக்கும்டா.. வா மாடிக்கு போகலாம்..

அனைத்தையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றார்கள்..

மாப்ள, இந்தா டவல்., அந்த குழாய்ல முகம் கழுவிக்கோ... இந்தா என் டீ சர்ட் , லுங்கி மாத்திக்கோ... அப்புறம் பார்ட்டிய ஆரம்பிக்கலாம்.. ராத்திரி முழுக்க டைம் இருக்கு.. சரியா..

சரிடா யுவா..

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே செல் போன் சினுங்கல் கேட்டது..

டேய் யுவா, உன் செல்போன் தான் அடிக்குதுடா..

ஆமாம்டா மாப்ள.. மறந்து போயி கிழே வெச்சுடேன்.. யார் இந்த நேரத்துல.. அம்மாவா இருக்கும்டா.. திருச்சி போய் சேர்ந்திருப்பாங்க.. சரி நீ முகம் கழுவி, டிரஸ் மாத்து. நான் போய் பேசிட்டு வரேன்.. சொல்லிக்கொண்டே கீழிறங்கி போனான் யுவா..

கீழே சென்று கைபேசி எடுத்தான்.. என்ன இது புது நம்பரா இருக்கே... சிந்தனையினூடே பொத்தானை அமுத்தி காதில் வைத்து அலோ என்றான்..
மறுமுனையில் பேச பேச , இவன் முகம் வெளிறியது...

மறுமுனையில் பதற்றத்துடன் சுந்தரின் அப்பாவின் குரல்.. யுவா தம்பி, உன்னை பார்க்கத்தான் சுந்தர் வண்டி எடுத்துகிட்டு கிளம்பினான்.. ராயபேட்டை மணிக்கூண்டு கிட்ட வேகமா திரும்பறப்போ எதிர்ல வந்த வேன் பலமா மோதி, அங்கேயே ஸ்பாட்ல உயிர் போயிடுச்சுப்பா.. தகவல் கிடைச்சு இப்போ தான் எல்லாரும் பதறியடிச்சு ராயப்பேட்டை ஜி எச் வந்தோம்.. வந்து முகத்த பார்த்தோம்பா.. எல்லாம் முடிஞ்சுப்போச்சு... நம்மள எல்லாம் விட்டுட்டு உன் பிரண்ட் போயி 2 மனி நேரம் ஆகுதுப்பா.. போஸ்ட்மார்ட்டம் நடந்துக்கிட்டு இருக்கு , பாடி தர இன்னும் 1 மனி நேரம் ஆகுமாம்.. ஒரே பதட்டமா இருக்கு.. கொஞ்சம் சிரமம் பார்க்காம சீக்கிரம் வாப்பா.. அழுதுக்கொண்டே பேசினார்.. பின்னால் பலரின் அழுகுரல் தெளிவாக கேட்டது..

கால்களுக்கு கீழே பூமி பிளப்பது போல உணர்ந்தான யுவா.. அப்போ மேல மாடில..... ??

மாப்ள, எனக்கு பிடிச்ச மால்ட் விஸ்கி , ஊருகாய்.. நாக்கு ஊறுது சீக்கிரம் மேல வாடா... சுந்தரின் குரல் காற்றில் மிதந்து வந்தது...
------------------------------------------------------------------------
இந்த கதைக்கான ஒரு வரிக்கரு சமீபத்தில் எப் எம் நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது..
----------------
சரி, இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி.. யுவாவாக உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.. இந்த நிலையில் நீங்கள் இருந்தால்.. உங்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்.. மறக்காமல் கருத்துப்பெட்டியில் சொல்லிட்டு போங்க..

19 கருத்துக்கள்:

நான் said...

ங்கொய்யால...ஒரே ஒட்டம்தான்....நிக்க மாட்டோம்ல..

Anonymous said...

நிச்சயம் மேலே சென்று பேசியிருப்பேன்..நல்ல நட்பு என்பதால் தானே தேடி வந்திருக்கான்..

Anonymous said...

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே செல் போன் சினுங்கல் கேட்டது..
intha idatthula irunthu

வீ. எம் said...

வருகைக்கு நன்றி நான்..
//ஒரே ஒட்டம்தான்....நிக்க மாட்டோம்ல..//
பலரின் க்ருத்தும் இதுவாகத்தான் இருக்கும்..

வீ. எம் said...

வருகைக்கு நன்றி தூயா..

வித்தியாசமான் சிந்தனை, நினைத்து பார்த்தால் அதுவும் சரிதான்.. நல்ல நன்பன் என்பதால் தானெ வந்துள்ளான்.. மேலும் வந்தது முதல் இதுவரை எந்த அசம்பாவிதமும் இல்லையே...

வீ. எம் said...

வருகைக்கு நன்றி மாதங்கி முமு

உங்கள் கருத்து முழுமை பெற்றதாக இல்லையே.... வார்த்தைகள் விடுபட்டுள்ளதா?

ஆளவந்தான் said...

பின்னங்கால் பிடரியில் அடிக்க.. ஓட்டமா.. ஓட்டம்.. ஒரே ஓட்டம் தான் ( தயவு செய்து M.G.R பாணியில் படித்து விடாதீர்கள்)

வீ. எம் said...

ஆளவந்தான்.. வருகைக்கு நன்றி, நீங்க சொன்ன அப்புறம் தான் எம் ஜி ஆர் ஸ்டைல்ல படிக்கனும்னே தோனுது. :)

tommoy said...

என்னதான் நன்பன் என்றாலும், இப்படி ஒரு நேரத்தில் வீட்டை விட்டு முதலில் ஓடிப்போய்.. பக்கத்து வீட்டில் இருந்து யாரையாவது கூட்டி வந்து மேலே போய் பார்ப்பேன்..

உங்கள் கதை நடை அருமை..

KarthigaVasudevan said...

என்ன ஒரு ட்விஸ்ட் கதைல!!!? நல்ல கதை.
எனக்கு என்ன செய்றதுன்னு தெரியாம பதட்டம் பிளஸ் பயத்துல காய்ச்சல் வந்திருக்கும் .நானும் பாதி செத்திருப்பேன். கான்ட் be இமாஜின் !!!

Anonymous said...

அப்படியெல்லாம் ஒண்ணும் பயப்பட மாட்டேன். நண்பன் ஒண்ணும் பேயா வரல்லையே, அதுவுமில்லாம பேயா இருந்தாலும் அதுதான் நம்மளக்கண்டு ஓடும். :)

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும், நன்றி மிஸஸ் டவுட், சின்ன அம்மிணி

//அதுதான் நம்மளக்கண்டு ஓடும். //

:-)

//என்ன ஒரு ட்விஸ்ட் கதைல!!!? நல்ல கதை.//
மிக்க நன்றி

SurveySan said...

நச்சு! :)

1) ஹ்ம். திரும்ப மாடிக்கு போரதுக்கு முன்னாடி, பட்டை விபூதி நெத்தியில் பூசிக்கிட்டு, கந்த சஷ்டி கவசம் ஃபுல்லா சொல்லீட்டு, மேல போலாம். ;)

2) ?

தகடூர் கோபி(Gopi) said...

நல்ல கதை.

"பேய்/ஆவின்னா என்ன? உடலை விட்டு உயிர் பிரிஞ்சு அலையறது தானே? அதாவது உடல் இல்லாத உயிர். ஆனா நாம எல்லோரும் உடலும் உயிரும் உள்ளவங்க. உயிர் மட்டுமே உள்ள பேய்/ஆவியை விட உடலும் உயிரும் உள்ள நமக்கு தானே பலம் அதிகமா இருக்கனும்? அப்புறம் எதுக்காக பேய்/ஆவியை பாத்து நாம பயப்படனும்?"
இது வாரியார் சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் சொன்னது.

வீ. எம் said...

நன்றி சர்வேசன் & தகடூர் கோபி..

//நச்சு! :)//

உங்க நச் சிறுகதை போட்டிக்கு இதை எழுதியிருக்கலாமோ?? :) எனிவே லேட்.. :)

வித்தியாசமான சிந்தனை.. :) நல்லதான் சொல்லியிருக்காரு நம்ம வாரியார்..

Anonymous said...

Sri Lankan players won Indian players by innings
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

ராஜேஷ், திருச்சி said...

நச் நு ஒரு கதை.. எதிர்பாரா திருப்பம்.. அருமை..
நான் என்றால்.. முதலில் அங்கிருந்து நழுவிவிடுவேன்.. பின்பு தான் என்ன செய்ய என்ற யோசனையே வரும்

வாக்காளன் said...

nalla story.. good turning point

Unknown said...

good one.. i will first talk to my friend to understand what has happened.. after he is my friend