உண்மை சம்பவம். என்ன தலைப்பு வைக்கட்டும்?
டேய் குமாரு...
வணக்கம்னே.. சொல்லுனே..
மறக்காம அப்படியே எல்லா வட்டதுக்கும் சொல்லிடு.
சரிண்ணே..ஒரு வண்டி எடுத்து ரவுண்ட் அடிச்சிடுறேன்னே.
இந்த நூறு ரூபா , வெச்சிக்கோ.
சந்தானம்...
சொல்லுங்க சேகர் அண்ணே..
கட்சி ஆபிஸ் ல நோட்டிஸ் போர்ட்ல எழுதிப்போட்டுடா...
இதோ அங்கே தான் போறேன்னே.. எழுதிடுறேன்னே..
பச்ச கலர் சாக்பீஸ்ல சேகர், 33 வட்ட செயலாளர்னு போட்டுடா..
சரிண்ணே, எக்ஸ் எம் சி கூட சேர்த்துப்போட்டுடறேன்ன்னா..
வரண்ணே..
அப்படியெ ஆபிஸ்ல இருந்து 10க்கு 10 ல ஆறு கட்சிக்கொடி எடுத்துகோ.
சரிண்ணே.. அப்படியே நம்ம ஊட்ல புதுக்கொடி 3 இருக்குன்னே, அத எடுத்துக்கறேன்னே..
சரி, இந்தா வழில டீ சாப்பிட்டு போ- 50 ரூ தாள்
டேய் கோவிந்து..
இந்தா மேட்டரு. 750 நோட்டீஸ் போட்டுடு. எல்லா ஏரியாலயும் இருக்கனும்.. தெரிதா.. கட்சி பேரு. சின்னம் கொஞ்சம் பெரிசா வரனும்டா.. பாத்துக்கோ,,
சரிண்ணே , ஒரு ஏரியா மிஸ் ஆகாம பாத்துக்கறேன்ன்னே.. பக்கத்துல இருந்து பிரின்டிங், ப்ரூப் பார்த்து நானே முடிக்கரேண்ணே..
சரிடா.. இந்தா 1500 வெச்சிக்கோ.. மீதி அப்புறம் பாத்துக்கலாம்..
சரின்னே. வரண்ணே..
டேய், டேய்.. கஷ்டம் பாக்காம அப்படியே திருக்கழுகுன்றம் கட்சி ஆபிஸ்ல ஒரு மெசேஜ் கொடுத்துட்டு வந்துடுடா..
உனக்கு செய்யாமயான்னே.. கன்டிப்பா செய்யறேன்னே.. வரேன்னே....
அண்ணே, மாவாட்டம் வராருன்னே...
வாங்கண்ணே, வாங்கண்ணே,
என்ன சேகரு என்ன ஆச்சு திடிர்னு..
ஆமான்னே......... .. 9:00 மனிக்கு ஆச்சுன்னே.. அண்ணே, தலைமை கழகத்துக்கு சொல்லிடுவீங்களா அண்ணே.. பேக்ஸ் அனுப்பிட்டு தான் வரேன் சேகரு.. கவலப்படாதே....மனச தேத்திக்கோப்பா.
வீட்டின் உள்ளே விட்டுட்டு போயிட்டியே என்ற அனைவரின் அழுகுரலின் சத்தத்தில், கணவன், மகள், தம்பி, அண்ணன், சித்தி, மருகள், பேரன், பேத்தி, சம்பந்தி, பெரியம்மா, அண்ணி, நன்பர்கள் என அனைவரையும் பார்த்தேன்...
ஏனோ, "மகனை" மட்டும் பார்க்கவே முடியவில்லை.. மகனுக்கு பதிலாய் "அரசியல்வாதி"யை மட்டுமே பார்க்கமுடிந்தது.. அரசியலின் தாக்கம் என்னவென்று அப்போதுதான் எனக்கு புரிந்தது..
3 கருத்துக்கள்:
அடப்பாவமே.. !
வேதனையான விஷயம் தான் இது.. உறுவுகளை காட்டிலும் அரசியல் முக்கியத்துவம் பெருகிறது
Vaakkalan and Murali -
Thanks
Post a Comment