சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி திடீர் கைது4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இன்று கைது செய்யப்பட்டதாக குமுதம் வலைதளத்தின் லேட்டஸ்ட் நியூஸ் பகுதியில் செய்தி வந்துள்ளது..


ரிப்போர்ட்டர், ஜூவி, நக்கீரனுக்கு அடுத்த 2 பிரதிக்கான ஸ்பெஷல் கவர் ஸ்டோரிக்கான களம் கிடைத்துவிட்டது..


குமுதம்.காம் செய்தி கீழே.


மேட்டூர்: சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறையினர் கைது செய்து பெங்களூருக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக காவல்துறையினரால், சந்தன வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 4 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், வீரப்பன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மேட்டூரில் தங்கியிருந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். 5 போலீசார் மீது வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முத்துலட்சுமி கைது செய்யப்பட்டதாக கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - குமுதம்.

1 கருத்துக்கள்:

வாக்காளன் said...

அடுத்த அரசியல்வாதி தயார் ஆகிறாங்களோ??