ரஜினி விரலில் ருத்ராட்சம்..


ருத்ராட்சம்..


ரஜினி பற்றிய அடுத்த மேட்டருக்கு பிள்ளையார் சுழி போடும் வேலையை குமுதம் தொடங்கிவிட்டது.. அது டமார் என வெடித்து கிளம்புமா அல்லது புஸ் என்று போகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.


மக்கா, இந்த பதிவு ரஜினி பற்றியல்ல, ஏற்கனவே ரஜினி பற்றி 2 பதிவு போட்டாச்சு.. இது ருத்ராட்சம் பற்றியது.


அருனாசலம் படத்தில் ருத்ராட்சம் தான் கதையின் முக்கிய டர்னிங்க் பாயின்ட் ஏற்படுத்தும்..ரஜினி எனும் போதே,நெற்றியின் பட்டை, கழுத்துல ருத்ராட்சகொட்டை, பரட்டை தலை என்கிற டயலாக் பிரசித்தம்


ரஜினிக்கும் ருத்ராட்சத்துக்கும் ஏதோ தொர்டர்புள்ளது போலும்.


இதோ இந்த ருத்ராட்சத்தின் பயணமும் ரஜினியிடமிருந்தே ஆரம்பம் ஆகிறது.. எவ்வுளவு தூரப்பயணம் என்பது போக போகத்தான் தெரியும்..

இந்த வார குமுதம் ரிப்போர்டரில், ரஜினியின் கடந்த கால நிகழ்வுகள்(காவிரி, கர்நாடக எதிர்ப்பு, குசேலன் தோல்வி, இலங்கைப்பிரச்சனையில் திடீர் விசுவரூபம் , சத்யராஜ், ராமதாஸ் பாசம்) பற்றிய கட்டுரை.


அதாவது, ஒரு கட்டத்தின் ரஜினியை எதிர்த்தவர்கள் கூட(ராமதாஸ், சீமான், சத்யராஜ்) இப்போது அவரை பாராட்டிபேசுவதன் காரணம், ரஜினியின் விரலில் (அதுவும் ஆட்காட்டிவிரலில்) இருக்கும் ருத்ராட்ச மோதிரமாக இருக்கலாம் என்று ரிப்போர்ட்டரின் ஆய்வறிக்கை சொல்கிறது.

இது பற்றி மேலும் விவரங்களுக்கு அவர்கள் சோதிடர் ஷெல்வியை தொடர்பு கொண்ட போது அவர் சில விஷயங்களை சொல்லியுள்ளார், அதில் தான் ஒரு சந்தேகம்..

நீங்கள் சொல்வது போல், ரஜினி ஆள்காட்டி விரலில் ருத்ராட்ச மோதிரம் அணிந்திருப்பது உண்மையிலேயே விசேஷமானதுதான்
குரு மேட்டில் ருத்ராட்ச மோதிரம் அணிவதன் மூலம் வலிமை, தன்னம்பிக்கை கிடைக்கும். அசைவம் மீது வெறுப்பும், சைவத்துக்குரிய நாட்டமும் ஏற்படும். தப்புத் தப்பாகப் பேசுவது குறைந்து, கட்டுப்பாடும் தீர்க்கமான முடிவெடுக்கும் மனநிலையும் கிடைக்கப் பெறுவார்கள்.


அவரது ரசிகர்கள் மத்தியில் அதற்கு பெரும் `கிராக்கி' ஏற்பட்டது. அதே போல் ருத்ராட்ச மோதிரத்தையும் அவரது ரசிகர்கள் அணிய முயன்றால், அதில் சிக்கல் இருக்கிறது'' என்று புதுகுண்டைத் தூக்கிப் போட்டவர்,


``ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிவதால் எப்படி பலன்கள் கிடைக்குமோ அதுபோல, சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிந்தால், அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் இளைய வயதினர் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்
மேற் சொன்ன வரிகள் தான் ஷெல்வி சொன்னதாக ரிப்போர்டரில் வந்தது..

முதலில் இந்த ருத்ராட்சம் அணிவதால், சுயகட்டுப்படு வரும்,தீர்க்கமான முடிவெடுப்பார்கள் என்று சொல்லி இருக்கிறார்...ஆக, இந்த ருத்ராட்சத்துக்கு மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளாக தான் அர்த்தம்?
பின்பு என்ன நினைத்தரோ,சுயகட்டுப்பாட் இல்லாதவர்கள் இதை அணிந்தால் விளைவுகளை அனுபவிக்க வேண்டும், அதானால் கட்டுப்பாடு இல்லாதவர்கள் இதை அனியகூடாது என்று கூறீயுள்ளார்,

ருத்ராட்ச மோதிரத்துக்கு அந்த சக்தி இருக்கிறதென்றால், யார் அணிந்தாலும் அவர்களை கட்டுப்பாடுடையவர்களாக அது மாற்றிவிடவேண்டுமே..

ரிப்போர்ட்டரும், ஜீ வீயும், நற்கீரனும் எழுதுவது போல், ரஜினி அரசியலுக்கு வர முடிவெடுத்துவிட்டார், கடைசி நேரத்தில் அவர் நலம் விரும்பிகளின் சொல்லால் மனம் மாறவும் வாய்ப்புள்ளது என்று முடிப்பார்கள் ஏனெனில் ரஜினி அரசியல் என்று சொன்னால், நாங்கள் துல்லியமாக செய்தி கொடுத்தோம் என்று செய்தி போடவும், அதே நேரம் ரஜினி வரவில்லை என்றாலும், அதான் அப்போவே சொன்னோம்ல மனசு மாற வாய்ப்புள்ளதுனு அப்படினு தங்கள் வசதிக்கு போட்டுகலாம்..

ருத்ராட்சம் விஷயத்திலும், பொதுவாகவே ஜோதிடத்திலும் கடைப்பிடிக்கபடும் உத்தியும் இதுவே தானோ??

எது எப்படியோ, ருத்ராட்ச வியாபாரிகள் இப்போதே நிமிர்ந்து விட்டார்கள் கல்லா கட்ட.. இந்த ருத்ராட்சத்திற்கு இந்த பலன், மதுரையில் 11 ம் தேதி, நெல்லையில் 14, சிதம்பரத்தில் 15, கடலூரின் 20 , பொள்ளாச்சியில் 22 என்று ராஜ் மற்றும் விஜய் தொலைகாட்சியில் வரிசை கட்டி வர ஆரம்ப்பித்துவிடுவார்கள் ருத்ராட்ச சோதிடர்கள்
நன்றி - குமுதம் ரிபோர்ட்டர்

8 கருத்துக்கள்:

Anonymous said...

what the hell you are going to do when rajini wears does something. you are a useless sperm always writing negative contents. better change your blog name as kurattai arangam. get lost

வீ. எம் said...

hello mr nameless anony and a useful sperm,

what is the negative comment here ? can you tell me.

also, you do not have any rights to ask me change my blog name and for your information, it is not your business.

you have to get lost from my blog area and not me sir !

Sanjeev said...

எனக்கொரு ருத்ராட்சம் ப்ளீஸ்..

வீ. எம் said...

Thanks Sanjeev, your ruthratcham is reserved :)

குப்பன்_யாஹூ said...

இதை கண்டித்து ஏன் வீரமணியோ திராவிடர் கழ்கமோ போராட்டம் நடத்த வில்லை?

பெரியார் விருது பெற்ற கலைஞர் என்ன கவிதை எழுத போகிறார் முரசொலியில் இந்த மூடப்பழஅக்கத்தை பற்றி?குப்பன்_யாஹூ

வீ. எம் said...

குப்பன் சார் வருகைக்கு நன்றி. 2 நாள் டைம் கொடுங்கோ.. அவங்க ரெண்டு பேரு கிட்டேயும் கேட்டுட்டு வந்து சொல்றேன்.. :)

யாரயோ இடிக்கற மாதிரி தெரியுது

வெங்கட்ராமன் said...

பதிவாளர் ஐயா வீ.எம் அவர்களே,
இப்படியா ஒருவரை நாயை அடித்தார்போல் அடிப்பது. அவர் பாவமல்லவா? ஏதோ அறியாமல் குறிப்பெழுதிவிட்டார்.
ஒரு எழுத்தாளருக்கு இப்படியா கோபம் வருவது?
சற்றே குறைத்துக்கொள்ளுங்கள்.

வெங்கட்ராமன் said...

ருத்ராட்ஷத்தைப்பற்றிய மேலும் விளக்கங்களுக்கு http://omnamashivaayaa.blogspot.com/ வலைத்தளத்தைப் பாருங்கள்