ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு...

ராகவேந்திரா மன்டபத்தில் ரஜினி தன் ரசிகர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்..

ரசிகர்கள் - எதிர்கால திட்டம்?
ரஜினி - ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டும். என் எதிர்கால திட்டம் எந்திரன் படம்.

ரசிகன் - தொடர்ந்து சந்திப்பீர்களா?
ரஜினி - ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, ராகவேந்திரா மன்டபத்தில் புது தொலைப்பேசி எண்கள் வைக்கப்படும், நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.. முக்கிய விஷயங்களில் நானே பேசுவேன்.

ரசிகன் - எந்திரன்?
ரஜினி - இந்தியாவிலேயே சிறந்த படமாக வரும்.

ரசிகன் - ரசிகர்கள் அந்தஸ்து உயர்த்தப்படுமா??
ரஜினி - அந்தஸ்தை நாம் தேடி போக கூடாது, அதுவாக நம்மை தேடி வரவேண்டும்

ரசிகன் - மக்களுக்கு மன்றங்கள் மூலம் நலதிட்ட உதவிகள்?
ரஜினி - பணம், ஜனம் ஒன்று சேர்ந்தால் அரசியல் வந்துவிடும்.. எனக்கு தோண்றும் நல்ல காரியங்களை நான் தனிப்பட்ட முறையில் செய்வேன். உங்களுக்கு தோண்றும் நல்ல காரியத்தை நீங்கள் செய்யுங்கள்

ரசிகன் - நீங்கள் தொண்டு செய்வது நிறுத்தப்பட்டது??
ரஜினி - இலவச திருமணங்களை 30 மாவடத்திலும் நடத்தினேன். தொடர்ந்து தேவை இல்லை என்பதால் நிறுத்தினேன். தேவை என்றால் மீண்டும் செய்வேன்.

ரசிகன் - குசேலன்? 25 கோடி சம்பளம்?

ரஜினி - அதில் எனக்கு கவுரவ தோற்றம் என்று பூஜையிலேயே சொன்னேன். 25 கோடி வாங்கவில்லை

ரசிகன் - நடிப்பு தொடருமா?
ரஜினி - புகழுக்காக, பணத்துக்காக இல்லாது, நல்ல கேரக்டர் இருந்தால் நடிப்பேன்

ரசிகன் - சத்யநாரயனா செய்ல்பாடு தீவிரமாக இல்லை..
ரஜினி - அவருக்கு உடல் நலமில்லை.

ரசிகன் - ராகவேந்திரா, அருனாச்சலேச்வர், பாபாஜி என மாறுவது?
ரஜினி - மதம் மாறுதல் தான் தப்பு, அது கூட அவரவர் விருப்பம்... நான் செய்வது ஆண்மீக விருத்திக்கு..

ரசிகன் - உங்களை குழப்பவாதி என்று பத்திரிக்கைகள்..
ரஜினி - உண்மையாக இருக்கலாம், சில நேரங்களில் நான் செய்வது அப்படித்தான் உள்ள்து.. நான் நினைத்ததை பேசுகிறேன். அவரவர் அவர் கோணத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்.. எது சரி என படுகிறதோ அதை தான் பேசுவேன், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

ரசிகன் - ஒக்கனேக்கல் பிரச்சனை?
ரஜினி - மன்னிப்பு கேட்கவில்லை.. திரைப்படத்துக்கு எதிராக இருப்பவரை உதைக்கவேண்டும் என்றேன்.. அது கர்நாடக மக்களுக்கு எதிராக என எடுத்துக்கொண்டார்கள்.. நான் தெளிவாக பேசாததால் இருக்கலாம். வருத்தம் மட்டும் தெரிவித்தேன்.. மன்னிப்பு இல்லை

ரசிகன் - 30 ஆண்டுகளாக ஆசியாவில் பெரிய சக்தியாக உள்ளீர்கள்
ரஜினி - என் ரசிகர்களாகிய உங்களால்

ரசிகன் - பிறந்தநாள் சந்திப்பு?
ரஜினி - சந்திக்க மாட்டேன். ஏன் பிறந்தேன் என்று யோசிக்கவே அந்த நாளை பயன்படுத்துகிறேன்.. தனிமையில் யோசிக்க விரும்புகிறேன்.. குடும்பதாரும் தொந்தரவு செய்வதில்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள்.. தாய் தந்தையை பாருங்கள்.. கடமையை செய்யுங்கள், பலனை எதிர்பாருங்கள்..

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே அரசியலில் வருவது நடக்கலாம்.தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் என்ன நினைக்கிறார் என்று

ரஜினி இந்த முடிவில் இருக்கிறார், அந்த முடிவில் இருக்கிறார் என்று ஏற்கனவே அனைத்து புலனாய்வு பத்திரிக்கைகளும் ஏதேதோ எழுதியது.. அப்படி எதுவும் நடக்கவில்லை..

இப்போது இந்த பதில்களுக்கு மூக்கு, கண் வைத்து, எப்படியெல்லாம் எழுத போகிறார்கள் தெரியல.. கொஞ்ச நாளைக்கு பத்திரிக்கைகள் காட்டில் மழை ec

8 கருத்துக்கள்:

Simple Sundar said...

வாவ்.. சூப்பர்..
கேள்விகளுக்கு தலைவர் கொடுத்திருக்கும் பதில் செம கலக்கல்..
கருப்பு ப.. வி கா வளர்ப்பு தமிழன் பற்றி யாராவது கேட்டிருக்கலாம்

Anonymous said...

super star is always the only and only super star in world.

Rajini Ragavan

வாக்காளன் said...

தெளிவான தீர்கமான பதிலகள் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்..

satheeskannan said...

not at all useful

வீ. எம் said...

Simple Sundar, Anony Fajini Ragavan , Vaakkalan, Sathees Kannan - Thanks for your visit and comments

Anonymous said...

super star is always the only and only super star in world.


-repeeettteeeeee

ilamaran said...

Vazhakkamana Ularal Pechu...Nee ennathanya Solla Varra..Variviya..Varamattiya..Varallanna Un Pechu Kaaa....

ilamaran said...

வழக்கமான உளறல் பேச்சு ...நீ என்னதான்யா சொல்ல வர்ற ?!!!..வரிவியா ..வரமாட்டியா. .வரல்லைன்னா உன் பேச்சு கா....