இவர்கள் சந்தித்துக்கொண்டால்

இன்று அலுவலகத்தில் சாப்பாடு நேரத்தில் டிபன் பாக்ஸ் தொறந்தவுடனே ஷாக்.. ஷாக் மட்டுமில்லே , கொஞ்சம் அதிர்ச்சி கலந்த அதிசயமும் கூட..

அட ஆமாங்க உண்மையாதான் சொல்றேன்.. என் டிபன் பாக்ஸ்ல மனக்க மனக்க தக்காளி சாதம்.. அவ்ளோ "காஸ்ட்லியான சாப்பாடு" பாத்தவுடனே யாருக்கு தான் அதிர்ச்சி, அதிசயம், சந்தோஷம் எல்லாம் வராது சொல்லுங்க...

பாருங்க , நம்ம நிலமை எப்படி ஆயிடுச்சுனு.. தக்காளி சாதத்துக்கு இவ்ளோ பில்டப் கொடுக்கற அளவுக்கு விலைவாசி எகிறிப்போச்சு...

கோயம்பேடை பார்க்குறதுக்கே குடுத்து வெச்சிருக்கனும்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியம் இல்லை..

சரி சரி. தக்காளி சாதம் சாப்பிடுகிட்டே, ரஜினி பத்தி 2 பதிவு போட்டு ஒப்பேத்தியாச்சு.. அடுத்த என்னத்த போடலாமுனு யோசிச்சப்ப வந்த யோசனை தான் இந்த பதிவு..

================================================================டிஸ்கி - தலைவர்கள் படத்துக்கும், இந்த பதிவுக்கும் , காய்கறி கமெண்ட்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை இல்லை இல்லை