சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திப்பு - ரசிகர்கள் கேட்க மறந்த கேள்விகள்

8 மனிக்கு வரப்போகும் தலைவருக்காக கூட்டத்தை கட்டிப்போட, 6:00 மனியிலிருந்தே தலைவர் இதோ வருகிறார், வருகிறார், வந்து விட்டார் என்று மைக்கில் அலறுவதை கேட்டிருக்கிறோம்..அதே போல, சத்தியநாரயனா அவர்கள், இதோ ரஜினி அவர்கள் உங்களை சந்திக்கப்போகிறார் என்று இழுத்து , இழுத்து ஒரு வழியாக சந்திப்பு நேற்று முடிவடைந்தது..


ரஜினி , ரஜினி சந்திப்பு குறித்தும் தங்களின் ஊகங்கள், கற்பனை கலந்து உண்மை செய்திகளை போல லாவகமாக கொடுத்து கல்லா கட்டிய பத்திரிக்கைகள் இதோ இப்போது அடுத்த கட்டத்துக்கும் தயாரகிவிட்டது
வித்தியாசமான சந்திப்பு தான்.. ரசிகர்கள் கேள்விகளை ஒரு பேப்பரில் எழுதிக்கொடுக்க, அதை ஒருவர் படிக்க, ரஜினி தனக்கேயுரிய பானியில் பதில் அளிக்க, இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி வெகு சுவாரசியமாகவே இருந்த்து..

ரஜினியின் மேனரிசம், ஸ்டைல், ட்ரேட் மார்க் சிரிப்பு, முடி கோதுதல், சில கேள்விகளுக்கு பட்டென்று பதில், சிலவற்றிக்கு நீண்ட யோசனை.. ஒரு வரி பதில், ஒரு சொல் பதில், நீண்ட விளக்கம் என்று மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி ரஜினியும் , அவரின் ரசிகர்களும் எதிர்ப்பார்த்ததை விட சூப்பராகவே வந்திருந்தது..

30 வருடமாக நடிப்பு தொழிலில் இருக்கும் நடிகரிடம் நியாயமாக அவரின் சினிமா பற்றிய கேள்விகள் அதிகம் இருந்திருக்கவேண்டும்.. ஏன் ரசிகர்கள் அது பற்றி கேட்கவில்லை என்றே புரியவில்லை

எங்களுக்கு என்ன அங்கீகாரம் , மாற்றி மாற்றி கடவுள் .. கிருஷ்னகிரி நினைவில்லம் போன்ற உப்புசப்பில்லா கேள்விகள் சில இருந்தாலும், பல கேள்விகள் நல்ல கேள்விகளாகவே பட்டது, எனினும் கேட்கவேண்டிய முக்கியமான சில கேள்விகளை கேட்காமல் விட்டு விட்டார்களே எனத்தோண்றியது.. (ரசிகர்கள் இதை நிச்சயம் கேட்டிருக்கவே மாட்டர்கள் )
1. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களுடன் முத்து, சிவாஜி, சந்திரமுகி போன்ற படங்களை ஒப்பிட்டு பார்த்து , தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் உங்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று என்றைக்காவது நினைத்ததுன்டா தலைவா?

2. நீங்கள் எப்போதும் சொல்லுவது குடும்பத்தை பாருங்கள் என்று.ஆனால் உங்களின் பல வெறித்தனமான ரசிகர்கள் இன்றும் தங்கள் குடும்பத்தை விட உங்களுக்கே முன்னுரிமை கொடுத்து, தங்கள் பட ரிலிஸ் அன்று செய்கின்ற ஊதாரி (குடும்பம் மிக வறுமையான நிலையில் உள்ளபோதும்) நீங்கள் அறிவீர்களா?

3. ஏழை குழந்தைகள் ஒரு வேளை பாலுக்கு இல்லாமல் தவியாய் தவிக்கும் போது உங்களின் ரசிகர்களாகிய நாங்கள் உங்களின் கட் அவுட்டுக்கு லிட்டர் கணக்கில் பாலாபிஷேகம் ( இப்போது பீரும் சேர்ந்து) செய்து எங்களின் பக்தியை காண்பிப்பது பற்றிய உங்கள் கருத்து?

4. கருப்பு பணம் ஒழிப்பு பற்றி நீங்கள் நடித்த சிவாஜி அருமை. உங்களின் சம்பளம் என்ன என்பது உங்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அது அனைத்தும் வெள்ளையில் தான் வாங்குகிறீர்களா என்று உங்கள் பக்தர்களாகிய நாங்கள் தெரிந்துக்கொள்ளலாமா?

5. உங்களின் சொந்த பகையை தீர்த்துக்கொள்ள நீஙகள் எங்களை பயன்படுத்தியதாக செய்திகள் வந்ததே , அது உண்மையா? (ஜெயலலிதாவுடன் உரசலில் தி மு க - த மா க கூட்டணிக்கு அதரவு வாய்ஸ், பா ம க வுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகும் அதே போல் எதிரணிக்கு)

6. கடவுளாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்ற நிலையில் இருந்து தைரியலட்சுமியாக ட்ரிபிள் ப்ரோமஷன் கொடுத்தது பற்றி உங்கள் கருத்து

7. உங்களுகாக நாங்கள் அடிப்பட்டதை அடுத்து, சரியான நேரத்தில் பதிலடி தருவேன் என்று ஆவேச பேட்டி கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்தினீர்கள்.. இன்னும் அந்த சரியான நேரம் வந்ததா , இல்லையா??

8. ஐஸ்வர்யாவுடன் நீங்கள் நடித்தே விடவேன்டும் என துடித்ததாக செய்தி வந்தது, பின் ஒரு கட்டத்தில் இந்த பழம் புளிக்கும் என்று நினைத்து " ஐஸ்வர்யாவின் கனவுகள் விட்டாய் , சீ என்ற சொல்லில் சுட்டாய்." என்ற பாடலுக்கு வாயசைத்து, இப்போது இயந்திரனில் அவருடன் ஜோடி சேர்ந்தது வரை , எது உண்மை என தெரியாமல் குழம்பும் எங்களுக்கு வெளிப்படையான பதில்? (குசேலனின் சொன்னது போல இங்கேயும், அது கவிஞரின் வரிகள் நான் வெறும் வாய் அசைத்தேன் என்று சொல்வீர்களா தலைவா?)

9. இன்னும் எத்துனை வருடம் 20 வயது கதாநாயகியுடன் மரத்தை சுற்றி டூயட் பாடி , நகைச்சுவை நடிகருடன் இனைந்து இரட்டை அர்த்த வசனம் பேசி எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்த போகின்றீர்? திறமை இருந்தும் எந்த வித்தியாசமான வேடமேற்று நடிக்காததன் காரணம்?

10. சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் நீங்கள், இங்கேயே சம்பாதித்த நீங்கள், அனைத்து விஷயங்களுக்கும் வாய்ஸ் கொடுக்கும் நீங்கள்.. கருப்பு பணம் பற்றி பேசிய நீங்கள், உங்கள் படத்துக்கான முதல் 10 நாள் டிக்கெட் விலையென்ன , அது எந்த முறையில் விற்கப்படுகிறது என்று அறிவீர்களா? அதை வாங்குவதில் உங்களின் தினக்கூலி ஏழை ரசிகனும் ஒருவன் என தெரியுமா? இப்போதாவது நாங்கள உங்கள் கவனத்துக்கு அதை எடுத்துவந்தால், அதற்கு எதிராக வாய்ஸ் வருமா?

11. 1996 ல் "கோட்டை" விட்ட நாம், இப்போது முயன்றால் எத்துனை இடங்கள் பிடிக்கமுடியும், ஆட்சி அமைத்திட முடியுமா?
12. உங்களை வாழும் மகாத்மா என்று நாங்கள் பேனர் வைக்கிறோம்.. உங்கள் உண்ணாவிரதத்தின் போது உங்கள் மேடை எதிரே அப்படி ஒரு பேனர் பளிச்சென்று வைத்தோம்.. பார்த்திருப்பீர்கள்.. "வாழும் மகாத்மா" என்பதை "உளமாற" ஒப்புகொள்கின்றீர்களா?

இன்னும் கேள்விகள் உள்ளது தலைவா.. இப்போதைக்கு இதற்கு பதில் சொல்லுங்கள்.. மற்ற கேள்விகளை இன்னும் 3 வருடம் கழித்து (அடுத்த படம் ரிலீஸின் போது) நடக்கபோகும் உங்களின் ரசிகர் சந்திப்பில் கேட்கிறோம்..

8 கருத்துக்கள்:

Unknown said...

அட்றா சக்கை அட்றா சக்கை.. இப்படியல்லவோ கேள்விகள் கேட்டிருக்க்வேணும்.. அருமைங்க..

Unknown said...

very good questions VM

tommoy said...

நச் கேள்விகள், யாராவது கேட்டிருந்தால நல்லா இரூந்து இருக்கும்..

வீ. எம் said...

திரு சஞ்சீவ், திரு முத்து , திரு முரளி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

hemamalini said...

நடுநிலையான கேள்விகள்.. !

வாக்காளன் said...

very good questions.. but answers???

வீ. எம் said...

thanks hemamalini and vaakkalan.. thanks for your visit

Anonymous said...

அந்த கருப்பு பன்னி , வளர்ப்பு தமிழன் வி க பற்றி மட்டும் எதுவும் கேட்காதீங்க.. எல்லோருக்கும் நல்லவராய் இருக்கும் எங்கள் தலைவரை மட்டும் உஙக இஷ்டத்துக்கு கேளுங்க..

ரஜினி ராம்கி தாசன்