தந்தி அடிக்கலாம் வாங்க..

"தந்தி போராட்டம்" இப்போது தமிழகத்தில் பிரபலம் அடைந்துள்ளது. கலைஞரின் தந்தி போராட்ட அறிவிப்பு தொடர்ந்து மத்திய அரசு கூட இலங்கை தூதரகத்துக்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது..

இதன் தொடர்ச்சியாக வேறு யாருக்கெல்லாம் தந்தி அடிக்கலாம்..??

தந்தி # 1 - மின்சார தேவையை அதிகரிக்கும் முயற்சியை மேற்க்கொண்டு தமிழக மக்களை இருளில் இருந்து காப்பாற்றக்கோரி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணண் ஆற்க்காட்டருக்கு ஒரு ஷாக் தந்தி.

தந்தி #2 - பணவீக்கத்தை கட்டுபடுத்தி , விலைவாசி அரக்கனிடமிருந்து மக்களை காத்திடும் முயற்சி மேற்க்கொண்டிடுக என்று கேட்டு பொருளாதார மேதை மதிப்பிற்குறிய சிவகங்கை சிங்கம் சிதம்பரத்துக்கு ஒரு சிறப்பு தந்தி.

தந்தி # 3 எப்போது உங்கள் பின்னாலேயே வால் பிடித்து வரவேண்டும் என்று விரும்பும் உங்கள் உடன்பிறப்பு ஆற்க்காட்டாருக்கு அமைச்சர் பதவியில் இருந்து விடை கொடுத்து, அவரை திரு சன்முகநாதன் அவர்கள் இடத்தில் அமர வைத்து , சன்முகநாதன் அவர்களை மின்சாரத்துறை அமைச்சராக்கிட. ஆவன செய்திட வேண்டும் என கேட்டு முதலவர் கலைஞருக்கு ஒரு விண்ணப்ப தந்தி.

தந்தி # 4 முதல்வரின் மகன் என்ற காரணத்துக்காக மட்டுமே, மதுரையில் தனி ராஜாங்கம் நடத்தி, ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் சேர்த்திடும் அஞ்சாநெஞ்சன் அவர்களின் போக்கை கொஞ்சமேனும் அடக்கி வைக்க கோரி தந்தை என்ற முறையில் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள் தந்தி.

தந்தி # 5 காதலில் விழுந்தேன் பிரச்சனையை சமூக பிரச்சனையாக சித்தரித்து ஒப்பாரி வைக்கும் சன் டீவி சகோதரர்களுக்கு, கடந்த காலங்களில் , அரசின் ஆதரவு மற்றூம் அமைச்சர் வீட்டு தொலைகாட்சி என்ற ஓரே காரணத்துக்காக என்னவெல்லாம் ஆட்டம் போட்டார்கள், எத்துனை இருட்டடிப்பு, ஊடகத்துறையில் உள்ள சக மனிதர்களை அழித்திட என்னவெல்லாம் செய்தனர் என்பதை பட்டியலிட்டு ஒரு மெகா சைஸ் சுயசரிதை தந்தி.

தந்தி # 6 தனக்கென ஒரு கட்சி இருக்கிறது , அது தனிக்கட்சி.
அ தி மு க வின் கிளைக்கட்சியல்ல என்பதை நினைவூட்டி அண்ணன் வைகோவிற்கு ஒரு நினைவூட்டல் தந்தி.

தந்தி # 7 "உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப புண்ணாக்கிட்டாங்கப்பா" என்று ஒற்றை வரியில் வைகைபுயல் வடிவேல் அண்ணாச்சிக்கு ஒரு அவசர தந்தி.

தந்தி # 8 பத்திரிக்கை செய்திகளையும், கருத்துக்கணிப்புகளையும் பார்த்து , 2011 ல் நான் தான் முதல்வர் என்ற கற்பனையில் , மிதமிஞ்சிய மிதப்பில் செயல்பட்டு உள்ளதையும் கோட்டை விடவேண்டாம் என்று , கடந்த கால அரசியல் நிகழ்வுகளை பட்டியல் இட்டு , கருப்பு தங்கம் கேப்டனுக்கு ஒரு புள்ளியல் தந்தி.

தந்தி # 9 தமிழக காங்கிரஸ் தலைவர் என்னும் பதவியை உன்மையாகவே தலைவர் பதவி என்று நினைத்து, வாய் கொடுத்து புண்ணாகிக்க்கொள்ளாமல், இருக்கும் வரை அனுபவித்துவிட்டு போகவும் என்று திரு "கோல்ட் மில்க்" தங்கபாலு அண்ணனுக்கு ஒரு அறிவுரை தந்தி.

தந்தி # 10 உங்களால் தான் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச போகிறது என்று இன்னமும் நம்பி, போயஸ் வீட்டிற்கும், ராகவேந்திரா மண்டபத்துக்கும் நடையாய் நடந்து சீரழிகிர ரசிகன் பட்டாளம் இன்னும் இருக்க்கிற வரை உங்கள் எந்திரனும் சரி,ஒரு வேளை 2015 வரும் உங்கள் சுந்தரனும் நிச்சயமாக உங்கள் கையை கடிக்கவே கடிக்காது என்று ஒரு சந்தோஷ தந்தி நம் சூப்பர் ஸ்டாருக்கு.

கோடிக்கணக்கில் குவியப்போகும் தந்திகளை பட்டுவாடா செய்ய வேண்டிய வசதிகள் செய்திட (அதை மட்டுமாவது) வேண்டும் என திரு ராசாவுக்கு ஒரு கடைசி தந்தி.

மக்கள்ஸ் - இன்னும் பலருக்கு தந்தி அனுப்பவேண்டும் என்று ஆசை, முதல் பத்தோடு நிறுத்திக்கொண்டு அடுத்த பதிவில் மற்றதை போடுகிறேன்.. நானே போடுகிறேன்.. அதற்குள் யாரும் எனக்கு நினைவூட்டல் தந்தி அனுப்பிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..

உங்கள் மனதிலும் உதிக்கும் தந்திகளையும், பெருநர்களையும் கருத்துப்பெட்டியில் சொல்லிவிட்டு போங்கள் நன்பர்களே.. பார்க்கலாம் யாருடையது சிறந்த தந்தி என்று.

நன்றி
வீ எம்

4 கருத்துக்கள்:

tommoy said...

Super Super Super

வாக்காளன் said...

நல்ல யோசனைகள்..

மருத்துவர் ஐயா, அம்மாவிற்கு தந்தி இல்லையா??

madhu said...

TELEGRAM 7 is really very funny.. LOL

வீ. எம் said...

சிவசிவணாண்டி, முரளி, வாக்காளன், வருகைக்கு மிக்க நன்றி