என்ன செய்ய போறீங்க சூப்பர் ஸ்டார் அவர்களே?
ஒகனேகலுக்கு சொந்தம் கொண்டாடிக்கொண்டு கர்நாடக கும்பல் ஒன்று தமிழர்களை அடித்தும், தமிழ் திரைப்படம் ஓடும் திரையரங்குகளை சூறையாடியும் வெறியாட்டம் போடுகிறது.
இதனை கண்டித்து தென்னிந்திய திரைப்பட சங்கம் வரும் வெள்ளியன்று கண்டன உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது.
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன செய்ய போகிறார்?
தமிழ் மன்னில் சோறு சாப்பிட்டவர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற நடிகர்களை விட ரஜினி என்ன செய்யபோகிறார் என்று எதிர்பார்ப்பதற்கு அவரின் ஸ்டார் வேல்யூ மட்டுமே காரணமில்லை. அதையும் தான்டி இருக்கும் காரணம் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?
பார்க்கலாம் என்ன செய்கிறார் என்று. அவரும் கலந்துக்கொண்டு தன் எதிர்ப்பை தெரிவிக்க போகிறாரா? அல்லது காவிரி விசயத்தில் நடந்தது போன்று தனியாக போராட்டம் செய்ய போகிறாரா ?
ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்த தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயல்பட போகிறாரா அல்லது பிறந்த மண்ணுக்கு ஆதரவாக வேறு ஏதாவதா? .. அல்லது இரண்டும் இல்லாமல் இரண்டு பேருக்கும் சமாதானம் போல ஒரு வழ வழா கொழ கொழா முடிவு எடுத்துவிடுவாரா??
உப்பிட்ட தமிழ் மன்னை நான் மறக்க மாட்டேன்.. வாழ்ந்தாலும் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்.... என்று வாயசைத்ததை இவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார் என்று நம்புவோம்..
எந்த பிரச்சனையென்றாலும், அங்கே ஒரு திரையரங்கம் தாக்கப்பட்டாலோ, அல்லது திரைப்படம் திரையிட தடையாகிறது என்றால் மட்டுமே பெரும்பான்மையான "தமிழகத்தில் பிறந்த" தமிழ் நடிகர்களுக்கு தமிழர் நலனில் அக்கரை வருகிறது.. இதுல ரஜினியை மட்டும் சொல்லி என்ன பன்றது :)
8 கருத்துக்கள்:
அன்னிக்குன்னு பார்த்து பரபரப்பா எங்காவது ஒரு சூட்டிங்ல வெளியூர்ல இருப்பார்... வரமுடியாப் போயிடும் இது தெரியாதா??
ஆனா, பார்க்கலாம் எத்தனை நாட்களுக்குத்தான் கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கிறது... என்னைக்காவது அந்த பூனை வெளியில வந்துதானே ஆகணும்.
என்ன பண்ணுவாரா? கிழிஞ்சுது. காவேரி பிரச்சனைக்காக பாரதிராஜா நடத்தின உண்ணா விரதத்தில் கலந்துகொள்ளாமல் இமயமலை ஏறிய திரைப்பட சாமியார்.
தமிழன் அடிவாங்கினா அவருக்கு என்ன?
தமிழன் முதுகில அவர் செய்யும் சவாரி நல்லா இருந்தால் போதும்.
தமிழன் இளிச்ச வாயனாக இருக்கும் வரை ரஜினி சுப்பர் ஸ்டார்தான்.
புள்ளிராஜா
>> எந்த பிரச்சனையென்றாலும், அங்கே ஒரு திரையரங்கம் தாக்கப்பட்டாலோ, அல்லது திரைப்படம் திரையிட தடைவந்தாலோ தான் நம் பெரும்பான்மையான தமிழகத்தில் பிறந்த, தமிழ் நடிகர்களுக்கு தமிழர் நலனில் அக்கரை வருகிறது..இதுல ரஜினியை சொல்லி என்ன பன்றது <<
very true..
good one sir..
//இரண்டு பேருக்கும் சமாதானம் போல//
இப்படி ஏதாவது செஞ்சு ஒகேனக்கல் திட்டத்தை முன்னெடுத்து செல்லவும், கர்நாடகா வாழ் தமிழருக்கு பாதுகாப்பு கிடைக்கவும் உதவுவது.. ச்சும்மா உண்ணாவிரதம் இருப்பதை விட மேலானது..அப்டீங்கறது என்னோட கருத்து
பார்ப்போம் சூப்பர் ஸ்டார் என்ன செய்றாருன்னு..
வருகைக்கு நன்றி தெகா. புள்ளிராஜா, யாத்ரீகன், அனானி , புபட்டியன்
தெகா - வருவேன்னு சொல்லியிருக்காரு.. வந்தா நல்லது.
புள்ளி - சூப்பர் ஸ்டார் மேல செம கோவம் போல இருக்கு :)
யாத் - ஆமாங்க.. எல்லா விசயத்திலயும் யோசித்து பார்த்தா, இந்த சினிமாகரவுக இப்படித்தான் இருக்கங்க.. தனக்கு வந்தா மட்டும் தான் தலைவலி மாதிரி.
புபட் - இரண்டு பேருக்கு சமாதானம் இல்லை.. அப்படி இருந்தா பரவாயில்லையே.. இவரு வழ வழா கொழ கொழா நு தானே இருக்காரு... என்ன பன்றது
முதலில் இந்தக் கண்டனம் திரையுலகின் பிர்ச்சனையை முன்வைத்து நட்ப்பது. இதில் அவர் கலந்து கொள்வதில் எந்த சங்கடமும் இருக்காது. மக்களின் பிரச்சனைக்காக திரையுலகினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என நினைக்காதீர்கள். அதை அவர்களே மறுத்துவிட்டார்கள். பின்னர் கூடி முடிவெடுத்துதான் மக்களுக்காக குரல் கொடுப்பாங்களாம்.
மக்கள் பிர்ச்சனைக்கு திரையரங்குகளை ஏன் தாக்குகிறார்கள் என்பதுதான் கேள்வி. தமிழ் திரையுலகினரே தமிழ் மக்கள் பிரச்சனையயும் தங்கள் பிரச்சனையையும் பிரித்துப் பார்க்கும்போது ரஜினிக்கு என்ன வந்தது?
அவர் கலந்துகொள்வதில் எந்த புரச்சனையும் லேது.
வருகைக்கு நன்றி அனானி, நீங்கள் சொல்வது சரி, இந்த போராட்டம் தங்களின் திரைத்துறைக்கு பாதிப்பு வருகிறதே என்று நடத்தப்படுவதாக தெரிகிறது. அதையே என் கடைசி சில வரிகளில் சொல்லியுள்ளேன்.
பொதுவாக, சினிமாத்துறையில் 20 % பேரே உண்மையான இன் உணர்வோடு , அக்கரையோடு இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டிருப்பர், 40% பேர் தங்கள் வியாபாரம் பாதிக்கிறதே என்ற அக்கரையிலும், மற்ற 40% ஏதோ கூப்பிட்டார்கள், வந்தோம் போனோம் என்று வந்திருப்பார்கள்.
சிலர் 11 மனிக்கு மேல் ஏதோ டூர் போவது போல் வந்ததும், 2 மனிக்கு கிளம்பிப்போனது இந்த வகை தான்.
Post a Comment