சேப்பாக்கத்தில் கூடி கலைந்தது ஒரு கூட்டம்.
ஒரு நாள் சுற்றுலா மாதிரி , கலையாத மேக்கப் போட்டு, சென்னை சேப்பாக்கத்தில் வந்து சில மனி நேரம் இருந்துவிட்டு சென்றது ஒரு கூட்டம்.
ஒகனேகல் பிரச்சனையில் தங்களின் திரைப்படங்கள் தடுக்கப்படுவதாலும், வியாபாரம் பாதிக்கபடுவதாலும் பொங்கியெழுந்து உண்ணாவிரத போராட்டம் அறிவித்தது தமிழ் திரையுலகம். அந்த உண்ணாவிரதம் பல கூத்துக்களுடன் இனிதே நடந்து முடிந்தது.
இந்த விவகாரத்தின் திவிரம் , இந்த திட்டத்தின் உண்மை நிலவரம் எல்லாம் தெரியாமலே, ஏதோ கூப்பிட்டார்கள் வந்தேன் என்ற ரீதியில் வந்தவர்களே அதிகம் என நினைக்கிறேன். அதிலும் உண்ணாவிரதம் என்பது என்ன என்று தெரியாமல் வந்த கூட்டம் மிக அதிகம்.
பிரச்சனை பற்றிய அக்கரை இல்லாமல் தங்களின் திரையுலக நட்சத்திரங்களை பார்க்க வந்து விசிலடித்து , ஆரவாரம் செய்த நம் பொது ஜனத்தை என்னவென்று சொல்லுவது? எப்போது தான் மாறப்போகிறார்கள் இந்த செல்லுலாய்ட் சாமிகளின் பக்தர்கள்?
உண்மையில் சொல்லப்ப்போனால் 15% திரையுலகினர் தவிர்த்து மற்ற அனைவரும், ஒன்று, இங்கே வராவிட்டால் தங்களுக்கு பட வாய்ப்பு குறைந்துவிடுமோ என்ற நிர்பந்தத்தில் வந்தவர்கள், மற்றும் ஏதோ கூப்பிடுறாங்க, கடமையே என்று வந்தவர்களும் தான் 85%.
10:00 மனிக்கு வந்து 11:00 மனிக்கு சென்றவர்களும், வேகவேகமாக வந்து கேமராவில் தலை காட்டிவிட்டு , அடுத்த 10 நிமிடத்தில் காணாமல் போனவர்களும் மிக அதிகம். நல்ல உண்ணாவிரதம் இது.
சிலரெல்லாம், வீட்டில் சமையல் செய்ய சொல்லிவிட்டு, சமையில் வேலை முடியும் முன்பு வந்துவிட்டு , வேகமாக திரும்பிப்போய் .. இப்படி தங்களை மிகவும் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தது செம காமெடி.
இவர்களை விட செம காமெடியான கூட்டம் ஒன்று இருந்தது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், இந்தியா வல்லரசாக வேண்டும், நம்மை பார்த்து மற்ற நாடுகள் நடுங்கவேண்டும் என்று பேசியோர் ஒரு ரகம், அதைவிட மோசமாக, விஜயகுமார் போன்ற சீனியர்கள் பேசிய பேச்சும்,. இந்த மேடையில் வந்து உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை வானுயர புகழ்ந்து பேசி, தங்கள் சுயலாபத்துக்கு அடிக்கல் போட்டது, தங்களின் சுயபுராணத்தை தம்பட்டம் அடித்தது, என்று பல ரமக். இவர்களெல்லாம் எந்த வகையென்று தெரியவில்லை.
இவர்கள் எல்லாம் வரவில்லை என்று யார் அழுதது? இப்படி வந்ததற்கு வராமல் வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்திருக்கலாம்.
விஷயத்தின் தீவிரம் புரிந்து, திட்டம் பற்றி தெரிந்து, ஏன் இந்த உண்ணாவிரதம் என தெரிந்து, உணர்வோடு வந்து கலந்துக்கொண்டு, தங்கள் உண்ர்வை வெளிப்படுத்தி பேசிய திரை துறை சார்ந்த அந்த வெகு சிலர் பாராட்டுக்குறியவர்கள். அவர்கள் மட்டுமே உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருக்கலாம், தேவையற்ற கூட்டத்தை தவிர்த்துவிட்டு.
மொத்தத்தில், வழக்கம் போல, கூடிக்கலைந்திருக்கிறது ஒரு கூட்டம்., சிலரைத்தவிர்த்து. நல்ல வேலை இங்கும் குத்தாட்டம் போட்டு கலெக்ஷன் பார்க்கவில்லை. அந்த விதத்தில் நல்லவங்கப்பா அவங்க எல்லாம்..
4 கருத்துக்கள்:
சரியாச் சொன்னீர்கள்..
இதற்கென்றே அமேரிக்காவிலிருந்து ஒருவர் வந்து பேசினாறே ஆகா.. அற்புதம்.. துத் தேறி.. இவனுகள் வராமலே இருந்திருக்கலாம்..
வீ.எம்,
தேவையான பதிவு ! மிகச் சரியான கருத்துகள் !!!
இவர்கள் இப்படி அடித்த ஸ்டண்டால் பிரச்சினை தீவிரமாகுமே அன்றி, பயன் எதுவும் இல்லை :( தங்கள் நடிப்பு வேலையை பார்த்துக் கொண்டு கம்முனு இருக்கலாம் தானே !!!
எ.அ.பாலா
well written VM, i agree to your points
அருமையா சொல்லிருக்கீங்க!
Post a Comment