என்ன செய்ய போறீங்க சூப்பர் ஸ்டார் அவர்களே?
ஒகனேகலுக்கு சொந்தம் கொண்டாடிக்கொண்டு கர்நாடக கும்பல் ஒன்று தமிழர்களை அடித்தும், தமிழ் திரைப்படம் ஓடும் திரையரங்குகளை சூறையாடியும் வெறியாட்டம் போடுகிறது.
இதனை கண்டித்து தென்னிந்திய திரைப்பட சங்கம் வரும் வெள்ளியன்று கண்டன உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது.
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன செய்ய போகிறார்?
தமிழ் மன்னில் சோறு சாப்பிட்டவர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற நடிகர்களை விட ரஜினி என்ன செய்யபோகிறார் என்று எதிர்பார்ப்பதற்கு அவரின் ஸ்டார் வேல்யூ மட்டுமே காரணமில்லை. அதையும் தான்டி இருக்கும் காரணம் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?
பார்க்கலாம் என்ன செய்கிறார் என்று. அவரும் கலந்துக்கொண்டு தன் எதிர்ப்பை தெரிவிக்க போகிறாரா? அல்லது காவிரி விசயத்தில் நடந்தது போன்று தனியாக போராட்டம் செய்ய போகிறாரா ?
ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்த தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயல்பட போகிறாரா அல்லது பிறந்த மண்ணுக்கு ஆதரவாக வேறு ஏதாவதா? .. அல்லது இரண்டும் இல்லாமல் இரண்டு பேருக்கும் சமாதானம் போல ஒரு வழ வழா கொழ கொழா முடிவு எடுத்துவிடுவாரா??
உப்பிட்ட தமிழ் மன்னை நான் மறக்க மாட்டேன்.. வாழ்ந்தாலும் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்.... என்று வாயசைத்ததை இவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார் என்று நம்புவோம்..
எந்த பிரச்சனையென்றாலும், அங்கே ஒரு திரையரங்கம் தாக்கப்பட்டாலோ, அல்லது திரைப்படம் திரையிட தடையாகிறது என்றால் மட்டுமே பெரும்பான்மையான "தமிழகத்தில் பிறந்த" தமிழ் நடிகர்களுக்கு தமிழர் நலனில் அக்கரை வருகிறது.. இதுல ரஜினியை மட்டும் சொல்லி என்ன பன்றது :)