தசாவதாரம் - ஜாக்கி வருகை - துக்ளக் விழா - மோடி வருகை - வலைப்பதிவர் பார்வைகள்

தசாவதாரம் - ஜாக்கி வருகை - துக்ளக் விழா - மோடி வருகை - வலைப்பதிவர் பார்வைகள் .

திரு டோண்டு அவர்களின் பதிவில் இருந்து ஒரு பகுதி கீழே:

நன்றி திரு டோண்டு ராகவன் சார்,

//ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜாக்கி சான் படங்களுக்கு இந்தியாவில் விநியோகஸ்தர். ஆகவே ஜாக்கி சானின் பார்வை கோணத்தில் ரவிச்சந்திரன் முக்கியமானவர். அவர் அழைக்கப்பட்டார், வந்தார், சென்றார். அவ்வளவே. இதில் சம்பந்தப்பட்ட எல்லொருக்குமே - ஜாக்கிசான் உட்பட - லாபம். இதில் என்ன பிரச்சினை? தசாவதாரம் படத்துக்கு நல்ல விளம்பரம்.//


இந்துத்வா அடிப்படையில், சோ வும் மோடியும் நெருங்கிய நன்பர்கள், ஆர் எஸ் எஸ் கூட்டாளிகள். ஆகவே சோவின் பார்வையில் மோடி முக்கியமானவர், மோடியின் பார்வையில் சோ முக்கியமானவர். இவர் பாசத்தோடு அழைத்தார், அவரும் நேசத்துடன் வந்து சேர்ந்தார். அவ்வளவே, இதில் என்ன பிரச்சனை. அவர்கள் வந்ததில், துக்ளக் பத்திரிக்கை, இந்துத்வா கோஷ்டிக்கு கூடுதல் விளம்பரம்.. இதற்கு ஏன் அனைவரும் அலட்டிக்கொள்ளவேண்டும்?


நாம் ஏன் மெனக்கெட்டு , 32 பக்க குறிப்பு எடுத்து , 3 பகுதிகளாக பதிவு போட்டு, அவர் மரண வியாபாரியா இல்லையா என்று சன்டை போட்டு அடித்துக்கொள்ளவேண்டும்.

அவர் வந்தார் போனார், அறுசுவை உணவு தேவைப்பட்டது, உடனே அம்மா வீட்டுக்கு போய் , அம்மா கையால் அறுசுவை உணவருந்தினார், வயிரு நிறைந்தது.. சந்தோஷமாக தன் மாநிலம் திரும்பி சென்றார். முடிந்துவிட்டது..

இங்கேயுள்ள பத்திரிக்கைகள் தான் அவர் வருகையை பயன்படுத்தி, இத்தனை அயிட்டம், கூட்டு பொரியல் முதல், வத்தல் ஊறுகாய் வரை பக்கம் பக்கமாக எழுதி கல்லா கட்டியது,

வலைப்பதிவர்கள் தங்கள் பங்குக்கு மெனகெட்டு செல் போன் கூட எடுத்து செல்லாமல், அந்த கூட்டத்துக்கு சென்று , கஷ்டப்பட்டு சப்பனமெல்லாம் போட்டு உட்கார்ந்து, அங்கே கூட்டம் அப்படி, இப்படி என்று புளங்காகிதம் அடைந்து, பதிவு போட்டு, கடன் வாங்கி படமெல்லாம் போட்டு HIT ரேட் எகிறவைத்துகொண்டனர்..


மொத்தத்தில் தசாவதாரம் பட கேசட் விழாவிற்கு ஜாக்கிசான் வந்தது எப்படி ஜஸ்ட் லைக் தட் ஒரு நிகழ்வோ அது போலவே துக்ளக் விழாவிற்கு திரு நரேந்திர மோடி வந்ததும். இரண்டுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை...


ஆனால் சில பதிவர்கள் தான் , அடா அடா என்ன ஒரு கூட்டம் , என்ன ஒரு ஒழுங்கு, அவரின் பேச்சு என்று மோடி வருகைக்கு பில்டப் கொடுப்பதும், என்ன பெரிய விஷயமிது , ஜாக்கி வந்தார் , போனார் .. அவர் விருப்பத்துக்கு தண்ணிர் குடித்தார், இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றும் எழுதி டென்ஷன் ஆகிறார்கள்.. கலைஞர், கமல்... என்று அதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம்.. :) யாமறியோம் பராபரமே

11 கருத்துக்கள்:

muthu said...

எங்கேயோ, எதோ உள்குத்து மாதிரி இருக்கே... Anyway, Good Catch :)

Tharuthalai said...

அப்பாலிக்கா காண்டு கஜேந்திரன் வேற போட்டிக்கு சுண்டக் கஞ்சி சரக்கடிச்சாரு.


------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

TBCD said...

கேடின்னா (KD) தெரியும் - Known Dacoit

மோடின்னா(MODI) என்னா..?

வீ. எம் said...

ரொம்ப ரொம்ப சிம்பிள்..
KD - Known Decoit

MODI - Merchant Of Death, India
:)

Anonymous said...

Hello VM,Why are such a third rate XXXXXXXXXXX... and a mean dravidian tamil swine Give up this typical dravidian fanaticism and try to become a decent human being, you XXXX.

வீ. எம் said...

பெயர் கூட சொல்ல தைரியம் இல்லாத, கேடுகெட்ட அனானியே.. என் அனைத்து பதிவிலும் வந்து நீ எடுக்கும் வாந்தியை எடுத்துக்கொள்.. கவலையில்லை.. ! சந்தோஷமா? ஓடிப்போ இழிப்பிறவியே!

dondu(#11168674346665545885) said...

//வலைப்பதிவர்கள் தங்கள் பங்குக்கு மெனகெட்டு செல்போன் கூட எடுத்து செல்லாமல், அந்த கூட்டத்துக்கு சென்று , கஷ்டப்பட்டு சப்பணமெல்லாம் போட்டு உட்கார்ந்து, அங்கே கூட்டம் அப்படி, இப்படி என்று புளங்காகிதம் அடைந்து, பதிவு போட்டு, கடன் வாங்கி படமெல்லாம் போட்டு HIT ரேட் எகிற வைத்து கொண்டனர்..//
செல்ஃபோன் எடுத்து செல்ல முடிந்தது. முதலிலேயே நல்ல வேளையாக போகவில்லை. மற்றப்படி சப்பணமெல்லாம் போட்டு அமர்ந்து குறிப்பெல்லாம் எடுத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. முக்கியமாக ஹிந்து நிருபரின் மகன் என்ற பெயரைக் காப்பாற்றி கொள்ள முடிந்தது.

//MODI - Merchant Of Death//

Yes, Modi is a merchant of death:

- to corruption,
- to terrorism,
- to nepotism,
- to official lethargy,
- to bureaucratic negligence,
- to poverty and ignorance,
- to the doctrine of despair

மேலும் சில வார்த்தைகள்: ஹிட் ரேட் எகிறியதோ இல்லையோ அந்த மூன்று பதிவுகளை படித்தவர்கள் பலரது பல்ஸ் ரேட் எகிறியது நிஜமே. அது குறித்து மிக்க மகிழ்ச்சி.

மேலும் மோடி வந்த மீட்டிங்கிற்கும் ஜாக்கி சான் வந்த விழாவுக்கும் பல ஆறு வித்தியாசங்கள் உண்டு. அதை தமிழகமே அறியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் ஒரு தகவல் பிழை உள்ளே எனது இப்பதிவுக்கான முந்தையப் பின்னூட்டத்தில் வந்து விட்டது.

செல்ஃபோன் எடுத்து செல்லவில்லை போலீஸ் அனுமதிக்காது என்று. ஆகவே நான் அதை எடுத்து சென்றதாக கூறியது தவறு. மீண்டும் மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அடிச்சான்யா ஆப்பு டோன்டுக்கு

Anonymous said...

//ஹிட் ரேட் எகிறியதோ இல்லையோ அந்த மூன்று பதிவுகளை படித்தவர்கள் பலரது பல்ஸ் ரேட் எகிறியது நிஜமே. அது குறித்து மிக்க மகிழ்ச்சி//

ஆகா!!! பதிவு எழுதுவதற்கு இப்படிப்பட்ட உயர்ந்த நோக்கம் முதலில் வேண்டும். இப்பேர்ப்பட்ட உயரிய நோக்கம் கொண்ட ஒரு பதிவரை எல்லோரும் வணங்கி அவர் அமெரிக்க சனாதிபதியாக (இதை விட பெரிசாக சொல்லத்தான் ஆசை. ஆனால் எனக்கு தெரிந்ததில் இதுதான் பெரிசு) வாழ்த்துவோம்.

//மன்னிக்கவும் ஒரு தகவல் பிழை உள்ளே எனது இப்பதிவுக்கான முந்தையப் பின்னூட்டத்தில் வந்து விட்டது. //

ரொம்ப கவலைப்பட இதில் ஒன்றுமில்லை. வரலாறு இதை பெரிசாக எடுத்துக்கொள்ளாது என்றே நம்புவோம். ஏனென்றால் வரலாறு எழுத்தின் உயரிய நோக்கத்தை பார்க்குமேயன்றி இதை பெரிசாக எடுத்துக்கொள்ளாது. இருந்தாலும் இந்த அதி முக்கிய விஷயத்தைப்பற்றி ஒரு இருபது பதிவாவது எழுதுவது மற்றவர்களுக்கு உவகை தரும்.

நன்றி

ஷைலஜா said...

கோபி
உங்க இந்தபதிவை சிரிப்புசரம்ல கோர்த்துட்டேன்!