ஒக்கனேக்கல் சுழலில் சிக்காத ஜெ.

ஒக்கனேக்கல் களேபரங்களில் , கருநாடகத்தில் அனைத்து தமிழர்களும், தமிழக வாழ் வேற்று மாநில மக்களும் நன்றாக வறுத்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

கலைஞர், ராமதாஸ், திருமா போன்ற வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழர்களும், ரஜினி போன்ற தமிழகத்தில் வாழ்ந்து வரும் மற்ற மாநிலத்தோரும், திரை பிரபலங்களும், ஒரு படி மேலே போய் மறைந்த முதல்வர் எம் ஜி ஆரும் அவர்களின் குறியில் இருந்து தப்பவில்லை. கடவுளின் கோயில்களில் கூட தமிழ் எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்படுகிறது..

மேலே சொன்னவர்களின் உருவப்படத்தை எரிப்பது, காலால் மிதிப்பதும், கிழிப்பது போன்று காட்டுமிராண்டித்தனம் நடந்த வண்ணம் உள்ளது..

இத்துனை களேபரங்களில் நடக்கும் போதும், தமிழகத்தின் தலைவர்களில் முக்கியமான ஒருவரும், 2 முறை முதல்வராக இருந்தவரும், தமிழ்த்தாய் என போஸ்டர் அடித்துப்போற்றப்பட்டவரும், ஒகனேக்கல் திட்டம் நிறைவேற வேண்டும் என்று குரல் கொடுத்த, கொடுப்பவரும், போராட்டம் நடத்திய கட்சியின் தலைவியுமான அம்மா ஜெ எப்படி எந்த விதமான எதிர்ப்புகளுக்கும் ஆளாகவில்லை?

எம் ஜி ஆரின் படம் மிதித்து உதைத்து அடித்து கொளூத்தப்பட்ட போதிலும், அவரின் அரசியல் வாரிசும், அவர் ஆரம்பித்த கட்சியின் தலைவியுமான செல்வி மட்டும் ஏன் எந்த விதமாக எதிர்ப்பிற்கும் ஆளாகவில்லை?

சும்மா சொல்லக்கூடாது அம்மாவிற்கு சாமர்த்தியம் அதிகம் தான்..

அம்மா மட்டுமில்ல, போராட்டம் நடத்திய வேறு சில தலைகளும் எந்த எதிர்ப்பும் இன்றி இருக்கின்றார்களே. சாமர்த்தியமா?? இல்லை இவர்கள்
எல்லாம் தமிழர் என்றே அவர்கள் நினைக்கவில்லையா?

ஒன்னுமே புரியல , விளக்கவும்

1 கருத்துக்கள்:

muthu said...

Super Question.. amma na summa va??