சிரிப்பு வருது - நக்கீரன், விகடன், குமுதம் கவனிக்க..

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் 61வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுதும் அதிமுகவினரால் கோலாகலமாக மொண்டாடப்படுகிறது.

ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர் , போஸ்டர், அம்மா-எம் ஜி ஆர் பாடல்கள், அண்ணதானம் என்று தமிழகம் திருவிழா கோலத்தில் களைகட்டியுள்ளது. அம்மாவிற்கு நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

ஒரு கட்சி தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், இதுவெல்லாம் சகஜம்தானே?? அதிலும் அ தி மு க தலைவியின் பிறந்தநாள் விழாவில் இதெல்லாம் இல்லாது இருந்தால் தானே அதிசயம்.. இதில் என்ன சிரிப்பு என்ற உங்கள் கேள்வி புரிகிறது.

உண்மையில் கொண்டாடங்களை பார்த்து சிரிப்பு வரவில்லை. குறிப்பாக ஒரு ப்ளெக்ஸ் பேனரை பார்த்து தான் சிரிப்போ சிரிப்பு.

கின்டியில் ஜி எஸ் டி சாலையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை கழகத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரின் வாசகம் தான் சிரிப்புக்கு காரணம்.

ஒரு பக்கம் எம் ஜி யார், நடுவில் மிகப்பெரிதாக ஜெயலலிதாவின் ஐந்து முகங்கள் கொண்ட பிரம்மாண்ட பேனரின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இலங்கை தமிழர் நலனுக்காக பாடுபடும் ஒரே தலைவி எங்கள் புரட்சிதலைவி அம்மாவின் 61 வது பிறந்தநாள் ... என்று போகிறது அந்த வாழ்த்து வாசகம்..

இலங்கை தமிழருக்கு ஆதரவாக அம்மா எப்படியெல்லாம் போராடுகிறார் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நன்றாக தெரியும்.

"ஈழத்தமிழர் என்று யாரும் இல்லை", "போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தான் செய்யும்", "இலங்கை ராணுவம் அப்பாவித்தமிழர்களை கொல்வது இல்லை" என்பது போன்ற அம்மாவின் அறிக்கைகள் மிகப்பிரபலம்.

ஆனாலும் இப்படி ஒரு பேனரை வைத்த அந்த தொண்டருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். ஒரு வேளை அவர் அம்மாவை நக்கலடிக்கிறாரோ?

அ தி மு கவினரே இதை படித்தால் சிரிக்கத்தான் செய்வார்கள். ஏன், அம்மாவே இதை படித்தால் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்..

ஜூ வி, குமுதம், நக்கீரன் நிருபர்கள் யாராவது இந்த பேனரை கவர் செய்து தங்கள் அடுத்த இதழில் ஒரு ஸ்டோரி எழுதலாம், அது கவர் ஸ்டோரியாகவும் இருக்கலாம்.. காமெடி ஸ்டோரியாகவும் இருக்கலாம்..

6 கருத்துக்கள்:

Anonymous said...

அதிமுக தொண்டர்கள் யாரும் அம்மாவின் பேச்சை கேட்பதில்லையா? அம்மா பிறந்த நாள் கொண்டாட்டமே தேவையில்லை என்று அறிக்கை விட்டார், தொண்டர்கள் அதை மதித்தாக தெரியவிலையே.

வீ. எம் said...

கருத்துக்கு நன்றி அனானியாரே, இது அனைத்துகட்சியிலும் நடக்கும் கூத்து தான்.. தலைமை வேண்டாம் என்று சொல்வதும் , தொன்டர்படை அதை நிராகரிப்பதும் :)

இங்கே காமெடி என்னவென்றால்.. இலங்கை தமிழருக்காக போராடும் புரட்சிதலைவியாம்.. !

Unknown said...

அதிலென்ன தவறு? புலிகளுக்கு ஜெயலலிதா ஆதரவு தரவில்லை, எதிர்க்கிறார் என்றார் உடனே அவர் இலங்கை தமிழருக்கு எதிர்ப்பு என்று அவதூறு கிளப்புவதா? புலிகளை ஒழித்துகட்டினால் , நிச்சயம் அமைதி திரும்பும் என்ற ஜெயலலிதாவின் கருத்து மிக்க சரியே.. ! இது அவரின் இலங்கை தமிழரின் மேல் கொண்ட அக்கரையில் சொன்னது தான்.

Anonymous said...

செய்தி: தூத்துக்குடி வரும் பிரணாப்புக்கு கறுப்புக்கொடி
கறுப்புக்கொடி வேண்டாம்,
பிரணாப்முகர்ஜியை விமானநிலையத்தில் இருந்து வெளில் வராதபடி,
விமானநிலயத்தின் முன்பு உண்ணாவிரதம் இருக்கவேண்டும்,
செய்வார்களா?
நடக்கும் என்று நம்புவேம், நடக்கும்
முத்து குமார் இருக்கிறான் அங்கே.......
அவன் கருத்தின் வலிமை தமிழ் இளைஞர்களை வழிநடத்தும்....
பிரணாப்முகர்ஜி விமானநிலையத்தில் தன் இருக்கவேண்டும்....
அது முத்து குமாரின் ஊர்.......
முத்து குமார் கருத்தின் வலிமை தமிழ் இளைஞர்களை வழிநடத்தும்....

Unknown said...

In the name of Youth and Students.. only the political parties are doing all these.. especially vaiko, thiruma, ramdass .. 80% of the students are back to their exams.. u need to know that .. !

politicians are using muthukumar for publicity since he is a youth.. how about the others who comitted suicide??? no politician remembered them

Anonymous said...

அறுபதாங்கல்யாணம் செய்து மாலை மாற்றி,
இப்போது 61 மாலைகள் மாற்றிக் காலில் விழுந்து வணங்குவதை ரசித்து,
இன்னும் என்னென்னெக் கூத்துகளோ!

மானங்கெட்டத் தமிழினம் கீழே தான் விழுகிற்தே தவிர எழுந்திருக்க வழியைக் காணோம்.
அதுவும் விழுந்த பள்ளத்திலேயே திருப்பித் திருப்பி விழலாமா?