Showing posts with label யானை. Show all posts
Showing posts with label யானை. Show all posts

மன்மோகன் சிங், லாலு பிரசாத், கருணாநிதி பதவி விலகவேண்டும் - ஜெ அதிரடி


கோவை மாவட்டத்தில் ரயில் மோதி 3 காட்டு யானைகள் பலியானதை தொடர்ந்து, தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா விடுக்கவிருக்கும் பரபரப்பான அறிக்கை நமது எம் ஜி யாரில் பனி புரியும் நம் நன்பர் ஒருவர் மூலம் நமக்கு கிடைத்தது.

நாளை இந்த அறிக்கை செய்தித்தாள்களில் பளிச்சிடும். ஆனால் வாசகர்களுக்கு எப்போதும் செய்திகளை முந்தித்தரும் உங்களின் ஒரே நாளிதழான தினச்சூடு இன்றே இந்த செய்தியை தருவதில் மகிழ்சி அடைகிறது.

இனி ஜெ வின் அறிக்கை.


அன்பிற்கினிய தமிழ் மக்களே, உங்கள் அன்புத்தோழியின் இரக்க குணம் பற்றீ நீங்கள் அறிவீர்கள். இந்த இரக்ககுணம் காரணமாகவே இரண்டு முறை முதலமைச்சர் பதவியை கருணாநிதிக்கு விட்டுக்கொடுத்ததை நான் இங்கே சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் வாயில்லா ஜீவன்களாம் பசுக்களின் மரணம் என்னை வாட்டியெடுத்த போது, என் கண்கள் இரத்த வெள்ளம் போல் காட்சியளித்ததும், என் மனம் சொல்லொன்னா துயர் அடைந்ததையும் இந்த தமிழ் நாடே கண்டு மனம் குமைந்து , இந்த மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கருணாநிதி ஆட்சி ஒழிந்திட சாபமிட்டது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பசுக்களின் மரண செய்தியால் நான் அடைந்த துயரத்தில் இருந்தே இன்னும் வெளிவராத நிலையில், இதோ இன்று காலையில் என் செவியில் விழுந்த ஒரு செய்தி என் இதயத்தில் கோடாரி கொண்டு வெட்டியது போல் உள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் ஏதுமறியா 3 யானைகள் ரயில் தண்டவாளத்தை கடந்து போகையில், ரயில் மோதி இறந்த செய்தி கேட்டு துயரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் பல் துலக்கவோ, காலை உணவு அருந்தவோ என் மனம் இடம் தராமல் படுத்த படுக்கையாக உடல் பலகீனப்பட்டு இருக்கும் இந்த நேரத்திலும், உங்களுக்காக குரல் கொடுத்திட என் அன்புக்கினிய அரசியல் ஆலோசகர் பொன்னையன் அவர்கள் தான் , நான் சொல்ல சொல்ல இந்த அறிக்கையை எழுதிகிறார் என்பதனை இங்கே தெரிவிப்பதன் மூலம், உங்கள் அன்புத் தாய், அருமை சகோதரி எம் ஜி ஆர் ஆல் வளர்க்கப்பட்டவருக்கு எந்தளவு மரியாதையும் முக்கியத்துவமும் தருகிறார் என நீங்கள் புரிந்துக்கொள்வீர் என நம்புகிறேன்.

அன்டேனியோ மெய்னோ வின் மேற்பார்வையில் நடைபெறும் மத்திய ஆட்சி மற்றும் கருணாநிதி தலைமையில் நடைப்பெறும் மைனாரிட்டி ஆட்சியில் வாயில்லா ஜீவன்கள் அடையும் வேதனைகளும் , சோதனைகளும் சொல்லில்லடங்கா.

சில நேரங்களில் கொடுங்கோல் ஆட்சி புரியும் கருணாநிதியின் ஆட்சியில் தங்களுக்கு நிம்மதியில்லை என்று உணர்ந்தே இந்த வாயில்லா ஜீவன்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கிறதோ என்று எண்ணத்தோண்றுகிறது.

யானைகள் வருவது கூட தெரியாமல் ரயிலை இயக்கிய அந்த ரயில் ஓட்டுனரை பார்த்தாலே , ரயில்வே துறையின் அலட்சிய போக்கு நமக்கு எளிதாக புலப்படும். இந்த அலட்சிய போக்கினை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காத ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத், இனையமைச்சர் வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலகிடவேண்டும்.

ஆண்டனியோ மெய்னோ சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்கிறேன்.

உங்கள் சகோதரியின் ஆட்சியில் யானைகள் எல்லாம் முதுமலையில் எப்படி பராமறிக்கப்பட்டது என்பதனை இங்கே நினைவுபடுத்திக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

என் ஆட்சியில் ஒரு சுண்டெலியாவது ரயிலில் சிக்கி இறந்திருக்குமா அல்லது தங்களுக்கு பாதுக்காப்பு இல்லையென உயிரை மாய்த்துக்கொண்டிருக்குமா என கருணாநிதியை பார்த்து கேட்கிறேன்.

அனைத்து வாயில்லா ஜீவன்களுக்கும் நான் சொல்லிக்கொள்(ல்)வது, கவலைபடாதீர்கள், விரைவில் உங்கள் அன்பு சகோதரியின் ஆட்சி தமிழகத்தில் அமையும், உங்களின் துயர் துடைக்கப்படும். அது வரையில் சற்று பொறுமை காத்து, உங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறன்

கழக கண்மனிகளே, இரத்தத்தின் இரத்தங்களே, படையென புறப்படுவீர் கோவை நோக்கி. மெய்னொ, லாலு, வேலு, மன்மோகன் , கருணாநிதி போன்ற ஜீவராசிகளை வதைக்கும் கூட்டத்தை எதிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களில் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவீர், ஆங்காங்கே சாலை மறியல், ரயில் மறியல் செய்வீர் , உங்கள் அன்னையின் ஆட்சி அமைய சபதமேற்பீர். நமக்கு ஆதரவளிக்க வரும் யானைகளையும், பசுக்களையும் நம்மோடு இனைத்து போராட்டத்தில் பங்கேற்க செய்வீர்.

நீங்கள் போராட்டம் செய்யும் பாதையில் வரும் கல்லூரி பேருந்தினை எதுவும் செய்திட வேண்டாம் என நான் சொன்னாலும், என் மீதுள்ள பாசத்தால் நீங்கள் அதை கேட்பீர்களா என எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன், எதுவும் செய்யாமல் இருக்க முயலுங்கள்.

கருணாநிதி ஆட்சி கலைக்கவேண்டும் ,
கருணாநிதி ஆட்சி கலைக்கவேண்டும் ,
கருணாநிதி ஆட்சி கலைக்கவேண்டும் ,

வாழ்க எம் ஜி ஆர் நாமம்.

அது என்னங்க இரயில்வே துறை தவறுக்கு கருணாநிதி ஆட்சி கலைக்கனும்னு , அதுவும் 3 தடவை கோர்ட் டவாலி மாதிரி என்று பொன்னையன் கேட்டதுக்கு, யோவ் , உனக்கு தேவையில்லாத கேள்வி, என் எல்லா அறிக்கையிலும் கருணாநிதி ஆட்சி கலையனும்னு ஒரு வரியாச்சும் இருக்கனும்... நீ சொல்றது மட்டும் எழுது இல்லை என்கிட்ட தகாத முறைல நட்ந்தேனு நாளைக்கு பேட்டி தருவேன்னு அம்மா எம் ஜி ஆர் விசுவாசி பொன்னையனுக்கு மரியாதை செய்ததாக கேள்வி.