விஜய் டிவி கடுப்பு நம்பர் 1 சீசன் 3.

இவங்க அலம்பல் தாங்கலயே சாமி.. என்ன கொடுமைடா இது.

விஜய் டீவியின் ஜோடி நம்பர் 1 மட்டுமே ரசிக்கும்படியாக இருந்தது, அதன் பின் நடத்தப்பட்ட ஜோ. நெ. 1 சீசன் 2 வில் பிருத்திவி, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இடையே நடந்த கூத்து மிக பிரபலம்.

அனைத்து தரப்பிலும், பத்திரிக்கைகளிலும் பரபரப்பாக பேசப்பட்டு அதுவே அந்த நிகழ்ச்சிக்கு ஒரு விளம்பரமாக அமைந்து TRP ரேட்டிங்கில் ஏற்றம் காண்பித்தது.

இயல்பாக நடந்தது என்றும், இல்லை திட்டமிட்ட நாடகம் என்றும், பிருத்திவியை ஓரம்கட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், சிம்பு , மற்ற போட்டியாளர்கள் சேர்ந்து கொடுத்த நெருக்கடி அது என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எப்படியோ, அனைத்து களேபரங்களுடன் நிகழ்ச்சி முடிந்து அடுத்த சீசன் 3 ஆரம்பானது சற்று ஆறுதல்.

சிம்பு மட்டுமன்றி மற்றொரு ஜட்ஜ் சங்கீதா, தொகுப்பாளினி டி.டி செய்கின்ற அலம்பல் தனிக்கதை.

இதோ மீண்டும் அதே போல ஒரு நாடகத்திற்கு அச்சாரம் போடப்படுகிறது.. கடந்த இரண்டு எபிசோடுகளில் ஜீவா மற்றும் அவருடன் நடனம் ஆடும் ஜோடி இருவருக்கும் பிரச்சனை. ஜீவா ஒத்துழைக்கவில்லை என அவர் வழக்கம் போல கண்ணீர் விட. இந்த வாரம் நடுவர் எஸ் ஜே சூர்யா தலையிட்டு ஜோடிகளை மாற்ற, வழக்கம் போல் விஜய் டீவி, சோக கீதம் , அதிர்ச்சி கீதம் வாசித்து, நான்கு பேர் அழுவதை காண்பித்து, குழு குழுவாக விவாதிப்பதை காண்பித்து, இறுதியில் ஜீவா நிக்ழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டார்..

தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல், தாங்கள் நடிக்கும் சீரியலில் செய்வது போலவே, இங்கும் மேடையில் ஓ வென ஒப்பாரி வைக்கும் இவர்கள் ஏன் போட்டிக்கு வர வேண்டும். அதிலும் 10 லட்சம் பரிசு என அறிவித்த பிறகு இது போன்ற ஒப்பாரி அதிகமாகிவிட்டது..

சீரியல் கில்லர்களே.. சாரி, சீரியல் நடிகர்களே, அங்கே மட்டும் நடியுங்கள் போதும்.

சென்ற முறை விளம்பரத்திற்கு கைகொடுத்த அதே யுக்தி இந்த முறையும் சற்று மாற்றம் செய்யப்படு கையாளப்படுகிறதோ என தோன்றுகிறது..
பங்கேற்ப்பாளர்கள் , நடுவர்கள் , நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என அனைவரும் ஓவராக உணர்ச்சிவயப்படுவது என்பது விஜய் டீவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமீபகாலமாக தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது..

நடன நிகழ்ச்சியின் விளம்பரத்தில் , நடனத்தை பிரதானமாக காட்டாமல் இது போன்ற உணர்ச்சிவயபட்ட காட்சிகள், பரபரப்பு விவாதங்களையே பிரதானமாக 30 நிமிடத்திற்கு ஒரு முறை காட்டுவது, விஜய் டீவி இது போன்ற சலசலப்பை தூண்டிவிட்டு, அதில் வியாபார குளிர் காய்வதாகவே தெரிகிறது.

ஏற்கனவே விஜய் டீ வி தன் நிகழ்ச்சியின் பங்கேற்ப்பாளர்கள் தோல்வியில் அழுவதை க்ளோசப்பில் , சோக இசையுடன் காட்டுதல், தொகுப்பாளினிகளின் ஆடைக்குறைப்பு போன்றவற்றால் நிகழ்ச்சியை ஓட்டுகிறது. இதில் இப்போது இது ஒரு புது ட்ரெண்ட்..

பொழுதுப்போக்கு நிகழ்ச்சியை, பொழுதுப்போக்கு அம்சங்களுடன் நடத்தாமல் , இப்படி உணர்ச்சித்தூண்டுதல் முறையில் நடத்தும் டரெண்ட் நல்லதல்ல என்பதை எப்போது அந்த தொலைக்காட்சி புரிந்துக்கொள்ளப்போகிறதோ??

நீங்க என்ன நினைக்கறீங்க, கருத்து சொல்லிட்டு போங்க

வீ எம்

20 கருத்துக்கள்:

வீ. எம் said...

TEST COMMENT

FunScribbler said...

நல்லா இருக்கு உங்க பதிவு! கொஞ்சம் ஓவராதான் போகுது. இங்க மட்டுமல்ல.. நடன போட்டிகள் மற்ற டீவிகளிலும் இதே கூத்துதான்!! என்ன பண்ன....

லக்கிலுக் said...

//நீங்க என்ன நினைக்கறீங்க, கருத்து சொல்லிட்டு போங்க
//

பெருசா சொல்லிக்க ஒண்ணும் இல்லீங்கோ!!!

Anonymous said...

இது மட்டுமல்ல, கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில், சினிமா கலைஞர்களை மிமிக்க்ரி செய்வது போய், சன் டீவியில் நடக்கும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை கிண்டலாக மிமிக்க்ரி செய்கிறார்கள் (இப்படி செய்வதன் மூலம் சன் டீவி கலைஞர்களை சினிமா நடிகர்கள் அளவிற்கு தூக்கிவிட்டார்கள்). அதிலும் ஒரு பெண்மணி(மற்ற நடுவர்களையும்) சிரிப்பதையே சக்கிகமுடியாத படி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

pudugaithendral said...

சரியா சொன்னீங்க.

சனிக்கிழமை எபிசோட் ஒரு கொடுமை. ஒரே ஃபீலிங்கா கொட்டுறாங்க.

சரியா ஆடதெரியாதவங்களை டான்ச் ஆடச் சொல்வானே, அப்புரம் அது சொத்தை, இது சொத்தைன்னு ஓரங்கட்டுவானேன்.

இதெல்லாம் இவங்களுக்கு யார் சொல்லி புரிய வைக்கிறது.

இந்த ஜட்ஜாவர்றவங்கல்லாம் போட்டுகிட்டு வர்ற டிரெஸுக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு.

பொது இடங்களில் கண்டபடி உடுத்தறதா ஒரு நடிகை மேல சர்ச்சை வந்தது. இவங்களை யாரு கேக்க.

சகாதேவன் said...

டிவியில் நான் விரும்பிப்பார்த்த சீரியல்கள் பரமார்த்த குருவும், பெண் என்ற சீரியல்கள்தான்.
vaஇரண்டாவது சுகாசினி டைரக் ஷன் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு கதையும் ஒரு பெண் படும் கஷ்டங்களும் எப்படி சமாளிக்கிறாள் என்று பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் சொல்லப்பட்டன.
இப்போது டிவியில் நான் பார்ப்பது பழைய ப்ளாக் அண்ட் வொய்ட் தமிழ் படங்கள்தான்.
சகாதேவன்

lakshmishankar said...

Yes! vara vara evanga thollai thanga mudiyala sami. Ella TVlayum alalukku copy cat velai pannikittu thiryuranga. TV paarthalae kaandu aagiruvom.

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்மாகனி, லக்கி, அனானி , புதுகைத்தென்றல், சகாதேவன், லக்ஷ்மிசங்கர்.

Anonymous said...

நிதர்சனமான விமர்சனம். வேலை நிமித்தமாக தர்ப்பொழுது செர்மானியத்தில் (அட ஜெர்மனி தாங்க). தமிழ் நிகழ்ச்சி பார்கனும்கிறதுக்காக, கஷ்டபட்டு பார்த்த.. இவுங்க அலுட்டாச்சியம் தாங்க முடியலை. அதுவும் அந்த D.D group .. கஷ்டம்... எங்கதான் புடிச்சான்களோ...சும்மா கத்து கத்துன்னு கதுறாங்க... அழ தெரிஞ்சா போதும் பரிசு உங்களுக்குத்தான்..

நித்யன் said...

பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி விஜய் டிவிதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

விஜய் டிவியில் மட்டும் இந்த நிகழ்ச்சிகள் வந்திருந்தால் நாம் இப்படி வெறுப்படையும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அமைந்திருக்காது என்று எண்ணுகிறேன். வித்தியாசம் காட்டுகிறேன் பேர்வழி என்று ஆளாளுக்கு நம்மை மண்டை காய வைக்கிறார்கள். லக்கிலுக் பாஷையில் சொன்னால் டவுசர் கிழிகிறது... தாவு தீர்கிறது...

வந்தியத்தேவன் said...

நடுவர்கள் படவா கோபிக்கு சப்போர்ட் பண்ணுவதுபோல் இருக்கின்றது. கடந்தவார நிக்ழ்ச்சியில் ஜீவாவோ, ப்ரஜினோ ஒழுங்காக ஆடவில்லை ஆனாலும் இவர்கள் இருவரின் ஜோடிகளும் நேர்த்தியாக ஆடினார்கள். இதெல்லாம் திட்டமிட்ட நாடகம் என்பது தெரிகின்றது. இறுதியாக படவா கோபிக்கு பரிசளிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள். மானாட மயிலாட எவ்வளவோ பரவாயில்லை அதில் இப்படியான நடிப்புகளும் பில்டப்புகளும் இல்லை. டிடி யை அடக்க யாரும் இல்லையா? சன்னின் மஸ்தானா மஸ்தானா சொதப்பல்.

Anonymous said...

கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டமோ??

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி, நித்யகுமாரன், வந்தியத்தேவன், விஜய் டீ டிவி

வீ. எம் said...

//இப்போது டிவியில் நான் பார்ப்பது பழைய ப்ளாக் அண்ட் வொய்ட் தமிழ் படங்கள்தான்//

நிம்மதியான வேலை , எந்த பிரச்சனையும் இல்லை.

//TV பார்தலே கான்டு ஆகிருவோம்.//
லக்கி மாதிரி சொல்லனும்னா டவுசர் கிழிஞ்சு, தாவு தீர்ந்து.....

//அந்த D.D group .. கஷ்டம்... //
கரெக்ட், அந்த நிகழ்ச்சியின் உச்சகட்ட கடுப்பு அந்த டி டி பன்ற காட்டுக்கத்தல் ஓவர் ஆக்டிங் தான்..

//விஜய் டிவியில் மட்டும் இந்த நிகழ்ச்சிகள் வந்திருந்தால் நாம் இப்படி வெறுப்படையும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அமைந்திருக்காது என்று எண்ணுகிறேன்//

நித்யகுமாரன் அப்படி இல்லைங்க. நீங்க சொல்றது ஒரளவு உண்மை. மத்த சானல் காப்பியடிச்சதுல விஜய் தான் கடுப்பாகி வித்தியாசம் காமிக்கறேனு கடுப்படிக்கறாங்க..

//மஸ்தானா மஸ்த்தானா சொதப்பல்//
சரியா சொன்னீங்க வந்தியத்தேவன்.. மஸ்தானா மஸ்த்தானா செம சொதப்பல்.. மானாட மயிலாட பரவாயில்லை.. இந்த மாதிரி கடுப்பு,போட்டியார் பொறாமை, ஓவர் ரியாக்ஷன் இல்லை.. என்ன ஜார்ஜை எல்லோரும் கொஞ்சம் ஓவரா புகழராங்க .. எதுக்குனு தெரியல... :)

வாக்காளன் said...

money is the only motto for these channels. especially vijay tv is using people's feelings to grab popularity and money

madhu said...

நச் விமர்சனம் வீ எம்.

வீ. எம் said...

Thanks Madhu

நிஜமா நல்லவன் said...

TRP தரவரிசைக்காக இவங்க நடத்துற கூத்து சகிக்க முடியல. தொலைக்காட்சி ஊடகங்களின் ஆரோக்கியம் எப்படி இருக்குன்னா சிங்கார சென்னைக்கு ரொம்ப ரொம்ப அழகு சேர்க்கிற நதி மாதிரி இருக்கு.

Sridhar V said...

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ரியாலிட்டி ஷோக்கள் வகையறா... போட்டி மட்டுமல்லாமல், போட்டிக்கு தயாராவது, behdind-the-scenes நிகழ்வுகள் என்று கலந்து கட்டி ஒளிபரப்புவார்கள். என்ன... எல்லாரும் இப்ப புட்டேஜ்க்கு ஆசைப்பட்டு ஓவரா எமோஷனலாவறதுதான் கொஞ்சம் எரிச்சலா இருக்கும்.

இதில் டிவியின் மறைமுக அஜென்டா எதுவும் இல்லைன்னுதான் தோணுது.

வீ. எம் said...

Sridhar , வருகைக்கு நன்றி.

உங்கள் மற்ற கருத்தோடு ஒத்துப்போகிறேன்.

//டிவியின் மறைமுக அஜென்டா //
பரபரப்பு ஏற்படுத்தி டி ஆர் பி ரேட்டிங்க எகிற வைக்கும் சீப்பான மறைமுக அஜென்டா இது..