மன்மோகன் சிங், லாலு பிரசாத், கருணாநிதி பதவி விலகவேண்டும் - ஜெ அதிரடி


கோவை மாவட்டத்தில் ரயில் மோதி 3 காட்டு யானைகள் பலியானதை தொடர்ந்து, தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா விடுக்கவிருக்கும் பரபரப்பான அறிக்கை நமது எம் ஜி யாரில் பனி புரியும் நம் நன்பர் ஒருவர் மூலம் நமக்கு கிடைத்தது.

நாளை இந்த அறிக்கை செய்தித்தாள்களில் பளிச்சிடும். ஆனால் வாசகர்களுக்கு எப்போதும் செய்திகளை முந்தித்தரும் உங்களின் ஒரே நாளிதழான தினச்சூடு இன்றே இந்த செய்தியை தருவதில் மகிழ்சி அடைகிறது.

இனி ஜெ வின் அறிக்கை.


அன்பிற்கினிய தமிழ் மக்களே, உங்கள் அன்புத்தோழியின் இரக்க குணம் பற்றீ நீங்கள் அறிவீர்கள். இந்த இரக்ககுணம் காரணமாகவே இரண்டு முறை முதலமைச்சர் பதவியை கருணாநிதிக்கு விட்டுக்கொடுத்ததை நான் இங்கே சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் வாயில்லா ஜீவன்களாம் பசுக்களின் மரணம் என்னை வாட்டியெடுத்த போது, என் கண்கள் இரத்த வெள்ளம் போல் காட்சியளித்ததும், என் மனம் சொல்லொன்னா துயர் அடைந்ததையும் இந்த தமிழ் நாடே கண்டு மனம் குமைந்து , இந்த மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கருணாநிதி ஆட்சி ஒழிந்திட சாபமிட்டது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பசுக்களின் மரண செய்தியால் நான் அடைந்த துயரத்தில் இருந்தே இன்னும் வெளிவராத நிலையில், இதோ இன்று காலையில் என் செவியில் விழுந்த ஒரு செய்தி என் இதயத்தில் கோடாரி கொண்டு வெட்டியது போல் உள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் ஏதுமறியா 3 யானைகள் ரயில் தண்டவாளத்தை கடந்து போகையில், ரயில் மோதி இறந்த செய்தி கேட்டு துயரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் பல் துலக்கவோ, காலை உணவு அருந்தவோ என் மனம் இடம் தராமல் படுத்த படுக்கையாக உடல் பலகீனப்பட்டு இருக்கும் இந்த நேரத்திலும், உங்களுக்காக குரல் கொடுத்திட என் அன்புக்கினிய அரசியல் ஆலோசகர் பொன்னையன் அவர்கள் தான் , நான் சொல்ல சொல்ல இந்த அறிக்கையை எழுதிகிறார் என்பதனை இங்கே தெரிவிப்பதன் மூலம், உங்கள் அன்புத் தாய், அருமை சகோதரி எம் ஜி ஆர் ஆல் வளர்க்கப்பட்டவருக்கு எந்தளவு மரியாதையும் முக்கியத்துவமும் தருகிறார் என நீங்கள் புரிந்துக்கொள்வீர் என நம்புகிறேன்.

அன்டேனியோ மெய்னோ வின் மேற்பார்வையில் நடைபெறும் மத்திய ஆட்சி மற்றும் கருணாநிதி தலைமையில் நடைப்பெறும் மைனாரிட்டி ஆட்சியில் வாயில்லா ஜீவன்கள் அடையும் வேதனைகளும் , சோதனைகளும் சொல்லில்லடங்கா.

சில நேரங்களில் கொடுங்கோல் ஆட்சி புரியும் கருணாநிதியின் ஆட்சியில் தங்களுக்கு நிம்மதியில்லை என்று உணர்ந்தே இந்த வாயில்லா ஜீவன்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கிறதோ என்று எண்ணத்தோண்றுகிறது.

யானைகள் வருவது கூட தெரியாமல் ரயிலை இயக்கிய அந்த ரயில் ஓட்டுனரை பார்த்தாலே , ரயில்வே துறையின் அலட்சிய போக்கு நமக்கு எளிதாக புலப்படும். இந்த அலட்சிய போக்கினை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காத ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத், இனையமைச்சர் வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலகிடவேண்டும்.

ஆண்டனியோ மெய்னோ சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்கிறேன்.

உங்கள் சகோதரியின் ஆட்சியில் யானைகள் எல்லாம் முதுமலையில் எப்படி பராமறிக்கப்பட்டது என்பதனை இங்கே நினைவுபடுத்திக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

என் ஆட்சியில் ஒரு சுண்டெலியாவது ரயிலில் சிக்கி இறந்திருக்குமா அல்லது தங்களுக்கு பாதுக்காப்பு இல்லையென உயிரை மாய்த்துக்கொண்டிருக்குமா என கருணாநிதியை பார்த்து கேட்கிறேன்.

அனைத்து வாயில்லா ஜீவன்களுக்கும் நான் சொல்லிக்கொள்(ல்)வது, கவலைபடாதீர்கள், விரைவில் உங்கள் அன்பு சகோதரியின் ஆட்சி தமிழகத்தில் அமையும், உங்களின் துயர் துடைக்கப்படும். அது வரையில் சற்று பொறுமை காத்து, உங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறன்

கழக கண்மனிகளே, இரத்தத்தின் இரத்தங்களே, படையென புறப்படுவீர் கோவை நோக்கி. மெய்னொ, லாலு, வேலு, மன்மோகன் , கருணாநிதி போன்ற ஜீவராசிகளை வதைக்கும் கூட்டத்தை எதிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களில் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவீர், ஆங்காங்கே சாலை மறியல், ரயில் மறியல் செய்வீர் , உங்கள் அன்னையின் ஆட்சி அமைய சபதமேற்பீர். நமக்கு ஆதரவளிக்க வரும் யானைகளையும், பசுக்களையும் நம்மோடு இனைத்து போராட்டத்தில் பங்கேற்க செய்வீர்.

நீங்கள் போராட்டம் செய்யும் பாதையில் வரும் கல்லூரி பேருந்தினை எதுவும் செய்திட வேண்டாம் என நான் சொன்னாலும், என் மீதுள்ள பாசத்தால் நீங்கள் அதை கேட்பீர்களா என எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன், எதுவும் செய்யாமல் இருக்க முயலுங்கள்.

கருணாநிதி ஆட்சி கலைக்கவேண்டும் ,
கருணாநிதி ஆட்சி கலைக்கவேண்டும் ,
கருணாநிதி ஆட்சி கலைக்கவேண்டும் ,

வாழ்க எம் ஜி ஆர் நாமம்.

அது என்னங்க இரயில்வே துறை தவறுக்கு கருணாநிதி ஆட்சி கலைக்கனும்னு , அதுவும் 3 தடவை கோர்ட் டவாலி மாதிரி என்று பொன்னையன் கேட்டதுக்கு, யோவ் , உனக்கு தேவையில்லாத கேள்வி, என் எல்லா அறிக்கையிலும் கருணாநிதி ஆட்சி கலையனும்னு ஒரு வரியாச்சும் இருக்கனும்... நீ சொல்றது மட்டும் எழுது இல்லை என்கிட்ட தகாத முறைல நட்ந்தேனு நாளைக்கு பேட்டி தருவேன்னு அம்மா எம் ஜி ஆர் விசுவாசி பொன்னையனுக்கு மரியாதை செய்ததாக கேள்வி.

21 கருத்துக்கள்:

ஜெகதீசன் said...

:))))

TBCD said...

என்னய்யா..எல்லாரும் இப்படி கிளம்பிட்டீங்க....

சுல்தான் said...

இப்படி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

//அனைத்து வாயில்லா ஜீவன்களுக்கும் நான் சொல்லிக்கொள்(ல்)வது, கவலைபடாதீர்கள், விரைவில் உங்கள் அன்பு சகோதரியின் ஆட்சி தமிழகத்தில் அமையும்இ உங்களின் துயர் துடைக்கப்படும்.//
இது அதிமுக வின் பழைய அமைச்சர்களைப் பார்த்து சொன்னது போல் தெரிகிறதே.

Anonymous said...

This is a duplicate statement, their is no "minority" word. there should be atleast one/10 words.

pulliraaja said...

தி.மு.க மைனாரிட்டி அரசு யானைகளின் அடிப்படை உரிமையை மீறிவிட்டது. ரயில் ஓட்டுனர் விடுதலைப்புலி என தகவல் கிடைத்துள்ளது. எனவே தி.மு.க அரசும் அமைச்சர் வேலுவும் டிஸ்மிஸ் செய்யப்பட‌ வேண்டும்.

அம்மாவின் கருணை வாழ்க!

புள்ளிராஜா.


பி.குறிப்பு: அம்மாவும் தோற்றத்தில் குட்டியானை போன்று இருப்பதால்தான் அம்மா யானைகளின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்துவதாக யாரும் எண்ணவேண்டியதில்லை. அம்மா வாழ்க.

Anonymous said...

though i feel sad for the yaanai, this is really funny.

adutha electionle yaana dhaan
vandhu o.ttu podanum.

உதயம் said...

அம்மாவை சொல்ல்னோ துயரத்தில் ஆற்றிய மத்திய ,மாநில அரசையும் , தமிழக அரசிற்கு தவறான பாடம் எடுக்கும் உதவி பேராசிரிரையும் வன்மையாக கண்டிக்கிறோம். பசு மாட்டுக்கும் ,யானைகளுக்கும் துரோகம் செய்யும் கருணாநிதி பசுமாட்டின் கணவன்மார்களான காளை மாட்டுக்காக ,சுப்ரீம் கோர்ட்டுவரை போய் போராடி, வெற்றி என்று அலங்கா நல்லூரில் அறிவிக்கிறார் , புலிகளுக்கும் புல்லை கொடுத்து தமிழகத்துக்கு வரவழைத்து வாயில்லா ஜீவன்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி தமிழகத்தில் தன் ஆட்சி தக்க வைத்து கொள்ள முயலும் கருணாநிதிக்கு தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அம்மா நாமம் வாழ்க.

வீ. எம் said...

நன்றி திரு ஜெகதீசன், திரு டி பி சி டி, திரு சுல்தான், அனானிஸ், புள்ளிராஜா & உதயம்

//என்னய்யா..எல்லாரும் இப்படி கிளம்பிட்டீங்க//
என்னங்க பன்றது, அம்மா இப்படி கிளம்ப வைக்கிறாங்க.

//இது அதிமுக வின் பழைய அமைச்சர்களைப் பார்த்து சொன்னது போல் தெரிகிறதே//

நச் கமென்ட்.. :)

//பாடம் எடுக்கும் உதவி பேராசிரிரையும் //
ரொம்ப தான் குசும்பு..

Maduari said...

இன்னும் கொஞ்ச நாளில் கொசு சாவறதுக்கெல்லாம் கூட அந்த அம்மா ஆட்சி கலைப்பு கேட்கும்

வீ. எம் said...

//though i feel sad for the yaanai, this is really funny.
//
yes Anony, you are right. I and hope all would feel sad for the incident but this lady will try to politicise each and every incident and will come up with unworthy statements just for cheap publicity.

பிரபு ராஜதுரை said...

good satire....keep it up!

வீ. எம் said...

Thanks for your visit and comments Prabhu Rajadurai

இலைக்காரன் said...

எங்கள் அம்மாவை நக்கல் செயும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன். வாழும் தெயவம், எங்கள் இதயதெய்வத்தை நக்கலடித்த கருணாநிதியின் அடிவருடிகள் ஒழிக. அம்மா வாழ்க

உதயம் said...

கோவையில் யானைகளின் கொலை பாதகத்தை கண்டித்து கும்பகோணத்தின் நகராட்சி முன்பு போராட்டம் அறிவித்த எங்கள் தங்க தாரகையே ,அம்மா உன் பொற்பாதம் வணங்குகிறோம்.
அம்மா நாமம் வாழ்க.

Pulliraja said...

"இலைக்காரன் said...

எங்கள் அம்மாவை நக்கல் செயும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன். "செவ்வாய்க் கிர‌க‌த்தில் உள்ள‌து அம்மாவின் சிலை. செவ்வாய்க் கிர‌க‌வாசிக‌ளே அம்மாவை தெய்வ‌மாக‌ நினைக்கின்றார்க‌ள். ந‌க்க‌ல் செய்ப‌வ‌ர்க‌ளை ம‌ன்னிப்போம். ம‌ற‌ப்போம்.

வாழ்க‌ அம்மா. வ‌ள‌ர்க‌ யானைத் தொண்டு.

புள்ளிராஜா

வீ. எம் said...

//செவ்வாய்க் கிர‌க‌த்தில் உள்ள‌து அம்மாவின் சிலை//

இது என்ன கூத்து???

வீ. எம் said...

Sorry Mr. Anony , I am not in a position to approve your comment due to the foul languague used.

madhankumar said...

அப்படி போடு

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Velmurugan said...

absolutely hilarious and who knows, such notes might be released by amma quite often during election eve.a good posting, worth enjoying.

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேல்முருகன்