"இதற்கு தான் லாயக்கு.."

கடந்த 3 ஆண்டுகளாய் க்ராபிக்ஸ் - வெப் டிஸைன்ராக வேலை செய்துக்கொண்டிருக்கிறேன்..ஒரு நாள் என் உயரதிகாரி என்னை அழைத்து செந்தில், ஒரு புது க்ராபிக்ஸ் ப்ரொஜக்ட்.. நீ , ராகவ் , சுந்தர், ராஜா.. 4 பேரும் சேர்ந்த்து 20 நாட்களில் முடிக்க வேண்டும் .. நீ தான் இன்-சார்ஜ் என்றார்....
மனதிற்க்குள் சந்தோஷம்.. முதன்முறையாக .. என்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.. சற்று நேரம் இறக்கை முளைத்து என் அலுவலகத்தின் மீது ஒரு வட்டம் அடித்து கீழே இறங்கினேன்.யெஸ் சார் .. ஐ வில் டூ இட் வெரி வெல் சார் .. அவர் தமிழில் சொன்னாலும், நான் ஆங்கிலத்தில் பதில் சொன்னேன்.. (பொறுப்பு கொடுத்தவுடன், தாய்மொழி போய் .. ஆங்கிலம் வந்து விட்டது பாருங்கள் !! ) .. நான் ஆங்கிலத்தில் பதில் சொன்னது அவர் ஈகோவை கிளறியதோ என்னவோ ... "தட் இஸ் த ஸ்பிரிட் .. கீப் இட் அப் .. ஆல் த பெஸ்ட்' என்றார்.
அடுத்த நாளே வேலை தொடங்கியது... இதுதான் ப்ரொஜக்ட், பிரபல தொலைகாட்சி நிறுவனம் ஒன்று, வருகிற பொங்கல் பண்டி¨க்கு ஒளிபரப்ப இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கிராமத்து மாட்டுப்பொங்கலை சித்தரிக்கும் வன்னம் 30 நிமிட க்ராபிக்ஸ் படம் தயாரித்து தர வேண்டும்.
க்ராபிக்ஸ்ஸில் பொங்கல் பானை, கரும்பு , தோரணம், கிராமம், கிராம மக்கள், குளம், கோயில், ஐய்யனார் சிலை, விவசாய நிலம், ரேக்ளா ரேஸ் (மாட்டு வன்டி பந்தயங்க..) ஜல்லி கட்டு ....
இதை தான் செய்து தரவேண்டும்...
மற்றவர்களுக்கு அவரவர் செய்யவேண்டியதை பிரித்து கொடுத்து விட்டு (அட !! நான் தாங்க ப்ரொஜக்ட் மானேஜர் இப்போ .. :) ) எனக்கென்று ஒரு சிறு பகுதியை (2 நிமிடம் மட்டும்) எடுத்துக்கொண்டு.. (எனக்கு ப்ரொஜக்ட் மானேஜ்மென்ட் வேலை நிறைய இருக்கும்ல.... !! ஹி ஹி ஹி ) .. செய்ய ஆரம்பித்தேன்..
ஒரு வழியாக, ப்ரொஜக்டை சரியாக 19 நாளில் முடித்து இதோ, மனேஜர் அறையில் கடைசி ரிவ்யூ...க்ராபிக்ஸ் காட்சிகள் நகர்ந்த்துக்கொண்டு இருக்கிறது... இதோ நான் செய்த அந்த 2 நிமிட காட்சி..ஒரு மாடு ஒன்று வயல் வெளியில் சுற்றி ரேக்ளா ரேஸ் நடக்கும் இடத்திற்க்கு வருகிறது.... அந்த மாட்டை ஓட்டி வரும் ஒரு க்ராபிக்ஸ் சிறுவன்..
அந்த 2 நிமிட காட்சி முடிந்தவுடனேயே , அனைவரும் பலமாக கை தட்டினார்கள்.... மிக மிக அருமையாக இருப்பதாக ஏகபட்ட பாராட்டு...இந்த 3 ஆண்டுகளிலேயே முதல் முறையாக மிக அருமையாக செய்துள்ளாய்... வெரி குட்... கீப் இட் அப்.. என்று மானேஜர் பாராட்டிய போது உச்சி குளிர்ந்த்து போனேன்..
படிக்கும் காலத்தில் அடிக்கடி அப்பா சொல்லுவார்.. "நீ மாடு மேய்க்க தாண்டா லாயக்கு....." ஏனோ அந்த வாக்கியம் மனக்கண் முன் வந்து போனது...... இருக்கும் இடத்தையும் மறந்து சிரித்தேன்................... அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்த்தது புரிந்தது...............
நன்றி..

அடுத்த அரட்டையில் சந்திக்கும் வரை,

அன்புடன்

வீ. எம்



2 கருத்துக்கள்:

Anonymous said...

good one mr V.m , i read and laughed a lot.
all are nice postings you have done.

ragu

Anonymous said...

HI V.M

Nallaa irukku intha " itharkku thaan laayakku". It is simple and superb. But - just a suggestion - u may discribe more with some cute incidents in between, so that will add more attraction to your story.

Good. Write more.
M. Padmapriya