ரசிகர் மன்றங்கள் - ஒரு பார்வை !

.....மழை பெய்தால் வளர்கின்ற காளான் போல், இன்று எங்கு பார்த்தாலும் திரைப்பட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள்.. ஒரு படத்தில் நடித்து , அதுவும் சரியாக ஒடாத நடிகருக்கு கூட ரசிகர் மன்றம் இருப்பதை பார்க்கின்ற போது வேடிக்கையாக தான் உள்ளது.

தெருவுக்கு தெரு ரசிகர் மன்ற பலகைகளை பார்க்கும் போது, சில நடிகர்களுக்கு, ரசிகர்களின் எண்னிக்கையை விட, மன்றங்களின் எண்னிக்கை அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது ! :)


ஒரு சில நடிகர்களை தவிர, மற்றவருக்கெல்லாம் உன்மையிலேயே ரசிகர்கள் தான் மன்றங்களை அமைக்கிறார்களா அல்லது அந்த நடிகரே செலவு செய்து ஆரம்பித்துக்கொள்கிறார என்கிற சந்தேகமும் உள்ளது..

நிஜத்தில் நான் பார்த்ததை சொல்கிறேன், எங்கள் அலுவலகத்தின் சார்பாக, வருடம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்கு இருக்கும் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வோம்.. (விவரமாக பிறகு சொல்கிறேன்..) ..அப்படி இவ்வருடம் திருவள்ளுவர் மாவட்டம் , புழல் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று பார்த்த போது, உள்ளபடியே அங்கிருந்த பள்ளிக்கூடத்திற்கு எழுத ஒரு கரும்பலகை இல்லை.. கரும்பலகை என்ற பெயரில் ஒன்று இருந்தது, அதில், பலகையை விட ஓட்டை அதிகமாக இருந்தது... கரும்பலகை ஓட்டைக்கும் ரசிகர் மன்றத்துக்கும் என்ன முடிச்சு போடுகிறான் இவன் என்று தோன்றுகிறதா?? இருங்கள் சொல்கிறேன்... அந்த பள்ளியின் வாசலிலே.. இளய தளபதி நடிகர், தல நடிகர், நாட்டாமை நடிகர், இரண்டு "காந்த" நடிகர்களுக்கும் என்று மொத்தம் 5 நடிகர்களுக்கு ரசிகர் மன்ற பலகைகள்.. அதில் 3 புத்தம் புதியதாய் மின்னியது.. பள்ளிக்கூடத்தில் 1 வருடமாக சரியான கரும்பலகை இல்லை..ஆனால் அதன் வாசலில்..பளீரென்று 5 பலகைகள்.. இதை நிறுவிய 5 குழுவில் ஒரு குழுவினர் நினைத்திருந்தால், அப்பள்ளிக்கு ஓர் கரும்பலகை வாங்கி தந்திருக்கலாம்.... தங்களின் மனம் கவர்ந்த நடிகரின் முகம் வரைந்து , கொட்டை எழுத்துக்களில் அவர் பெயர் எழுத ஆயிரக்கணக்கில் செலவு செய்தவர்களுக்கு தங்கள் கிராமத்து குழ்ந்தைகளின் நலனுக்கு ஒரு 100, 200 செலவு செய்ய ஏன் மனம் வரவில்லை..??வேதனையாக தான் இருந்தது.

ரசிகர்கள் ஏன் கரும்பலகையை மாற்ற வேண்டும்...??? அரசு தானே செய்ய வேண்டும்..? சிலர் கேட்கும் கேள்வி புரிகிறது..

அவர்கள் செய்ய வேண்டும் என சொல்லி இருக்க மாட்டேன், ஒரு வேளை

** ரசிகர்கள், தங்களின் ரசிகர் மன்ற திறப்பு விழாவிற்க்கு வரும் சிறப்பு விருந்தினர்களை அமர வைக்க பள்ளியின் பென்ச் மற்றும் 4 நாற்காலிகளையும் பயன் படுத்தாமல் இருந்திருந்தால்.
** கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக , சிறப்பு விருந்தினர் வரும் வழியில் பள்ளி குழந்தைகள் கையில் , ரசிகர் மன்ற கொடி கொடுத்து 2 மனி நேரம் வெய்யிலில் வரிசையில் நிற்க வைத்து, பந்தா காடி, எல்லாம் முடிந்த பின், 50 பைசா மிட்டாய் மட்டும் கொடுத்து போங்கள் என அனுப்பாமல் இருந்திருந்தால்.
** தோரணம் ஒட்டவும், கலர், கலர் கொடி ஒட்டவும், பள்ளி சிறுவர்களை பயன் படுத்தாமல், தாங்களே சுயமாக ஒட்டி இருந்தால்...
** இதற்கெல்லாம் மேலாக, பென்ச் , நாற்காலி, கழிப்பிடம், இவர்கள் சமைத்து சாப்பிட பள்ளியின் பால்வாடி யில் இருந்து பாத்திரங்கள்..இன்னும் பிற பொருட்களுக்காக , திறப்பு விழாவிற்கு வரும், எங்கள் " ---- " ன் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவரிடம் சொல்லி இந்த பள்ளிக்கு நல்ல கரும்பலகை, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், சீருடை வாங்கி தருகிறோம் என வாய் கூசாமல் பொய் சொல்லாது இருந்திருந்தால்...
** இல்லை, ஒரு வேளை இது எதையும் நாங்கள் அங்கே சென்ற போது , பேச்சு வாக்கில் கிராமத்தினர் சிலர் எங்களிடம் சொல்லாமல் இருந்திருந்தால்...

சரி , இந்த ஒரு கிராமத்து நிகழ்வுதான் இந்த பதிவிற்க்கான காரணமா?? இல்லை , நிச்சயாமாக இல்லை .. இந்த கிராமத்து நிகழ்வு சமீபத்தில், கடந்த நவம்பரில் நடந்தது, ஆனால் பல ஆண்டுக்காலமாகவே , என் மனதில் ஓடிய எண்ணங்கள் தான் இந்த பதிவு.. எடுத்துக்காட்டாக மட்டுமே இந்த நிக்ழ்வு..
இன்றைய ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது???????ரசிகர் மன்றங்கள், வெறும் ரசிகர் மன்றங்களாக மட்டுமே இருந்தால், நாமேன் மென்கெட்டு நேரம் செலவிட்டு இங்கே எழுத வேண்டும்... ரசிகர் மன்றங்கள் தங்களின் விளிம்பைத்தாண்டும் பொழுது தான் இப்படி எழுத வேண்டிய கட்டாயத்திற்க்கு நாம் ஆளாகிறோம்..
இந்த ரசிகர்கள், திரையில் தங்கள் மனம் கவர் நடிகர் செய்யும் வித்தைகளை ஏதோ "செல்லுலாய்ட் வித்தைகள்" என்பதை மறந்துவிட்டு.. அதை எதோ நிஜம் என கொண்டு அவரை 'மனித புனிதர்' என்றும்..வாழும் மஹாத்மா, தமிழகத்தை காக்க வந்த அவதாரம் என்றும் முரசு கொட்டுவதை தான் ஏற்க முடியவில்லை.. உன்மையிலேயே ஒரு மனிதனின் தூய உள்ளத்திற்குதான் ரசிகர் மன்ற்ங்கள் அமைக்கப்படுகிறது என்றால், ஏன் ஒரு காந்திஜிக்கோ , அன்னை தெராசாவிற்க்கோ ஒரு ரசிகர் மன்றம் இங்கில்லை?????? ஒரு வேளை, இவர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதால், கட்சி ஆரம்பித்து ... ஒரு வட்ட செயலாளர் பதவி கூட கிடைக்காது என்பதாலோ???

தொடரும்...........................

குறிப்பு: இந்த கட்டுரை அனைத்து நடிகர்களின் அனைத்து ரசிகர் மன்றங்களை பற்றியது அல்ல... சில நல்ல மன்றங்களும் இருக்கத்தான் செய்கிறது , பார்த்துள்ளேன் ... அவை பற்றியும் எழுதுவேன் தொடர்ச்சியில்... ஆனால் துரதிர்ஷடவசமாக, வெகு சிலவே அப்படி உள்ளது... !!

தொடர்ச்சியில் சந்திக்கும் வரை,

நட்புடன்
வீ .எம்

28 கருத்துக்கள்:

Anonymous said...

//தங்களின் மனம் கவர்ந்த நடிகரின் முகம் வரைந்து , கொட்டை எழுத்துக்களில் அவர் பெயர் எழுத ஆயிரக்கணக்கில் செலவு செய்தவர்களுக்கு தங்கள் கிராமத்து குழ்ந்தைகளின் நலனுக்கு ஒரு 100, 200 செலவு செய்ய ஏன் மனம் வரவில்லை..??வேதனையாக தான் இருந்தது //..

நல்லா சொல்லிகீற பா... நச்சுனு இருக்கு .. !

அடுத்த பகுதி ...சீக்கிரம் போடுபா .. !

குமார்

குமரேஸ் said...

"ஒரு சில நடிகர்களை தவிர, மற்றவருக்கெல்லாம் உன்மையிலேயே ரசிகர்கள் தான் மன்றங்களை அமைக்கிறார்களா அல்லது அந்த நடிகரே செலவு செய்து ஆரம்பித்துக்கொள்கிறார என்கிற சந்தேகமும் உள்ளது.."

இதில் என்ன சந்தேகம் வேண்டி கிடக்கு?

எல்லா ரசிகர் மன்றங்களும், அந்தந்த நடிகர்களின் தூண்டுதலால், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு நண்பரோ அல்லது உறவினரோ மூலம், அவரது முதலீட்டில்தான் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த நம்பிக்கைக்கு பாத்திரமான ஆள், தனது அடுத்த கட்ட ஆட்கள்மூலம் இதனை விரிவுபடுத்திக் கொளவார், இது இப்படியே விரிவடைந்து செல்லும்.

இவையெல்லாம்தான் அந் நடிகரின் இருப்பை தக்க வைத்துக்கொள்ளும், வியாபார உத்திகள்.

demigod said...

Good one V.M. Thanks for blogrolling me. -rhavee

வீ. எம் said...

thanks to kumar, kumares and rhavee !!

குழலி / Kuzhali said...

எல்லாவிடயத்தையும் நீங்களே எழுதிவிட்டால் நான் எதை எழுதுவது கொஞ்சம் விட்டு வைங்கப்பா எனக்கும். ஹி ஹி

ராம்கி said...

//எல்லா ரசிகர் மன்றங்களும், அந்தந்த நடிகர்களின் தூண்டுதலால், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு நண்பரோ அல்லது உறவினரோ மூலம், அவரது முதலீட்டில்தான் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த நம்பிக்கைக்கு பாத்திரமான ஆள், தனது அடுத்த கட்ட ஆட்கள்மூலம் இதனை விரிவுபடுத்திக் கொளவார், இது இப்படியே விரிவடைந்து செல்லும். //

குமரேஸ், உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன், 'எல்லா ரசிகர் மன்றங்களும்' என்பதற்கு பதிலாக 'பெரும்பாலான' என்று போட்டுக்கொள்ள நீங்கள் ஒப்புக்கொண்டால்!

அதிரைக்காரன் said...

நல்லா சொன்னீங்க, தெருவுக்கு நாலு ரசிகர் மன்ற போர்டு அதில் வில்லனைபோல அவர்களின் ஹீரோ படத்தை வரைந்து கொடுமை பண்றாங்கப்பா. (இந்த கருமாந்திரமெல்லாம் தமிழ் நாட்டுல மட்டும்தானா இல்லை 'அகில இந்தியா"விலுமா என்று தெரியவில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட நடிகரின் ரசிகர் மன்றத்தில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை எதாவது ஒரு செக்சன்ல போட்டு முட்டிக்கு முட்டி தட்டனும்.

ஆமா, T.ராஜேந்தரின் ரசிகர்கள்! இன்னும் அவரோடுதான் லட்சியதோடு இருக்கிறார்களா அல்லது 'லிட்டில் சூப்பர் ஸ்டாருடன்' இருக்கிறார்களா என்று கொஞ்சம் விசாரிச்சு சொன்னால் புண்னியமாகப் போகும்.

நான் விTரா-வின் (விஜய T. ராஜேந்தர்) முன்னாள் ரசிகன் என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

'திருவள்ளுவர் மாவட்டம்' எங்க சாமி இருக்கு?

லதா said...

"ஓர்" பார்வை என்று வராதாமே :-)
"மரத்தடி"யில் எப்போதோ படித்தது

வீ. எம் said...

ராம்கி / குமரேஸ் அவர்களே,

ராம்கி சொல்வது சரி என்று எனக்கு படுகிறது.. அதனால் தான் என் பதிவில் எங்கும் "எல்லாம்" என்று நான் எழுதவில்லை..
என் குறிப்பிலும் இது பற்றி சொல்லியுள்ளேன்... !!

- அதிரையார் அவர்களே,
\\\ஆமா, T.ராஜேந்தரின் ரசிகர்கள்! இன்னும் அவரோடுதான் லட்சியதோடு இருக்கிறார்களா அல்லது 'லிட்டில் சூப்பர் ஸ்டாருடன்' இருக்கிறார்களா என்று கொஞ்சம் விசாரிச்சு சொன்னால் புண்னியமாகப் போகும்.\\\

இது பற்றி பாகம் - 2 ல் எழுத இருந்தேன்... நீங்களும் நினைவு படுத்தி விட்டீர்... எழுதுகிறேன்..

அப்புறம், அது திருவள்ளுர் மாவட்டம்.. (புழல் ஏரி .அருகில் ஒரு கிராமம்..) .. .தவறுக்கு மன்னிக்கவும்.. !

மூவருக்கும் நன்றி!!
வி. எம்

வீ. எம் said...

மதிப்பிற்குறிய என் ஆசிரியர் லதா அவர்களே,
வணக்க்ம் !! வருகைக்கு நன்றி !

திருத்திக்கொள்கிறேன் !

வீ . எம் !

குமரேஸ் said...

"எல்லா ரசிகர் மன்றங்களும்......" என்பது தவறாக படுவதாகவே எனக்கும் இப்போது தோன்றுகின்றது, எனவே "பெரும்பாலான ரசிகர் மன்றங்கள்" என்பதுதான் சரியானது,

"ஆனாலும், அதைவிட எதிர்காலத்தில் அரசியலுக்கு வர, ரசிகர் மன்றங்கள்தான், ஓர் பேரம் பேசுவதற்குரிய காரணியாகும், என்பதனையுணர்ந்த நடிகர்கள்தான் இவ்வாறு தங்களுடைய பணத்தில் ரசிகர் மன்றங்களை ஏற்படுத்தினார்கள்/விரிவு படுத்தினார்கள் என்பதுதான் மிகவும் சரியானது."

எனக்குத் தெரிய "பஞ்ச கல்யாணி" க்கும், ஏதோ ஒரு ஊரில் ரசிகர் மன்றம் இருந்ததாக, ஏதோ பத்திரிகையில் படித்ததாக ஞாபகம். நிச்சயமாக "பஞ்ச கல்யாணி" தனது பணத்தைக் கொண்டு இந்த ரசிகர் மன்றத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை.

எனவே, எனது தவறினை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி, திருத்திக்கொள்கிறேன்.

Agent 8860336 ஞான்ஸ் said...

பொறுப்பில் உள்ளவர்கள் கடமையிலிருந்து தவறுவார்கள்; ஆனால் நாம் அவர்களை விட்டுவிட்டு, பொறுப்பற்றவர்களைச் சாடுவதால் என்ன பயன் விளையப்போகிறது?

மேலும் இங்கே ரசிகர் மன்றங்கள்... வேறொரு பார்வை !

வீ. எம் said...

ஞானபீடம் அவர்களே,

நீங்கள் சொல்வதை மேலோட்டமாக பார்த்தால் நியாயம் இருப்பதாய் தெரியும்.. ஆனால் தொடர்ச்சியை நான் எழுதும்போது.. ஏன் அவர்களை குறை சொன்னேன் என்பது புரியும்..

நட்புடன்,
வீ.எம்

Raj said...

ஞானபீடம் : விட்டால், ஊரில் குப்பைகளை அகற்றுவது, சாக்கடை சுத்தம் செய்வது மாதிரி வேலைகளையெல்லாம் யாராவது ரசிகர் மன்றத்தார் செய்யவேண்டும் என்று கட்டளை போடுவோம் போலிருக்கிறது.


\\
ஆம்,
எப்பொழுது ரசிகர் கூட்டம் , தெருவிற்கு வந்து, ஓட்டுப்பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டதோ...!
எங்கள் தல , இ. தளபதி, சூ.நட்சத்திரம் , கேப்டன், உ. நாயகன் படத்தை பார்க்க வாருங்கள் , வாருங்கள் என கூவி அழைக்க ஆரம்பித்தார்களோ...., அர்சியல்வாதிக்ளிடம் அரை ப்ளேட் பிரியானிக்கு கை ஏந்தி நின்றார்களோ......
அப்போதே... அவர்கள் ஊரில் குப்பைகளை அகற்றுவது, சாக்கடை சுத்தம் செய்வது மாதிரி வேலைகளையெல்லாம் செய்ய தயாராக இருக்கத்தான் வேண்டும்.. !

ராஜேந்திரன் . பா

Moorthi said...

அன்புள்ள வீஎம் அவர்களுக்கு,

வணக்கம். நன்றாக எழுதுகிறீர்கள். நிச்சயம் பெரிய எழுத்தாளராக ஆவதற்கான எல்லா அறிகுறிகளும் காணப்படுகின்றன. (ஏற்கெனவே பெரிய ஆள்தானா?)

ரசிகர் மன்றங்கள் நடிகனின் படம் வெளியாகும்போது கொடிகள் கட்டவும் படத்தினை விளம்பரம் செய்யவும் நடிகரின் புகழைப் பரப்பவுமே ஏற்படுத்தப் பட்டன. பின்னாட்களில் அவற்றில் சில பல நல்ல தொண்டுச் செயல்களைச் செய்ய முன்வந்தன. இன்றும்கூட சில மன்றங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. சிலவோ என் தலைவனை அந்த படத்தில் "ஏய்" என்று சூட்சுமமாக திட்டினாய் என பேனர் கிழிக்க அலைகின்றன.

எது எப்படி இருப்பினும் ரசிகர் மன்றங்களின் செயல்பாட்டின் முக்கிய பொறுப்பு அந்த குறிப்பிட்ட நடிகரையே சாரும். அவர்களை நல்வழிப்படுத்துவதும் நல்ல நோக்கங்களில் செயல்பட வைப்பதும் நடிகரின் கைகளில்தான் உள்ளது.

சின்ன வேண்டுகோள்: அனானிமஸ்கள் பதியமுடியாவண்ணம் தடுத்துவிடுங்கள். அது தேவையற்ற சர்ச்சையைக் குறைக்கும்.

வீ. எம் said...

திரு மூர்த்தி அவர்களே,

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. !! பெரிய ஆள் எல்லாம் இல்லீங்கோ !!!! நீங்களே சொன்ன மாதிரி 'அறிகுறி' கூட எனக்கு எதுவும் தெரியவில்லை !! பள்ளிகூட காலத்திலிருந்தே .. எழுதுகிறேன் பேர்வழி என்று .. கிறுக்கி தள்ளி .நாம் எழுதியது தான் கட்டுரை, கவிதை என்ற நினைப்பில் மிதந்து !!.. (மற்ற நல்ல கட்டுரை, கவிதைகளை படிக்கும் வரை !! ) .. சில காலம் எழுதியதை பொத்தி பொத்தி பாதுகாத்து .. (என்னடா இது குப்பை என்று அப்பாவிடம் திட்டு ... வாங்குவது தனி கதை!!) பின்னர் எங்கோ அந்த பொக்கிஷங்களை.. ஹி ஹி ஹி !!! தொலைத்துவிட்டாலும், நாம் பெரிய கவிஞர் என்கிற என்னத்தை மட்டும் மனதின் ஒரு மூலையில் தொலைக்காமல் பாதுகாத்து... பல வருடம் கழித்து வாய்ப்பு கிடைக்கும் போது மெல்ல எட்டிப்பார்க்க வைக்கும் லட்சக்கணக்கான "டமாஸ்" கவிஞர்கள்/எழுத்தாளர்களின் நானும் ஒருவன்... அவ்வளவே !!

\\\\\\ முன்வந்தன. இன்றும்கூட சில மன்றங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. சிலவோ என் தலைவனை அந்த படத்தில் "ஏய்" என்று சூட்சுமமாக திட்டினாய் என பேனர் கிழிக்க அலைகின்றன.\\\\\


ஒரு திருத்தம் : "சிலவோ" என்பதை "பலவோ" என மாற்றிக்கொள்ளவும் ... !!

அப்புறம்.. " அனானிமஸ் தடைச்சட்டம் " கொண்டு வருவது பற்றி பரிசீலனை செய்யப்படும் !!

நன்றிகளுடன்,
வீ .எம்

Agent 8860336 ஞான்ஸ் said...

நீங்கள் சொல்லும் ரசிகர்கள் எல்லாம் ஒருவேளை அந்த ஓட்டை கரும்பலகை இருக்கும் பள்ளியில் உள்ள பொறுப்பற்ற ஆசிரியரிடம் படித்ததார்களோ என்னவோ !

---
என் பின்னூட்டத்திற்கு மறுமொழி நல்கிய,
வீ.எம்., மற்றும் raj அவர்களுக்கு நன்றி.

இவண்
ஞானபீடம்

வீ. எம் said...

அந்த ரசிகர்கள் மட்டும் அல்ல... ரசிகர் என்ற போர்வையில் தேவையற்ற "டமாசு" வேலை செய்பவர்கள் எல்லோருமே, ஏதோ ஒரு பொறுப்பற்ற ஆசிரியரிடம் படித்ததாகவே என்னுகிறேன்..

Go.Ganesh said...

//.....மழை பெய்தால் வளர்கின்ற காளான் போல், இன்று எங்கு பார்த்தாலும் திரைப்பட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள்.. ஒரு படத்தில் நடித்து , அதுவும் சரியாக ஒடாத நடிகருக்கு கூட ரசிகர் மன்றம் இருப்பதை பார்க்கின்ற போது வேடிக்கையாக தான் உள்ளது. //

மழை பெய்யாமலே வளர்கிற காளான்களை என்னவென்று சொல்வது. மதுரையில் "கோடீஸ்வரன்" படத்தின் நாயகனுக்கு மன்றமிருக்கிறது. படத்தின் நாயகன் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனின் மகன். படம் எனக்குத் தெரிந்து ஏழு ஆண்டுகளாக பெட்டியில் தான் இருக்கிறது.

மேலும் ரஜினி ராம்கி சொல்வது போல அனைத்து ரசிகர் மன்றங்களும் இப்படி நடிகரின் "உடன்பிறவா"க்களால் அமைக்கப்படுவதில்லை.

// ஞானபீடம் : விட்டால், ஊரில் குப்பைகளை அகற்றுவது, சாக்கடை சுத்தம் செய்வது மாதிரி வேலைகளையெல்லாம் யாராவது ரசிகர் மன்றத்தார் செய்யவேண்டும் என்று கட்டளை போடுவோம் போலிருக்கிறது. - ராஜ் //

ராஜ் கட்டவுட் அமைத்தே வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு உலகத்திலிருந்து கெட் அவுட் (கட் அவுட்.....கெட் அவுட்... நான் சத்தியமாக டி.ராஜேந்தர் ரசிகனில்லை) ஆன ரசிகர்களும் இருக்கிறார்கள் (இருந்தார்கள்). அப்படியிருக்க ஏன் சார் குப்பைகளை அகற்றுவது, சாக்கடையைச் சுத்தம் செய்யக் கூடாது.

கலை said...

நல்லதொரு கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைக்கு பாராட்டுக்கள். ரசிகர்மன்றத்துக்காக ததனை செலவு செய்ய தெரிந்தவர்களுக்கு ஒரு கரும்பலகை வாங்கி கொடுப்பது பெரிய வேலை அல்லவே. மனம் இருந்தால், இடம் இருந்திருக்கும்.

கலை said...

நான் வலைப்பூக்களுக்கு மிகவும் புதியவள். அப்படி இருக்கையில், உங்களது "எட்டிப் பார்த்த போது, மனதில் ஒட்டிக் கொண்ட பூக்களில் சில !!" வில் எனது வலைப்பூவையும் இணைத்திருப்பதில் மகிழ்ச்சியும் நன்றிகளும். எப்படி மற்றவர்களுடைய வலைப்பூகளுக்கு தொடர்பு கொடுப்பது என்ற சின்ன விடயம் கூட எனக்குத் தெரியவில்லை. முடிந்தால், நேரமுமிருந்தால் சொல்லித் தருவீர்களா? உங்களை எப்படி ஈமெயிலில் தொடர்பு கொள்வது என்று தெரியாமையால், இங்கே எழுதுகிறேன். எனது ஈமெயில் விலாசத்துக்கு தொடர்பு கொள்ள முடியுமா? செய்யப் போகும் உதவிக்கு முன்னேற்பாடாக இப்போதே எனது நன்றிகள். :)

வீ. எம் said...

கலை அவர்களே,
ரூபாய்க்கு 4 என்கிற அளவில் வலைப்பூ வைத்திருக்கும் நீங்கள் புதியவரா??? வலைப்பூ வா இல்லை என் காதுல பூ வா?? :)

மித்ரா said...

அருமையான பதிவு...
வாழ்த்துக்கள்...

மித்ரா..

பி.கு: என் பதிவையும் எட்டி பார்க்கவும். பிடித்திருந்தால் ஒட்டிக்கொள்ளவும். நன்றி.

முகமூடி said...

நீங்கள் சொல்வது தவறு வீஎம். எல்லா ரசிகர் மன்றங்களும் நடிகர்களால் ஆரம்பிக்கப்படுவது அல்ல... வாரிசு நடிகர்களுக்கு மன்றங்கள் அவர்கள் அப்பாக்களால் ஆரம்பிக்கபடுகிறது... நடிகைகளுக்கு மன்றங்கள் ரசிகர்களால்தான் (உங்க ஊரில் வேலை வெட்டி இல்லாமல் தன் வாய் மட்டுமே மூலதனம் என்று ஒருத்தன் பொளப்பு ஒட்டிகிட்டு இருப்பான் பாத்திருப்பீங்க... நடிகைக்கு முதல் படம் ரிலீஸானவுடனே மேனேஜரை பார்த்து 'தலைவிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்பா, கொஞ்சம் நம்மையும் கவனி'....) ஆரம்பிக்கப்படுகின்றன...

ரசிகர் மன்றத்துல இருக்கறவங்க ஏதோ பொழுதுபோக்கிற்கு என்னமோ பண்ணிகிட்டு இருப்பாங்க... அவங்கள போயி சமூக சேவை அது இதுன்னு பயமுறுத்திக்கிட்டு...

வீ. எம் said...

நன்றி மித்ரா அவர்களே ,
தங்கள் வலைப்பூவை பார்த்தேன், நிச்சயமாய் மனதில் ஒட்டிக்கொண்டது ..
நாளை என் வலைப்பூவிலும் ஒட்டி விடுகிறேன்..

முமூடி அவர்களே.. மிக்க நன்றி..
நாம சொல்லி அவங்க திருந்த போறது இல்லை...ஆதங்கம்பா..எதோ கொட்டிட்டேன் !!

வீ .எம்

Muthu said...

வீ.எம்,
நல்லா எழுதறீங்க.

////சில காலம் எழுதியதை பொத்தி பொத்தி பாதுகாத்து .. (என்னடா இது குப்பை என்று அப்பாவிடம் திட்டு ... வாங்குவது தனி கதை!!) பின்னர் எங்கோ அந்த பொக்கிஷங்களை.. ஹி ஹி ஹி !!! தொலைத்துவிட்டாலும்,////

இந்தக் கவிதை ஞாபகம் வருகிறது.
http://muthukavithai.blogspot.com/2005/05/blog-post.html

பொரிகடலை கட்டும்
துண்டுத் தாளானது
கடைசியில்.
ஒரு காலத்தில்
புத்தகமாய்ப் போட இருந்தேன்.

வீ. எம் said...

முத்து அவர்களே , மிக்க நன்றி !!

வலைப்பூவை பொறுத்தமட்டிலும், நீங்கள் எல்லாம் கல்லூரி மாணவர்கள்.. நான் முதல் வகுப்பு சேர பள்ளி வாசலில் நின்றுக்கொண்டிருக்கிறேன்..
வீ .எம்

siragugal said...

Hi
In our angle we can say that Rasigar Mandrangal are wasting the money and manpower and time.. but there is a route cause for those works.. that is registering their name in a famous actor's rasigar mandram means he is registering his name in the future politics. A regional secretary of a rasigar mandram may become a popular politician in future.. so.. sozhiyan kudumi summa aadaathu.. aathaayamillaamaya chetty aaththooda poovaangra kathaya irukku.