இடைத்தேர்தல் முடிவு....முடிவல்ல ஆரம்பம்... !


இடைத்தேர்தல் முடிந்து இரு தொகுதியையும் ஆளும் அ.தி.மு.க 'கை'ப்பற்றியுள்ளது...அதிமுக தலைவி சொல்லி பெருமிதப்பட்டுக்கொண்டது போல் இது முழுமையான "மக்கள்" தீர்ப்பு அல்ல என்பது நிச்சயமாக அனைவருக்கும் தெரியும். அதே நேரதில், இது நிராகரிக்கபட வேண்டிய வெற்றி என்று சொல்லவும் முடியாது. இது கையகப்படுத்தபட்ட "மக்கள் தீர்ப்பு"...
இரு வழிகளை ஆளுங்கட்சி இத்தேர்தலில் கையாண்டது. ஒன்று, அவசர கதியில் மக்கள் பிரச்சனைக்கு செவி சாய்த்து .. பலதை நிவர்த்தி செய்தது.. இரண்டு (மற்றும் முக்கியமானது) பணம்..பணம்.. அதிகார பலம்..
நடந்தது இடைத்தேர்தல், ஆக அதிகாரம் ஆளுங்கட்சியிடம் இருந்தது.. காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் பெருமளவில் வெற்றிக்கு உதவியது... ஆனால் அ.தி.மு.க நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று, அடுத்த ஆண்டு நடைப்பெற இருக்கும் பொது தேர்தலில் அதிகார பலம் நிச்சயமாக உதவாது.. பணம் ஓரளவு உதவி செய்தாலும், மக்கள் பிரச்சினைகளை நீங்கள் கையாலும் விதமே உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும்.. இந்த இடைத்தேர்தலில் நீங்க பெற்ற வெற்றி 80 % பனம், அதிகார பலம் + 15%(மட்டுமே) நீங்க செய்த மக்கள் பனி .ஆக, நீங்கள் செய்யவேண்டியது (மக்கள் பனி ) நிறைய உள்ளது...


தி.மு.க கூட்டணி : அவர்கள் , பணம் மற்றும் அதிகார பலத்தால் தான் வெற்றி பெற்றார்கள் என்பதற்க்காக, உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று இருந்திட வேண்டாம்.. உங்களக்கும் "எச்சரிக்கை மனி" அடிக்கப்பட்டுள்ளதை உணருங்கள். சொல்லப்போனால், நீஙகள் கற்க வேண்டிய பாடம் தான் அதிகம் ..
உங்கள் கூட்டனி தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில், உங்கள் பலமாக இருந்து வெற்றி பெற வைத்தது.. அதே கூட்டனி தான் இம்முறை உங்கள் பலவீனமாகி தோல்வியுற வைத்துள்ளது...
உங்கள் கூட்டனிக்குள்ளேயே ஒற்றுமை இல்லாதது முதல் காரணம், கடந்த ஓராண்டில் அவ்வப்போது எழுந்த சலசலப்பு தேர்தல் முடிவுகளில் நன்றாகவே பிரதிபலித்தது...
மேலும், கூட்டனியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்குள்ளேயே ஓற்றுமையின்மை, ஒரு கட்சி வளர்ந்த்து விடுமோ என்ற கூட்டணிக்குள் பொறாமையும் தோல்விக்கான காரணம்..
தொண்டர்களிடையே, 2 தொகுதி தானே என்கிற அலட்சியமோ அல்லது 40 ஜெயித்த நமக்கு , 2 முடியாதா....... என்கிற மெத்தனப்போக்காகவும் இருக்கலாம்...
எதுவாகினும், 1 ஆண்டுக்கு முன் சரி விகிதத்தில் கலவை செய்து சுவையான கூட்டு செய்த்த உங்களால், இம்முறை முடியவில்லை.. உப்பு , காரம் அதிகமாகி விட்டதோ??? :)
ஆக, இரு கழகங்களுக்குமே தங்களை சுய மதிப்பீடு செய்து .. விரைவாக செயல் படவேண்டிய கட்டாயம்.. !!செய்வார்களா?????? வழக்கம் போல் நம்புவோம்... நம்பிக்கை தானே வாழ்க்கை.. !

நட்புடன்

வீ .எம்

2 கருத்துக்கள்:

Anonymous said...

thats why saying.. let us ignore all these people and have super star to enter politics and lead the state !

குழலி / Kuzhali said...

மிக அருமையான அலசல், கிட்டத்தட்ட இதே எண்ணங்கள் தான் எனக்கும், ஒரு பதிவு போடலாம் என இருந்தேன், உண்மை புரியாமல், பாமக இருந்தும் வெற்றி பெறவில்லை என நக்கல் விடுவார்களே என்றுதான் பதியவில்லை,

//எதுவாகினும், 1 ஆண்டுக்கு முன் சரி விகிதத்தில் கலவை செய்து சுவையான கூட்டு செய்த்த உங்களால், இம்முறை முடியவில்லை.. உப்பு , காரம் அதிகமாகி விட்டதோ??? :)//

சரியான ஒரு கருத்து நையாண்டியாக

ஆனாலும் உன்னிய புகல கூடாதுனுதான் நெனக்கிறேன், முடியலையே