காங்கிரஸ் கர்ஜனை - ஒரே காமெடி

நம் தேசபக்தர்கள் காங்கிரஸ்காரர்கள் மயிலையிலே ஈழத்தமிழர் - காங்கிரஸ் நிலை என்ன என்று விளக்குவதற்கு ஒரு பொதுக்கூட்டம் போட்டார்கள்..

இதையெல்லாம் விளக்க, கூட்டம் எதுக்குனு புரியல.. ஒரே வரிதானே உங்கள் நிலை.. ராஜிவை புலிகள் கொன்ற காரணத்தால் , அந்த புலிகள் தான் ஈழம் பெற்றிட முழு மூச்சாக போரிடுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அனைத்து ஈழத்தமிழனும் செத்து மடியட்டும் , அது தான் நிலை..
இதை சொல்ல ஒரு கூட்டம் வேண்டுமா என்ன?

சரி, அவர்களின் நிலையை எடுத்து சொல்லும் இடத்தில் எவ்வளவு அழகாக புரியும் படி சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்..

நன்றி ஜூனியர் விகடன்

கார்த்தி சிதம்பரம்: ''லெட்டர் பேடு கட்சி கள் காங்கிரஸை விமர்சிக்கின்றன. துப்பாக்கி தூக்குபவனைவிட, குண்டு வீசுபவனைவிட பேச்சுவார்த்தைக்கு வருபவன்தான் உண்மை யான மனிதன். இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதாகச் சொல்லி இங்கே இருக்கும் காங்கிரஸ்காரர்களைத் தாக்குகிறார்கள். இனி காங்கிரஸ்காரன் சைலன்ட்டா இருக்க முடியாது. அவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு பதிலடி தரவேண்டும்!''

வீ எம் - இதை விட தெளிவா யாராலும் ஈழம் பிரச்சனையில் காங்கிரஸ் நிலை பற்றி சொல்லிட முடியுதுங்கண்ணா...

போளூர் வரதன்: ''தீக்குளித்தவர்களின் பிணங்களைத் தூக்கிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர். முத்துக் குமார் எரிந்தபோது அவன் வைத்திருந்த பேப்பர் மட்டும் எப்படி எரியாமல் தப்பித் தது என்பதை இங்கே அமர்ந்திருக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ. மூலமாக விசாரித்தால், உண்மையான குற்ற வாளி யாரென்று தெரிந்துவிடும். இங்கே இருப்பவர்கள் தினமும் தினக்கூலி வாங்கிக் கொண்டு கைக்கூலி வேலை பார்த்து வருகி றார்கள். தலித்களின் மகாத்மா என்று சொல்லிக்கொள்ளும் திருமாவளவனே! இங்கு இருக்கும் சேரி மக்களுக்காக நீ என்ன செய் தாய்? உண்மையானஆம்பளையா இருந்தா, புலிகளை எதிர்க்கும் ஜெயலலிதா வுக்கு எதிரா போராட்டம் பண்ணு பார்க்கலாம்...

வீ எம் - நல்லா கேட்டீங்க போங்க.. உங்க மூளை மட்டும் ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து செஞ்சதா?? புல்லரிக்குது.. கையில் ஒரு பேப்பர் கத்தையை வெச்சுகிட்டு ஒரு வாட்டி தீக்குளிச்சு பாருங்களேன் தெரியும்..
ஆம்பளையா இருந்தா அம்மாவ எதிர்த்து போராட்டம் பன்ன சொல்றீங்க.. அப்போ தைரியமான ஆம்பிளைங்க காங்கிரஸை எதிர்த்து போராடக்கூடாதுன்றீங்க.. என்னனே கட்சிய இப்படி கேவலப்படுத்தறீங்க..


இரா.அன்பரசு: ''இலங்கைப் பிரச்னை தொடர்பாக இரண்டு நாளுக்கு முன்பு சிந்தாதிரிப்பேட்டையில் தி.மு.க. கூட்டம் போட்டது. அதிலும் நான் பேசினேன். அங்கு கூட்டமே இல்லை. இங்கே பாருங்கள்... ஆயிரக்கணக்கில் காங்கிரஸ்காரன் திரண்டு வந்திருக்கான். கள்ளத்தோணி ஸ்பெஷலிஸ்ட், ஆயுதம் தூக்கிக்கொண்டு இலங்கைக்குப் போய் இலங்கை ராணுவத்தினரோடு போராட வேண்டியதானே? போக முடியாது. பணம் வாங்கிக்கொண்டுதான் வரமுடியும். தமிழீழம் அமைந்துவிடுமாம். அதன்பிறகு, அகண்ட தமிழகமாகி விடுமாம்... வைகோ! நாங்க என்ன வாயில பிஸ்கோத்தா வச்சுக்கிட்டிருக்கோம்...''

வீ எம் - அதானே.. தி மு க விற்கு கூடறத விட காங்கிரஸ்க்கு 10 மடங்கு கூட்டம் வருவது இயற்கை தானே.. இது தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் நிலையா அன்பரசு?
அவர் என்ன உங்க வாயில என்ன இருக்குனா கேட்டாரு?? சாப்பாட்டு நேரத்துல மீட்டீங் வேணாம்னு சொன்னா எந்த காங்கிரஸ்காரனாச்சும் கேட்கறானா பாரு..


வாயில பிஸ்கோத்தா, வாழைபழமானு தெரியலா.. ஆனா காங்கிரஸ் காரனுக்கு நாக்குல சனி இருக்கறது மட்டும் நிச்சயம்..


யசோதா: ''நாங்க ஆங்கிலேயரை எதிர்த்தே போராடியவர்கள்... நீங்கள் எல்லாம் எங்களுக்கு பச்சா!''

வீ எம் - இதோ பாருடா.. அவரு பிஸ்கோத்துனா, இவங்க பச்சான்னு சொல்றாங்க.. யசோதாம்மா இங்கே "நாங்க"யாரு?? "நீங்க" யாரு?? எல்லாரைவிடவும் ஆங்கிலேயர்தான் சூப்பர்னு சொல்றீங்களா? ரொம்பத்தால் ஆங்கில மோகம் உங்களுக்கு..

தங்கபாலு: அரசிய லுக்கு வருவதற்கு முன்பே, புலிகளுக்கு ஆதர வாகக் குரல் கொடுத்தவர்கள் நாங்கள். இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும்தான் ஆயுதங்கள் கொடுக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டியதுதானே? தமிழ்நாடு காங்கிரஸ் இருக்கும் வரையில் இந்தியாவை துண்டுபோட அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ்காரன் இருந்தால் நாடு வாழும். இல்லை என்றால் வீழும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஆண்மை இருந்தால் நாளைக்கே வீதிக்கு வா. நானும் வருகிறேன். எங்களை சீண்டிப்பார்க்காதீர்கள்.''

வீ எம் - தலீவரு இது கூட பேசலனா என்ன இருக்கு.. சீனாவையும் பாகிஸ்தானையும் கேட்கனுமா? அப்புறம் என்ன ம.... 40 தொகுதிலயும் ஜெயிக்கவெச்சு மன்மோகன்சிங்கை பிரதமரா உட்கார வெச்சது?? இல்லை.. இந்திய காங்கிரஸ் அரசு ஒன்னுக்கும் உதவாது, சீனா, பாக் கிட்ட பேசி வேலைய முடிங்கனு சொல்றீங்களா?? சோனியா மேல அவ்ளோ கடுப்பா?? ஆண்மை இருந்தால் நாளைக்கே வீதிக்கு வா வா?? அண்ணே, எதிர்த்து வீதிக்கு வந்து 2 மாசம் ஆகுதுங்க தலிவா.. வீதியில்ல.. சத்யமூர்த்திபவனுக்கே வந்தாச்சு.. கமான் கெட் அப்.. யாராச்சும் மூஞ்சில தண்ணி தெளிங்கப்பா..

ப.சிதம்பரம்: ''ராஜீவ் காலத்தில் போடப் பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால், இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்து இருக்கும். முதல்வர்கள் அடுத்தடுத்து உருவாகியிருப்பார்கள். போர்நிறுத்தம் நிரந்தர மாகியிருக்கும். பேச்சுவார்த்தை என்றால் இரண்டு பக்கமும் ஆயுதங்களைக் கீழே போடுவதுதான். ஆனால், நான் ஆயுதத்தோடு வருவேன். நீ காகிதத்தோடு வா என்றால் என்ன அர்த்தம்?''

வீ எம் - என்ன தல, இப்படி இருக்கும் இருக்கும் நு இழுக்குறீங்க.. இன்னும் சொல்லுங்க.. சுதந்திரம் கொடுதப்பவே, ஈழத்தை பிரிச்சு கொடுத்திருந்தா , சன்டையே வராம இருந்திருக்கும், புலி அமைப்பே வராம இருந்திருக்கும், ராஜிவ் ஒப்பந்தத்துக்கே வேலை இல்லாம போயிருக்கும்... ஓ, ஆயுதத்தை போட்டுட்டு வா இல்லை ஒட்டு மொத்த இன அழிப்புனு சொல்றது ராஜபக்ஷேனு இவ்ளோ நாளா நான் தான் தப்பா நெனைச்சுகிட்டு இருந்ததேனா???
இதுக்கு நீங்க பேங்க் திறப்பு, பண வீக்கம், வெர வீக்கம் நு முன்ன மாதிரியே பேசிகிட்டு இருந்திருக்கலாம்... துறை மாத்தியிருக்கவே வேண்டாம்..

-----------

இப்பொ உங்க எல்லோருக்கும் ஈழம் பிரச்சனையில் காங்கிரஸ் நிலை என்னனு புரிஞ்சுதா?? தயவு செஞ்சு என்ன புரிஞ்சுதுனு கருத்துப்பெட்டில சொல்லுங்கள் ப்ளீஸ்..என்னை மாதிரி புரியாதவங்க தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்..

6 கருத்துக்கள்:

Anonymous said...

varum electionlil congressukku paadam koduppoom

Unknown said...

வாய்ச்சொல்லில் வீரர்கள் நம் காங்கிரஸ்காரகள்..
உங்க கமென்ட் நச் ரகம் :)

Unknown said...

மாப்பு..
வச்சுட்டாண்டா ஆப்பு...

வாக்காளன் said...

கோமாளித்தனமான பேச்சுக்கள் - போளுர் வரதன், யசோதா, அன்பரசு..
அரைவேக்காட்டுத்தனமான பேச்சு - கார்த்தி சிதம்பரம், தங்கபால்

Unknown said...

கான்கிரஸ் பிரதமர்கள் இல்லையென்றால் இந்தியாவிற்கு இந்த அளவிற்கு வளர்ச்சி இல்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். மேலும் , இந்த பேரியக்கம் தான் விடுதலை வாங்கி தந்தது..
இந்தியாவின் இளைய பிரதமர், எங்கள் தலைவர் ராஜிவை கொன்றவர்களுக்கு நாங்கள் காவடி தூக்கவேண்டுமா? எங்கள் வலி எங்களுக்குத்தான் தெரியும்

Kumar said...

Congress irukum varai naatai thundada mudaiyatha?? good joke

Correct..Congress irukum varai, mathavakka naatai thundada vedu maataka, avanga mattum thaan athai seivanga

Pakistan ponathuku kaaran yaru? Katchadeeva thaarai varthathu yaru?? paathi Kashmir'ra pakistanuku moi eluthunathu yaru??

Ipadi pala yaru'ku first congress pathil solladum