பன்றியை தொட்டு நக்குதல் தரும் பாடம்.

கால்நடை மருத்துவ மாணவர்கள் தங்களின் முதல் உடற்கூறு வகுப்பிற்காக ஒன்றாக குழுமியிருந்தார்கள்.
அவர்கள் முன்னே வெள்ளை துணியில் சுற்றிய இறந்த கொழு கொழு பன்றி ஒன்று இருந்தது. வகுப்பை தொடங்கிய பேராசிரியர் மாணவர்களை பார்த்து
மாணவர்களே, கால்நடை மருத்துவத்தில் சிறந்த மருத்துவராக வளர மிக முக்கியமான இரண்டு விஷயங்களை உங்களுக்கு சொல்லப்போகிறேன், கூர்ந்து கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்..
ஒன்று, கால்நடைகளை கையாளும் போது நமக்கு எந்த வித அருவெறுப்பும் இருந்திட கூடாது. எடுத்துக்காட்டாக, இதோ கவனியுங்கள் என்று சொல்லி பன்றியின் மீது இருந்த வெள்ளை துனியை எடுத்துவிட்டு தன் விரலை பன்றியின் வாயினுல் விட்டு தடவி, பின்னர் விரலை தன் வாயில் வைத்து சுவைத்தார்..

பின்னர் மாணவர்களை பார்த்து, உங்களின் அருவருப்பு போகவேண்டும் என்றால், நீங்களும் இதே போல செய்யுங்கள் என்றார்.

மாணவர்கள், சற்று முகம் கோனி, சிறிது நேரம் தயங்கிய பின்னர், அவர் சொன்னதை போலவே செய்துவிட்டு பேராசியரை பார்த்தார்கள்..

பேராசிரியர் தொடர்ந்தார், நல்லது மாணவர்களே, இப்போது இரண்டாவது முக்கியமான விஷயம். மருத்துவர்களுக்கு கூர்ந்து கவனிக்கும் தன்மை மிக மிக முக்கியம் என்று சொல்லி சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்...

நான் என் நடுவிரலை பன்றியின் வாயில் விட்டுவிட்டு, மோதிர விரலை சப்பினேன்.. ஆனால் நீங்கள்???

சரி, இனிமேலாவது கூர்ந்து கவனித்தல் என்ற இரண்டாவது முக்கிய விஷயத்தை கடைபிடிக்க பழகுங்கள் என்றவாறு தன் வகுப்பை தொடர்ந்தார்..

பாடம் - வாழ்க்கை கடினமானது, அது மேலும் அதீத கடினமாவது நீங்கள் முட்டாளாக இருக்கும் போது..

4 கருத்துக்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சூப்புற பாடம்
சூப்பர்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
Unknown said...

சூப்பர் பாடம் :)பாவம் மாணவர்கள்

வாக்காளன் said...

அருமை , ரசித்தேன்