மதியம் வெள்ளி, பிப்ரவரி 06, 2009

"தல" குழலியும், கும்முதலும்..

தல குழலியும், கும்முதலும்..

என்ன தல இந்த கும்மு கும்மியிருக்கீங்க .. சரி விடுங்க.. கும்முவதுனு முடிவு பன்னியாச்சு, அப்புறம் என்ன நல்லா கும்முறது, கொறச்சி கும்முறதுனு பாகுபாடு.. குனிய வெச்சு நல்லா கும்மு கும்முனு கும்ம வேண்டியது தானே..

மொத்ததுல கொள்கையை பார்த்து அளவுகோல் வெச்சு கும்ம சொல்றீங்க.. அது சரி.. பா ஜ க கொள்கை என்னனு எல்லாருக்கும் தெரியும், அதுக்காக அவங்க ராமர தூக்கி பிடிச்சு பிரச்சனை பன்னா , அட அவங்க கொள்கை அது, தெரிஞ்சது தானேனு கொஞ்சமாவா கும்முறோம்.. நல்லா குனிய வெச்சு கும்முறோம்ல.. அப்புறம் என்ன?

மத்தவங்கள ஏன் கும்மலனு கேட்கறவங்க கூட கலைஞரை கும்மிட்டு வந்து தானே அதை கேட்குறாங்க..

யார் யாருக்கு எந்த அளவுக்கு செய்ய முடியுமோ அதை செஞ்சுட்டு வந்து பேசினா பரவாயில்ல.. அவங்களால எது முடியுமோ அத கூட செய்யாம இப்படி டபுள் ஆக்ட் கொடுக்கறாங்களேனு தானே கும்மறாங்க (கலைஞரையும் சேர்த்து).

ஏன் நம்ம கேப்டனை எடுத்துக்கோங்க.. அவர் தான் கொள்கைனு எதுவும் இல்லைனு ஆரம்பத்துலயே சொல்லிட்டாரு.. அட அவர் என்ன செய்வாரு, அதான் கொள்கையே இல்லைனு சொல்லிடாரேனு விட்டுவிட்டோமா என்ன .. அவரோட எல்லா தவறான செய்கைக்கும் செம கும்மு கும்முனோமா இல்லையா??

சின்ன தவறு , பெரிய தவறுனு பார்த்தா கும்மினோம்? அவர் கொள்கை இல்லைனு சொன்னத வெச்சே கும்மி எடுத்தோமே.. அவர் கட்சி ஆரம்பிச்ச நேரத்துல தான் நாம எல்லாம் ஒன்னா வலைப்பதிவுல பிசியா எழுதிக்கிட்டு இருந்தோம் தல.. அப்போ இருந்த எல்லாருக்கும் தான் நல்லா தெரியுமே.. அளவுகோல் வெச்சு கும்மினோம்னு சொல்ல முடியுமா?

குறிப்பா ஓட்டு கேட்டு திருமா, வைகோ , ராம்தாஸ் பார்த்து மட்டும் தானே இந்த கேள்வி வருது.. ஒரு நெடுமாறனை, சுப வீ , சீமான், குப்பன் சுப்பனை பார்த்து இப்படி யாரும் கேட்கலயே தல..

ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் , எனக்கு கொள்கை கொஞ்சமா இருக்கு, ஒரு குறிபிட்ட வட்டத்துல நான் இருக்கேன் ஆகவே பொதுமக்களே, எனக்கு 2 நாடாளுமன்ற தொகுதியும், 15 சட்டமன்ற தொகுதிலயும் வெற்றிப்பெற அளவுக்கு மட்டும் ஓட்டு போடுங்கனு கேட்டா வராங்க.. அடுத்த முதல்வர் நான்.. நாளை நமதே 40 நமதே, 234 நமதே, முடிஞ்சா பக்கத்து மாநிலத்தையும் சேர்த்து 335 எனதேனு சொல்லிகிட்டு தானே வராங்க.. ஓட்டு மட்டும் அப்படி வேனும், கும்முறது மட்டும் அவங்க கொள்கைய பார்த்து கூட குறச்சு கும்மனும்னு சொல்றது என்ன நியாயம் தல..

சரி பட்டம் தான் இங்கே முக்கியத்தும் படுதானு பார்த்தா.. யார்கிட்ட இல்ல பட்டம்.. தமிழின தலைவர், தமிழன போராளி, தமிழர் தலைவர், தமிழன் முகவரி நு எல்லோருக்கும் பட்டம் இருக்கு.. இந்த பட்டத்துக்கு இந்த அளவு கும்மலாம்னு எழுதிவெச்சுட்டா பட்டத்தை போட்டுகிறாங்க..

தங்களால என்ன முடியுமோ அத கூட செய்யாம சால்ஜாப்பு சொல்றாங்களேனு தானே கும்முறாங்க.. இப்போவே செய்யமாட்டேங்கறாங்க .. நாளை நிறைய செய்யக்கூடிய பதவில வந்தா செய்வாங்களா? இதே சால்ஜாப்ப அப்போவும் தான் சொல்வாங்கனு தானே கும்முறாங்க..

என்ன தல எப்பவும் நல்ல எடுத்துக்காட்டு தருவீங்க இப்போ இவ்ளோ வீக்கா விட்டுடீங்க..

சரியா ஆடலயே, 100 எடுக்கலயேனு சச்சினை கும்முற அதே கும்பல் தான் ஹர்பஜனையும் செம கும்மு கும்முவாங்க.. நீங்க சொல்ற மாதிரி ஏன்டா ரன் எடுக்கலயேனு கேட்டு இல்லை..

அவன் தான் ரன் எடுக்காம விட்டுட்டான்.. நீதான் பக்கா பவுலர்னு டீம்ல வெச்சிருக்கோமே.. உன்னால முடிந்த அளவுக்கு போட்டு 4 விக்கெட் எடுத்திருந்தா ஜெயித்திருக்கலாம்லனு கும்மத்தானே செய்யுறாங்க.. செய்றாங்க இல்லையா??

ஏன், இன்னும் சொல்லப்போனா, கோச்சை கூட கும்மனும்.. அவர் என்ன பீல்ட்ல வந்தா விளையாடினாருனு கேட்டு கும்மாம விட முடியுமா?

சச்சின் பேட்ஸ்மேன், அவருக்கு ரன் எடுக்க வாய்ப்பு இருந்து அவர் விடுறாருனு அவரை மட்டும் கும்மிட்டு போயிட முடியுமா என்ன?? இல்ல அப்படித்தான் போயிடுறாங்களா??

கிரிக்கெட்ல கோச்சிங், பீல்டங் , பவுலிங் கூட அங்கம் தானே.. அது அதுல இருக்கவங்க, அவங்க அளவுக்கு செய்தா தான் ஜெயிக்க முடியும்.. அத விட்டுட்டு இரட்டை வேடம் போட்ட??? சச்சின் உட்பட எல்லோரையும் தான் கும்முவாங்க..

மியான்டாட்க்கு கடைசி பந்துல 6 ரன் கொடுத்த சேத்தன் சர்மாவை கும்மாத கும்மா?? ரன் எடுக்கலனா கும்மினாங்க? உன்னால முடிஞ்ச பவுலிங்ல நீ சரியா பன்னலயேனு தான் கும்மினாங்க தல..

உதாரணத்துக்கு தெரியாத்தனமா கிரிக்கெட் விளையாட்ட எடுத்து கும்மிட்டீங்களே தல..

கிரிக்கெட்ல சரியா, சமமா தான் கும்முறாங்க, சச்சின் ல இருந்து ஹர்பஜன் வரைக்கும்.. அரசியல்ல தான் இப்படி பார்த்து பார்த்து கும்முவாங்க.. சச்சின கும்முற அளவுக்கு ஹர்பஜன கும்மகூடாதுனு அவங்களே ஒரு வரைவு வெச்சிகிட்டு..

இந்த பாயின்ட் மனசுல வந்த உடனே உங்களுக்கு செம கரெக்ட்டுனு பட்டிருக்கும் தல.. எனக்கே தலைப்பை படிச்சு அப்படி தான் இருந்தது.. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.. மெதுவா யோசித்து பார்த்தாதான் புரியுது.. நீங்களும் யோசிங்க தல புரியும்..

சரி பதிவர்களே வாங்க , உங்க பங்குக்கு என்னையோ இல்ல குழலியையோ கும்மிட்டு போங்க.. ஆனா ஒன்னு.. பதிவோட அளவு, எழுத்து நடை எல்லாத்தையும் பார்த்து கூட்டி குறைச்சு கும்மாதீங்க.. ஒரே அளவுல கும்மிட்டு போங்க.. !

ரொம்ப கும்மிட்டேனா தல?? :)

5 கருத்துக்கள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/ரொம்ப கும்மிட்டேனா தல?? /

இல்ல, நாங்கதான் ரொம்ப குழம்பிட்டமா? :)

We The People said...

/ரொம்ப கும்மிட்டேனா தல?? /

இல்ல, ரெம்ப குழம்பிட்டீங்க :)

யார் எந்த பாயண்டு சொன்னாலும் சரியா படுதே தல ஏன் அது??? நீங்க சொன்னது சரியா படுது! குழலி சொன்னதும் சரியா படுது! லக்கி சொன்னது சரியா படுது... என்ன சொல்லறதுன்னே பிரியலையே தல...

நாங்க தான் ரெம்ப குழம்பிட்டமோ?? ஒன்னியும் பிரியலையே!!

வீ. எம் said...

நன்றி சுந்தர் * we the people,


இல்ல, நாங்கதான் ரொம்ப குழம்பிட்டமா? :)
கரெக்டுங்க.. நானே குழம்பி போய் தான் இந்த இந்த பதிவு போட்டேன்..

/யார் எந்த பாயண்டு சொன்னாலும் சரியா படுதே தல ஏன் அது??? //
என் வேலையை கரெக்டா பன்னிட்டேன்னு தெரியுது தல, சந்தோஷம்.. உங்க பங்குக்கு நீங்க ஒன்னு போடறது :)

Unknown said...

லாஜிக்கை லாஜிக்காலேயே போட்டு தாக்கியிருக்கீங்க.. சிந்திக்கட்டும் குழலி

Anonymous said...

ராமதாஸ் பத்தி என்ன சாப்ப்ட் அப்ரோச்.. கருணாநிதிக்கு எம்ம காரமான அப்ரோச் அவர் பதிவுல..