Showing posts with label ஜாக்கி. Show all posts
Showing posts with label ஜாக்கி. Show all posts

தசாவதாரம் - ஜாக்கி வருகை - துக்ளக் விழா - மோடி வருகை - வலைப்பதிவர் பார்வைகள்

தசாவதாரம் - ஜாக்கி வருகை - துக்ளக் விழா - மோடி வருகை - வலைப்பதிவர் பார்வைகள் .

திரு டோண்டு அவர்களின் பதிவில் இருந்து ஒரு பகுதி கீழே:

நன்றி திரு டோண்டு ராகவன் சார்,

//ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜாக்கி சான் படங்களுக்கு இந்தியாவில் விநியோகஸ்தர். ஆகவே ஜாக்கி சானின் பார்வை கோணத்தில் ரவிச்சந்திரன் முக்கியமானவர். அவர் அழைக்கப்பட்டார், வந்தார், சென்றார். அவ்வளவே. இதில் சம்பந்தப்பட்ட எல்லொருக்குமே - ஜாக்கிசான் உட்பட - லாபம். இதில் என்ன பிரச்சினை? தசாவதாரம் படத்துக்கு நல்ல விளம்பரம்.//


இந்துத்வா அடிப்படையில், சோ வும் மோடியும் நெருங்கிய நன்பர்கள், ஆர் எஸ் எஸ் கூட்டாளிகள். ஆகவே சோவின் பார்வையில் மோடி முக்கியமானவர், மோடியின் பார்வையில் சோ முக்கியமானவர். இவர் பாசத்தோடு அழைத்தார், அவரும் நேசத்துடன் வந்து சேர்ந்தார். அவ்வளவே, இதில் என்ன பிரச்சனை. அவர்கள் வந்ததில், துக்ளக் பத்திரிக்கை, இந்துத்வா கோஷ்டிக்கு கூடுதல் விளம்பரம்.. இதற்கு ஏன் அனைவரும் அலட்டிக்கொள்ளவேண்டும்?


நாம் ஏன் மெனக்கெட்டு , 32 பக்க குறிப்பு எடுத்து , 3 பகுதிகளாக பதிவு போட்டு, அவர் மரண வியாபாரியா இல்லையா என்று சன்டை போட்டு அடித்துக்கொள்ளவேண்டும்.

அவர் வந்தார் போனார், அறுசுவை உணவு தேவைப்பட்டது, உடனே அம்மா வீட்டுக்கு போய் , அம்மா கையால் அறுசுவை உணவருந்தினார், வயிரு நிறைந்தது.. சந்தோஷமாக தன் மாநிலம் திரும்பி சென்றார். முடிந்துவிட்டது..

இங்கேயுள்ள பத்திரிக்கைகள் தான் அவர் வருகையை பயன்படுத்தி, இத்தனை அயிட்டம், கூட்டு பொரியல் முதல், வத்தல் ஊறுகாய் வரை பக்கம் பக்கமாக எழுதி கல்லா கட்டியது,

வலைப்பதிவர்கள் தங்கள் பங்குக்கு மெனகெட்டு செல் போன் கூட எடுத்து செல்லாமல், அந்த கூட்டத்துக்கு சென்று , கஷ்டப்பட்டு சப்பனமெல்லாம் போட்டு உட்கார்ந்து, அங்கே கூட்டம் அப்படி, இப்படி என்று புளங்காகிதம் அடைந்து, பதிவு போட்டு, கடன் வாங்கி படமெல்லாம் போட்டு HIT ரேட் எகிறவைத்துகொண்டனர்..


மொத்தத்தில் தசாவதாரம் பட கேசட் விழாவிற்கு ஜாக்கிசான் வந்தது எப்படி ஜஸ்ட் லைக் தட் ஒரு நிகழ்வோ அது போலவே துக்ளக் விழாவிற்கு திரு நரேந்திர மோடி வந்ததும். இரண்டுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை...


ஆனால் சில பதிவர்கள் தான் , அடா அடா என்ன ஒரு கூட்டம் , என்ன ஒரு ஒழுங்கு, அவரின் பேச்சு என்று மோடி வருகைக்கு பில்டப் கொடுப்பதும், என்ன பெரிய விஷயமிது , ஜாக்கி வந்தார் , போனார் .. அவர் விருப்பத்துக்கு தண்ணிர் குடித்தார், இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றும் எழுதி டென்ஷன் ஆகிறார்கள்.. கலைஞர், கமல்... என்று அதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம்.. :) யாமறியோம் பராபரமே