2011 இதுவும் நடக்குமோ?? நடந்தாலும் நடக்கலாம்


கூட்டணிக்குள்ளே முட்டல் மோதல் , எதிரிக்கு எதிரி நன்பன், குழிபறிப்பு, கூட்டனி பேரம் என பரபரப்பான இன்றைய அரசியல் சூழ்நிலையில், மேலும் அரசியலில் எதுவும் நடக்கும் என்ற நிலையிலும் ஒரு வேளை இப்படி நடக்குமோ என்ற் தோண்றியதால் வந்த பதிவு இது..

வருடம் : 2011 பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஞாயிறு
மாலை 7 மனி.
இடம்: சென்னை தீவுத்திடல்.

ஆங்காங்கே கட்சிக் கொடிகள், டிஜிட்டல் பேனர், வானுயர கட் அவுட், விறு விறுப்பான வேர்கடலை, கட்சிக்கொடி, தலைவர்கள் படம் பொறித்த பேட்ஜ், கீ செயின் , டீ காபி, சிகரெட் வியாபாரம், வண்ண விளக்குகள், அலறும் மைக் செட்.. எங்கெங்கும் மக்கள் தலை..

உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேனுமா , இது வேறென்றும் இல்லை, 2011 தமிழகசட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டமென்று?
இதோ வட்டம் , சதுரம், முக்கோனம், வட்டதுக்கு உள் வட்டம், துண்டு துக்கடா முதல் மைக் செட்காரர் வரை பேசி முடிக்க.. கட்சியின் முன்னனியினர் முறை ஆரம்பம்..

மாவட்டம் ஒன்று ஒலிப்பெருக்கியில் வந்து.. இப்போது நமது கழகத்தின் துனைப்பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் ஓ பி அவர்கள் உங்களிடையே உரையாற்றுவார்....அவருக்கு 1442 வட்டத்தின் சார்ப்பில் இந்த பொன்னாடை.... .

என் காவல் தெய்வம் , இதயத்தலைவி அம்மாவின் பொற்பாதம் தொட்டு என அரம்பித்து சுமார் 15 நிமடம் ஓ பி ஸ் ஓட்டு கேட்டுவிட்டு போக..
இப்படியே கூட்டணி கட்சிகளின் இரண்டாம் கட்டத்தலைகள் 15 , 15 நிமிடம் முடித்து ..

நீங்கள் எல்லாம் ஆவலோடு காத்திருக்கும் நம் அன்புத்தாய், தங்கத்தாரகை , தமிழர்களின் தாய், புரட்சித்தலைவி அம்மா பேசுவார் என மைக் அலறி, பொருத்த கோஷம், விசல், கைத்தடலுக்கு பிறகு ஜெ மைக் முன்னே வந்து

கனீர் குரலில் ஆரம்பிக்கிறார்.

என்னை வாழ வைக்கும் அன்புத்தெய்வங்களாகிய புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே, உங்கள் அன்புச்ச்கோதரி, உங்கள் அன்புத்தாயின் வணக்கங்கள்...

யாரிந்த விஜயகாந்த் எங்கிருந்து வந்தார், அவர் என்ன என்னைப்போல மக்கள் பிரச்சினையில் பங்கெடுத்து சிறைச்சென்று சொல்லொன்னா துயரங்கள் அடைந்து பின்பு கட்சி ஆரம்பித்தாரா? இல்லையே, அவர் ஒரு நடிகர், சினிமாவில் வாய்ப்பு போய்விட்டது , சேர்த்த சொத்தை காப்பாற்ற கட்சி ஆரம்பித்து இன்று தமிழக்த்தில் ஆட்சி பிடிப்பேன் , நல்லாட்சி தருவேன் என்று சொன்னால் நீங்கள் எல்லாம் நம்புவீர்களா?

விடுதலைபுலிகளுடன் தொடர்பில் இருந்தவர் தானே இந்த வை கோபாலசாமி? எப்படி அவர் அரசியலுக்கு வந்தார் என்று நான் இங்கே சொன்னால் அவர் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்??

கடந்த வருடம் கார்டன் வந்த போது என்னிடம் அவர் நடந்துக்கொண்ட முறை பற்றி நான் இங்கே சொன்னால், வை கோ நிலை என்ன ஆகும் தெரியுமா?

உங்கள் தாயிடம் தவறாக நடப்பவர்களை நான் தடுத்தாலும் நீங்கள் சும்மா விடுவீர்களா??

விட மாட்டோம் விட மாட்டோம் என்று கூட்டத்தில் குரல்..

ராமதாசு பற்றி பேசவே எனக்கு நா கூசுகிறது..

ஒன்றுக்கும் உதவாத இந்த காங்கிரஸ்.. பிச்சு போட்ட ஜிலேபி மாதிரி கோஷ்டி கட்சி அதுக்கு ஒரு தலைவர்..

காவி கட்சி பா ஜ க விற்கு தமிழகத்தில் முகவரி தந்தது யார்? உங்கள் அன்புத்தாய் தானே?? நான் இல்லையென்றால், யாருக்கு வாஜ்பாய் அத்வானி இல கனேசனை தெரிந்திருக்கும்?

இவர்கலெல்லாம் என்னைப்பார்த்து கேட்கிறார்கள் ஏன் கருணாநிதியுடன் கூட்டணி சேர்ந்தாய் என்று.. (லேசாக இடது பக்கம் தலை திருப்பி மேடையில் அமர்ந்திருக்கு கலைஞரை பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரிக்கிறார் , கலைஞரும் அவரின் டிரேட் மார்க் புன்சிரிப்பை விடுகிறார்).

இவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிகொள்கிறேன், என் அருமை அண்ணன் தமிழின தலைவர் டாக்டர் கலைஞரோடு நான் சேர்ந்திருப்பது ஏற்ப்படுத்தப்பட்ட கூட்டணியல்ல, இது அமைந்த கூட்டணி, சரியான கூட்டணி.

ஆயிரம் ஆயிரம் கருத்து மோதல் இருந்தாலும் என் அண்ணன் கலைஞரை நான் என்றாவது தவறாக பேசியிருப்பேனா? இல்லை அவர் தான் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கியிருப்பாரா?
சில காலம் வேறு வேறு கூட்டணியில் இருந்தோம் , அது காலத்தின் கட்டாயம். அதனாலேயே எங்களின் பாசமிக்க கடந்தகாலம் மறைந்துவிடுமா என்ன?

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தே மு தி க தலைவருக்கு இதெல்லாம் எப்படி தெரியும்..

என் அன்பு அண்ணன் தலைவர் கலைஞரின் அன்பு புதல்வர் தன் சிறு வயதிலே என்னை பாசத்தோடு அத்தை அத்தை என்று அழைத்ததை இன்றும் நினைத்தாலும் என் கண்கள் கலங்கும்.

விஜயகாந்திற்கு தெரியாது , ஆனால் வை கோவை கேட்கிறேன்., உங்களுக்க் என்ன ஆயிற்று?

வாழும் வள்ளுவர் தலைவர் கலைஞரின் இல்லத்துக்கு 1980களில் நான் வரும்போதெல்லாம் எனதருமை அண்ணி தயாளு அம்மா அவர்கள் என்னை பாசத்தோடு அரவனைத்து காபி கொடுத்த காட்சியெல்லாம் நேரில் பார்த்தவர் தானே நீங்கள். இன்று ம தி மு க என கட்சி ஆரம்பித்தும் உங்களுக்கி செலக்டீவ் அம்னிசீயா வந்துவிட்டதா??

என் அண்ணன் கலைஞருக்கு ராமாதாஸ் கூட்டனிக்கும் குடைச்சல் தந்த போதெல்லாம் நான் பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை என் உடன் பிறவா தோழிக்கு தெரியும். போக்குவரத்து நெரிசல் காரணமாக போயஸ் தோட்டத்தில் இருந்து கோபாலபுரம் சென்று அண்ணனுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் , தொலைப்பேசியில் நான் அழுத அழுகை கேட்டு தானும் அழுத என் அருமை அழகிரிக்கு தெரியும்.

தலைவரின் இல்லத்திற்கு சொல்லும்போதெல்லாம் நான் வாங்கி செல்லும் பிஸ்கெட் பொட்டலுத்துக்கு தளபதியும், மதுரை அஞ்சாநெஞ்சனும், என் அருமை கனிமொழியும் சண்டை போடும் காட்சி என் கண்களில் இன்றும் இருப்பதை யாரிவார்.

இத்துனை பாசப்பினைப்போடு வாழ்ந்த, வாழ்ந்து வரும் நாங்கள் அமைத்த கூட்டு பற்றி தவறாக பேசிட எப்படி உங்களுக்கு மனம் வருகிறது .. நீங்கள் எல்லாம் அரக்கர்களா??

இந்த அரக்க கூட்டத்தை அழிக்க, இதோ என் ஆருயிர் அண்ணன், பாச பினைப்பு, சங்கத்தமிழ் தந்த தலைவர் கலைஞரின் துனையோடு இதோ புறப்பட்டுவிட்டாள் உங்கள் அன்பு அன்னை.. என் ரத்தத்தின் ரத்தங்களே, அண்ணனின் உடன்பிறப்புக்களே.. உங்கள் துனையோடு....


தொடரும்....

தவறாமல் ஜெ உரை தொடர்ச்சியும், கலைஞர் உரையையும் இரண்டாம் பாகத்தில் படிக்க வரவும்

- வீ எம்

7 கருத்துக்கள்:

Unknown said...

Super pa

சின்னப் பையன் said...

:-))))))))))))))

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ச்சின்னப்பையன், நெல்லை காந்த் அவர்களே.
----------------------
:-)))))))
:-)))))))))))))))))))))

//Super Pa//
Thanks Pa

வாக்காளன் said...

கலக்கல் கற்பனை வீ எம்.. சூப்பர்

வீ. எம் said...

Thanks Vaakalan,VM

வீ. எம் said...

mr Anony... Thanks for visiting all my post and giving me the same comments as you had given here.

Hope you are feeling happy now. Good! Get back and Relax.


You have the guts only to write in the name of an Anony. Thats fine..

Anyway, i am not at all hurt.

Bye
VM

tommoy said...

நடந்தாலும் நடக்கலாம். சூப்பர்