சிறுகதை - முகமூடி

புதியதாக வாங்கிய ஹோன்டா சிட்டியை நிறுத்திவிட்டு, வீட்டினுள் நுழைந்தான்.

படபடப்புடன் அவன் மனைவி ஓடி வந்தாள்..என்னங்க ! என்னங்க !!.. பதட்டத்துடன் அழைத்தாள்

என்ன ஆச்சு சரளா , என்ன இவ்ளோ பதட்டமா இருக்கே?

உங்க தங்கச்சிய என்னனு கேளுங்க.. படபடப்பு மாறாமல் சொன்னாள்..ஏன் என்ன அச்சு

இப்போ , சொல்லுடி என்ன ஆச்சு ?? ...

அவளை இன்னைக்கு சாயந்திரம் தி.நகர் ல ஒரு ரெஸ்டாரண்டல பார்த்தேங்க, யாரோ ஒரு பையனோட,அவங்க பேசிட்டு இருந்ததை பார்த்தா எனக்கு சந்தேகமா இருந்தது..வீட்டுக்கு வந்து விசாரித்து பார்த்தாகாதல் னு சொல்றா.. மூச்சை நிறுத்தாமல் சொல்லி முடித்தாள்..

தேவி, சற்று அதிகப்படியாகவே சத்தம் போட்டு தன் தங்கையை அழைத்தான்..

மாடியறையில் இருந்த தேவி, தயக்கமாக வந்து நின்றாள்... ஏதும் பேசவில்லை..

உங்க அண்ணி என்னமோ சொல்றாளே என்னது அது?

இல்லைனா அது வந்து.. வந்து...தேவி மென்று விழுங்கினாள்

வந்து ,போயி எல்லாம் வேண்டாம்..என்ன விஷயம்னு சொல்லு, எரித்துவிடும் பார்வை பார்த்துக்கொண்டே கேட்டான்.

வந்து...அவர் பெயர் சுந்தர், என் கூட காலேஜ்ல படிக்கறார், ரொம்ப நல்லவர், பி இ., இறுதியாண்டு, ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியுல ஒரு மிக பெரிய நிறுவனத்துல தேர்வாகிட்டாரு.. இன்னும் 6 மாசத்துல கை நிறைய சம்பாதிப்பார்னா...வேக வேகமாக சொல்லிமுடித்தாள்

நம்ம அளவுக்கு வசதியான குடும்பமா???

அப்படி இல்லைனா, ஆனா நல்லா சம்பத்திச்சு வசதியா வந்துடுவாருனா..எனக்கு நம்பிக்கை இரூக்கு..

எந்த ஊரு பையன்??

இங்க தான்னா..மெட்ராஸ்ல, கே கே நகர் ல இருக்காரு....

என்ன சாதி ?

"............." சாதி வகுப்பை சார்ந்தவர்னா அவர்..

"........." சாதியா?? நாம என்ன சாதினு தெரியுமா உனக்கு???? நம்ம சாதிய விட மதிப்புல குறைஞ்சது அந்த சாதினு தெரியுமா உனக்கு?
இல்லைனா வந்து , ரொம்ப ரொம்ப நல்லவர்னா... அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னா.. ஒரு வருஷமா நாங்க ரொம்ப சின்ஸியரா.. அவள் முடிக்கும் முன்பே.....

அடி செருப்பால, என்ன தைரியம் உனக்கு..என்கிட்டயே இப்படி பேசுறியா?? எங்கே இருந்து வந்துச்சு இவ்ளோ தைரியம்..?? சாதி விட்டு சாதி மாத்தி கல்யாணம் பண்ணி கொடுத்தா என் கவுரவம் என்ன ஆகறது.. மரியாதையா சொல்றேன் கேட்டுக்கோ..காதல் , கத்திரிக்கா எல்லத்தையும் மூட்டைகட்டி வெச்சிட்டு, ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ..இல்லை காலேஜும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம்..வீட்ல இரு.. சீக்கிரமே நம்ம சாதில ஒருத்தனை பாக்கறேன்..கழுத்த நீட்டு.... மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்..

இல்லனா, அவர் தான்.. முடிவு பண்ணிட்டேன்னா ..அவள் முடிக்கும் முன்னரே ஆக்ரோஷமாக கத்தினான்வெட்டி போட்டுறுவேன் ரெண்டு பேரையும்..தெரியும்ல உன் அண்ணனை பத்தி உனக்கு..

அண்ணா, நா சொல்றதை கொஞ்சம்.............................

ஒரு மயி.... கேக்க முடியாது...சரளாஆஆஆஆ ... அடித்தொண்டையில் இருந்து கத்தினான்.... அருகில் ஓடி வந்த சரளாவை பொலேரென அறைந்தான்.. என்னடி பன்ற வீட்ல.. 1 வருஷமா இந்த பொட்ட நாயி ஊர் மேயுது... இது தெரியாம........ உன்னை வெட்டுனா சரியாபோயிடும்..
இதோ பாரு...நீ இனிமே காலேஜுக்கு போக வேண்டாம்.. அடுத்த மாசமே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்றேன்...

முடியதன்னா.. நான் அவரை தான் கல்யா.....அவள் முடிக்கும் முன்பே பளாரென உதை,

கன்னத்தில் அறை விழுந்தது.. "................ அம்மா , அப்பா இல்லாத பொன்னுன்னு கொஞ்சம் செல்லமா வளர்த்தா இவ்ளோ தூரத்துக்கு ஆகிட்டியா நீ" என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு.. போடி உள்ளே.. முடியை பிடித்து இழுத்து சென்று ஒரு அறையில் தள்ளி கதவை சாத்தினான்..

ஜன்னல் வழியாக அவளை பார்த்து உறுமினான்.. பேரு என்ன சொன்னே... சுந்தரு தானே.. இறுதியாண்டு...நாளைக்கு காலைல அவனை கால் வேற , கை வேறயா பிரிச்சு ஆஸ்பத்திரில படுக்க வெக்கறேன் பாரு..

உடனடியா தொலைபேசி எடுத்து நம்பர் சுழற்றினான்..

"..டேய் சந்தானம், நான் தான் பேசறேன்... அஞ்சு லட்சம் ஹாட் கேஷ் வாங்கிகோ... சுந்தர்னு பேரு... டி எஸ் ஆர் என்ஜினியரிங் காலேஜ், கடைசி வருஷம் .. கே கே நகர்ல இருந்து வர பையன்.. காலைல பதினோரு மனிக்கு அவன் கை, கால் ஒடஞ்சி ஆஸ்ப்பத்திரில இருக்கான்னு தான் எனக்கு நியுஸ் வரனும்... புரிஞ்சுதா?"
படாரென லைனை கட் செய்தான்...

சரளா , இங்கே வா, நல்லா கேட்டுக்கோ, அவ அந்த அறைய விட்டு வெளிய வரக்கூடாது...சாப்பாடு , தண்ணி எல்லாம் அங்கே தான்.. புரிஞ்சதா...

சரிங்க , தலையாட்டினாள்....

கோபத்தில் கன்கள் சிவந்திருந்தது... பாக்கெட்டை துழாவி.. கிங்க்ஸ் சிகரெட் பாக்கெட் எடுத்து , ஒரு சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தான்... புகையை ஆவேசத்துடன் இழுத்து விட்டான்...

செல்போன் சினுங்கியது, எடுத்து ஹலோ என்றான்.."...ஹ்ம்ம் ஓகே சார், நிச்சயமா ... முடியும். சார்.. காலையில ரெடியா இருக்கும் ..கவலைபடாதீங்க.. இல்லை சார், எனக்கு புரியுது.. சரி சார்... ஒகே ஷ்யூர் , முடிஞ்சுடும் .. நீங்க கேட்ட மாதிரி நல்லா வரும் நம்பிக்கையா இருங்க , எஸ்..10 மணிக்கு ரெடியா இருக்கும்.. ஒகே...குட்நைட் சார்"

செல்போனை அனைத்து, மேஜை மீது தூக்கி எறிந்தான்..

சரளா , ஒரு கப் டீ எடுத்துட்டு வா.. அடுத்த 5 நிமிடத்தில் டீ வந்தது .. இரண்டு சிப் பருகினான்...ஒரமாக சரளா ஒடுங்கி நின்றிருந்தாள்...

இதோ பாரு, நாளைக்கு காலையில முடிச்சு தர வேண்டிய வேலை...எப்படியும் முடிக்கனும்னு வந்தேன்.. எல்லாம் பாழ்.. என் மூடே போச்சு இப்போ.. ..ஆனா வேற வழியில்லை முடிச்சு தரேனு சொல்லிட்டேன்.. இப்போ போன் கூட வந்தாச்சு.. முடிச்சே ஆகனும்.. நீ ·ப்ளாஸ்க்ல டீ போட்டு வெச்சிட்டு , அப்படியே கீழே என் சிகரெட் பாக்கெட் இருக்கு எடுத்து வந்து கொடுத்துட்டு போய் அந்த சனியன் கூட படு.. நான் இந்த வேலைய முடிச்சுட்டு காலையில பேசிக்கிறேன்... சரியா??
சரியென்று அவன் சொன்னபடியே செய்துவிட்டு சென்றாள் சரளா..
மற்றொரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, மேஜை மேலிருந்த பேப்பர், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தான்

"......யோவ், என்ன மனுஷன்யா நீ, நீயெல்லாம் ஒரு பொறுப்பான அப்பனா? தூத்தேரி...என்னய்யா உன் பொன்னு ஆசைப்பட்டுச்சு?? கூட படிக்கறவனை காதலிக்குது.. காதலிக்கறது அவ்ளோ பெரிய குத்தமாயா??? சாமிங்க கூட காதல் பன்னுச்சுய்யா..படிச்சது இல்லையா நீ. இதோ பெரிசா மாட்டி வெச்சி கும்பிட்டுக்குனு வரீயே முருகரு...அவரு கூட காதக் கல்லானம் தானேயா பன்னாரு..
என்னயா பெரிய சாதி. உலகத்துல ரெண்டே சாதி தான் இருக்குய்யா ஒன்னு ,மனுச சாதி , இன்னொன்னு மிருக சாதி... காதல சேத்து வெச்சி நீ மனுச சாதியா இருக்கனுமா ..இல்ல சாதி வெறி பிடிச்ச மிருக சாதியா திரியனுமானு நீயே முடிவு பன்னுயா...
சாதி சாதி னு ஏன்யா இப்படி சாதி பைத்தியம் புடிச்சு, உன் பொண்ணு வாழ்க்கைய பாழடிக்கப்பாக்கற??காதலிக்கறவன் நல்லவனா , உன் பொண்ண கடைசி வரைக்கும் கண் கலங்காம காப்பாத்துவானானு பாருய்யா... அத உட்டுட்டு..சாதி , மதம்னு ... ஏன்யா இப்படி மனுசன கூறு போட்டு பாக்குறீங்க?
ஏன்யா.. நீ என்னய்யா உசந்த சாதின்றதால அம்மா வவுத்துல 15 மாசமா இருந்தே?? எல்லாரும் 10 மாசம்தான்யா...
இத பாரு.. இப்போ மட்டும் நீ நம்ம ராதாம்மா காதலுக்கு சரி சொல்லாங்காட்டி போன, நானே மொத ஆளா நின்னு அந்தம்மா கூட்டிட்டு போயி அந்த பையனக்கு கட்டி வெப்பேன்..அதனால என் உசிரு போனா கூட கவலையில்லை..சொல்லிட்டேன்...
உங்க வூட்டு சோத்த துன்னுட்டேன்யா, அதான் இப்படி கொஞ்சிக்கினு இருக்கே..இல்ல மவனே...எல்லவனையும் வகுந்துடுவேன்..
ராதாம்மா இந்த வேலைக்காரன் இருக்கான்மா.. கவல படாம தெகிரியமா இரு.. ரெண்டுல ஒன்னு பாத்துடலாம், உனக்கும் அந்த கனேசுக்கும் தான் கல்லானம் , என் தலையே போனாலும் இது நடக்கும்..இது எங்கம்மா மேல சத்தியம்"

திரும்ப திரும்ப படித்து பார்த்து, சில மாற்றங்களை செய்தான்..

மறுநாள் காலையில் தருவதாக ஒப்புக்கொண்ட "காதல் சாதி" திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் குப்பத்து கதாநாயகன் பேச வேண்டிய அனல் பறக்கும் வசனத்தை எழுதி முடித்த திருப்தியில் பேனாவை மூடிவைத்து விட்டு மற்றொரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான், வேகமாக வளர்ந்து வரும் இளம் திரைப்பட வசனகர்த்தா வித்யபாரதி..

அடுத்த அறையில்.. அழுது அழுது வீங்கிய கண்களுடன், சுந்தருக்கு எதுவும் ஆகிவிட கூடாதென கடவுளை வேண்டியவாறு நொறுங்கி போய் படுத்திருந்தாள் தேவி.....

24 கருத்துக்கள்:

துளசி கோபால் said...

பரிசுக்கு ஏற்ற கதைதான்.

வாழ்த்துக்கள்.

துளசி அக்கா

ஏஜண்ட் NJ said...

நல்ல கதை

இந்தக் கதையின் மூலம், சமூகத்தில் சாதியின் தாக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள் வீ.எம்.

முகமூடி said...

வாழ்த்துக்கள் வீ.எம்

(காப்பிரைட் செய்யப்பட்ட நம்ம பேர எல்லாரும் அனுமதி இல்லாம இப்படி உபயோகிக்கிறாங்களே... காப்பிரைட் ஆக்ட் படி வக்கீல கலந்து ஆலோசிக்க வேண்டியதுதான்)

தகடூர் கோபி(Gopi) said...

சூப்பர் கதைங்க..

NambikkaiRAMA said...

வீ.எம்! பொதுவா எனக்கு கதை அடிப்பதில் அவ்வளவா ஞானம் கிடையாது. இருப்பினும் உங்க கதையை விரு விருப்போடு என்னை படிக்க வச்சிட்டீங்க . வாழ்த்துக்கள்!

Sud Gopal said...

நல்லா இருக்குங்க.
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

கலை said...

விறுவிறுப்பாக போன ஒரு அருமையான கதை. உங்கள் கதை சாதீயம் எத்தனை கீழ்த்தரமானது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது மட்டுமல்லாமல், ஒரு மனிதனுக்குள் இருக்கக் கூடிய முரண்பட்ட பாத்திர அமைப்புக்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

வீ. எம் said...

படித்தவர்களுக்கும், கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாமல் படித்துவிட்டு மட்டுமே போன அனைவருக்கும் நன்றி, நன்றி

துளசியக்கா,
பரிசு கிடைக்குதோ இல்லையோ,,,நீங்க சொன்ன அந்த வார்த்தை ..அது போதும்.. :)

ஞான்ஸ்,
மிக்க நன்றி, இந்த கதையை நேற்று இரவு 11.00 - 12.30 மனிவரை எழுதினேன்.. அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த காரணத்தால், விளக்கெல்லாம் அனைத்துவிட்டு ஒரு சின்ன இரவு விளக்கின் ஒளியில் எழுதினேன்..
பரவாயில்லை..இருந்தாலும், கொஞ்சம் அதிகமாகவே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளேன் என்பது தங்கள் கருத்து மூலம் புரிகிறது.

முகமூடி தலைவா,
என்ன இது சின்னபுள்ள தனமா, காபிரைட் அது இதுனு??? ஹ்ம்ம்ம்ம்
நயகரா நீழ்வீச்சிக்கு ஏது காபிரைட்???? தாஜ் மஹாலுக்கு ஏது காபிரைட், டைடானிக் ஷிப் க்கு ஏது காபி ரைட்..??????
சின்ன சின்ன மேட்டருக்கு தான் காப்பிரைட் தலைவா !! புரியுதா??

அப்புறம் பாருங்க உங்க ப ம க தொண்டன் திறமைய... கதை போட்டி வெச்சவரு பேர வெச்சே ஒரு கதை எழுதியிருக்காரு.. :)

கோபி,
சூப்பர் கமெண்ட்டுங்க. short and sweet.! நன்றி


பா. ராமா,
நன்றி, அதே விறு விறுப்போட இருங்க..அடுத்த கதை இருக்கு..பாதி :)
அப்புறம், கதை அடிக்க பிடிக்காதா?? பாஸ், கதை அடிக்க/ சொல்ல கத்துக்கோங்க.. சீக்கிரமே உங்களுக்கு தேவைப்படு.. என்ன சொன்றேனு புரியுதா?? புரியும்னு நெனைக்கிறேன்..

சுதர்சன் கோபால்,
ரொம்ப நன்றிங்க.. உங்க வாழ்த்துக்கள் புன்னியத்துல கிடைக்குதானு பார்க்கலாம்.. :)

கலை,
ஊக்கத்திற்கு மிக்க நன்றி
உங்க கருத்துல இருக்க "சாதீயம்" என்ற வார்த்தையை மிஸ் பன்னிட்டு படிச்சுட்டேன்.. என்னடா இதுனு ஆகிப்போச்சு, அப்புறம் தான் சரியா படிச்சேன்..நல்ல வேளை...
நீங்க ஒரு தடவை "சாதீயம்" வார்த்தையை முழுங்கிட்டு படிச்சு பாருங்க :)

அனைவருக்கும் :
இந்த கதை எழுதியதின் பின்னனியை பிறகு சொல்கிறேன்.. (ரிஸ்ல்ட் வந்த பிறகு) .. சற்று சுவாரசியமானது..

வீ எம்

பத்ம ப்ரியா said...

திரு வி.எம் ,

தங்களது இந்தச் சிறுகதை மிக மிக யதார்த்தமாய் உள்ளது..ஒரு சின்ன திரைப்படம் பார்த்ததைப் போல உணர்ந்தேன்... உங்களுக்கு வெற்றிதான்.. ஆனால் தேவி தான் பாவம்.. சுந்தருடன் சேர்த்து வைத்துவிடுங்கள்..ப்ளீஸ்..

பத்மப்ரியா

வீ. எம் said...

மிக யதார்த்தமாக கருத்து தெரிவித்துள்ள பத்மபிரியா மற்றும் மஞ்சுளா இருவருக்கும் மிக்க நன்றி!

;;;;தேவி தான் பாவம்.. சுந்தருடன் சேர்த்து வைத்துவிடுங்கள்..ப்ளீஸ்..;;;;;;
தாராளமாக சேர்த்து வைத்துவிடலாம் பிரியா !! :)

அப்புறம் நானே உங்கள் கதைகளுக்கு ஒரு ரசிகன்... குறிப்பாக உங்கள் தேடல் கதையை சொல்ல வேண்டும்.. நீங்கள் என் கதைக்கு கருத்து சொல்லியிருப்பது மிக்க மகிழ்ச்சி

தங்கள் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி , நன்றி மஞ்சுளா!

வீ எம்

neyvelivichu.blogspot.com said...
This comment has been removed by a blog administrator.
neyvelivichu.blogspot.com said...

நேயர்கள் விருப்பதிற்கேற்ப, தேவி அவள் காதலனுடன் இணைந்துவிட்டாள்..

ஒரு முறை அல்ல இரு முறை.. என் பதிவில்.. கதைகள்

1. எது முகமூடி,

2. தப்புக் கணக்கு

படித்துப் பாருங்கள்..

ஒரு கதை எழுதி அதில் இரு மாற்றுக் கதைகளுக்கு கருத்து தந்த வி எம் வாழ்க

அன்புடன் விச்சு

neyvelivichu.blogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி

வீ. எம் said...

நன்றி விச்சு,
உங்கள் தொடர்ச்சியை ஏற்கனவே படித்துவிட்டேன்.. மிக அருமையாக எழுதி முடித்துவிட்டிருந்தீர்கள்... வாழ்த்துக்கள்..

நேரமின்மை காரணமாக கருத்து போடமுடியல்லை , இப்பொழுது போட்டுவிடுகிறேன்..

வீ எம்

குழலி / Kuzhali said...

வணக்கம் வீ.எம். கதை நன்றாக உள்ளது சரளமாக உள்ளது, முடிவுதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது, ஹி ஹி நமக்கு சோக முடிவு என்றால் கொஞ்சம் சோகம் ஒட்டிக்கொள்ளும், விச்சு தொடர்கின்றார் போல.

வீ. எம் said...

நாளைக்கு ஒரு கதை போடப்போகிறேன்..
அடுத்த கதை பற்றி ஒரு க்ளு... இந்த கதை மாதிரித்தான் அடுத்த கதையும்..ஒரு வலைப்பூக்காரர் பெயர் தான் தலைப்பு !

அன்புடன்
வீ எம்

-L-L-D-a-s-u said...

நல்ல கதை .. ஜாதி இல்லை என வாயளவிலும் எழுத்தளவிலும் *மட்டும்* பேசுவோருக்கு இந்த கதை கொஞ்சமாவது மனதை உறுத்தும் என நினைக்கிறேன்..

பரிசு பெற வாழ்த்துக்கள் ..

kirukan said...

I like the story. Very nice

Ramesh said...

பின்னி போட்டீங்க!

வீ. எம் said...

எல் எல் தாஸ¤, கிறுக்கன், ரமேஷ்,
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மனமார்ந்த நன்றி
வீ எம்

Ganesh Gopalasubramanian said...

வீ.எம் கதை நல்லாயிருக்கு

நேத்தே இந்த கதைய படிச்சிட்டேன். காதல் சாதி அப்படீன்னு நல்லா பாப்புலரான சப்ஜெக்ட தேர்ந்தெடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள். சுவாரஸ்யமாகவும் இருக்கு. ஆனா தலைப்பு தான் நம்ம செலக்டரை ஐஸ் வைக்கற மாதிரி இருக்கு.(பொறுத்தமானதாக இருந்தா கூட). எனக்கு அது மட்டும் கொஞ்சம் நெருடுகிறது.

மத்தபடி புதுசா கதை எழுத வந்தவர் மாதிரி தெரியலையே....

enRenRum-anbudan.BALA said...

VM,

arumaiyAna kathai enpathil aiyamillai !!!! parisu velluvathaRku nissayam vAyppu uLLathu. vAzththukkaL !!!!

tamil said...

வீ.எம் கதை நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்...

வீ. எம் said...

கனேஷ், பாலா, சன்முகி,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
ஆனா தலைப்பு தான் நம்ம செலக்டரை ஐஸ் வைக்கற மாதிரி இருக்கு.(பொறுத்தமானதாக இருந்தா கூட).
கனேஷ்,
ஐஸ் வெக்கறதெல்லாம் இல்லைங்க... கதை எழுத ஆரம்பித்த போது நான் வைத்த தலைப்பு "முரன்பாடு" .. ஆனா முடிக்கும் போட்து மனதில் வந்தது முகமூடி.. கொஞ்சம் டைமிங்கா இருக்குதேனு இதையே வெச்சிட்டேன்.. அதே மாதிரி "மாயாவரத்தான்" க்கு முதல்ல நான் வெச்ச தலைப்பு வெள்ளை மனசு..அப்புறம் கொஞ்சம் கதைல ஒரு ஊர் பேரு வர மாதிரு மாற்றம் செய்து வைத்த தலைப்பு "மாயவரத்தான்" அதே டைமிங் காரணத்துக்காகவே!
ஐஸ் வெக்கனும்னா நாம் "மாலன்" னு வெச்சிருக்கனும்.. :)


மத்தபடி புதுசா கதை எழுத வந்தவர்

ஹ்ம்ம்..புதுசா தெரியல.. ஆனா முதல் கதை "காகித பூக்களும் , கலர் டீவியும்" இதே வலைப்பூவில் மே மாதம் எழுதியதுதான்.. படிச்சிருக்கீங்களா?


//parisu velluvathaRku nissayam vAyppu uLLathu. vAzththukkaL !!!! /
//வீ.எம் கதை நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி பாலா & ஷன்முகி..
பார்க்கலாம்.. நான் ரசித்த பல கதைகள் போட்டில இருக்கு..

வேலவன் said...

2 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எழுதிய கதை, இப்போதுதான் படித்தேன்., மிக அருஅமை. உங்களின் மற்ற பதிவுகளூம் அருமை. உஙகள் பின்னூட்டத்தை பார்த்தால் உஙகளுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்ததாக தெரிகிறது. அப்புறம் ஏன் எழுதுவதை விட்டுவிட்டீர்??