என் புது முயற்சி

எங்கள் அலுவலகத்தில் 5 பேர் ஒரு குழுவாக சேர்ந்து project management related quarterly newsletter (தமிழில் தெரியவில்லை) வெளியிடுவோம்.. வழக்கமாக project management related காமெடி துணுக்குகள், கார்டூன் என்று வலையில் தேடி அதில் project management ஹ¥யுமர் என்ற பகுதியில் போடுவோம்.. ஆனால் ஜுன் மாதம் newsletter வெளியிடப்பட இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் உயரதிகாரி அழைத்து, இந்த newsletter அனைத்து தரப்பினர்களுக்கும் மற்றும் வேறு பல நாடுகளில் உள்ள நமது அலுவலக கிளைகளுக்கும் அனுப்பபடுவதாலும், அலுவலக global copyright and security policy காரணமாகவும் இனையத்தில் வரும் எந்த ஒரு கட்டுரையோ, துனுக்கோ எதுவும் newsletter ல் வரவே கூடாது என்று கூறிவிட்டார்.. என்ன செய்வது என்று சற்று திண்டாடித்தான் போய்விட்டோம்.. கட்டுரை , மற்ற பகுதிகள் எதுவும் பிரச்சனை இல்லை..எப்பொழுதும் நாமாகவே செய்வது தான்.. ஆனால் ஹ¥யுமர் பகுதிக்கு தான் குகூள் சாமி துனை என்றிருந்தோம். இப்பொழுது என்ன செய்வது... அதிலும் newsletter ன் ஹைலைட்டே அந்த ஹ¥யுமர் பகுதிதான்..
எனக்கு ஒதுக்கிக்கொண்ட (இட ஒதுக்கீடு இல்லை) பகுதியில் இதுவும் ஒன்று.. ஆக மற்ற 4 பேரும்.. என்ன செய்வீயோ தெரியாது இன்னும் ரெண்டு நாள்ல ஏதாச்சும் கார்டூன் வேனும். மதன் , அரஸ் இல்ல..யாரை பார்ப்பீயோ தெரியாது என்று சொல்லிவிட... அன்று இரவு வீட்டில் யோசித்துக்கொண்டிருக்கையில் ..நாமே ஏன் ஒரு கார்டூன் போட கூடாது என்ற அந்த விபரீத ஆசை ஏற்பட்டது.. படம் போட தெரியாது... இருந்தாலும் காசா , பணமா செய்து பார்கலாம் என்று முடிவு செய்து, ரொம்ப நேரம் யோசித்து ஒரு இரண்டு, முன்று கரு கிடைத்தது .. ஆனால் கரு நன்றாக இருந்தால் படம் போடுவது எளிதாக இல்லை.. படம் எளிதாக போடமுடியம் ஆனால் நல்ல கரு கிடைக்கவில்லை.. அப்படியே சற்று நேரம் யோசித்து ..கடைசியில் ஒரளவு இரண்டும் சேர்ந்தார்போல் வருவதாக தெரிந்தது.. உடனே எழுந்து லேப்டாப் எடுத்து.. MS paint உதவியோடு சுமார் 1.5 - 2 மணி நேரம் போராடி இதோ கீழே இருக்கும் கார்டூன் போட்டு முடித்தேன்... முதல் முயற்சி, இதுவரை செய்யாத ஒன்று..
இது ஜுன் மாத newsletter ல் வந்தும் விட்டது.. பாராட்டும் கிடைத்தது.. முதல் முறை செய்வதால் யாரும் குறை கண்டுப்பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.. !
சரி, இதை நம் வலைப்பூ நன்பர்களுடனும் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இங்கே பதிக்கிறேன் !!எப்படி இருக்குனு சொல்லுங்க, என் புது முயற்சி !




நன்றி

வீ எம்

27 கருத்துக்கள்:

அன்பு said...

உண்மையிலேயே கலக்கல், முதல் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

Not bad for first attempt! Keep it up.

Mani

NambikkaiRAMA said...

உங்க Time Management சூப்பர்ங்கோ!
ஆங்! படமெல்லாம் வரைவீகளா?

NambikkaiRAMA said...

உங்க Time Management சூப்பர்ங்கோ!
ஆங்! படமெல்லாம் வரைவீகளா?

துளசி கோபால் said...

முதல் படமா? நல்லாத்தான் இருக்கு!!! இன்னும் முயற்சி செய்யுங்க!!!

என்றும் அன்புடன்,
துளசி.

பி.கு: பூனாக் காத்து படம்வரையவும் சொல்லுதுப்பா:-))))

மாயவரத்தான் said...

சூப்பரு.. எப்படி சார் இப்படி எல்லாம் திங்க் பண்றீங்கோ?!

வீ. எம் said...

அன்பு, மனி, பாசிடிவ் ராமா, துளசியக்கா.. எல்லோருக்கும் நன்றி,
/// ஆங்! படமெல்லாம் வரைவீகளா? ///
இதை முடிச்சப்புறம் என்னை நானே கேட்டுக்கிட்ட முதல் கேள்வி இது தான் "அட வீ எம் .. கார்டுன் படமெல்லாம் வரையியா நீ?"

//// பி.கு: பூனாக் காத்து படம்வரையவும் சொல்லுதுப்பா:-)))) ///
தப்பு பன்னிட்டீங்களே அக்கா தப்பு பன்னிட்டீங்களே .. இது நான் பூனா வருவதற்கு முன்னே போட்டுக்கொடுத்துட்டு வந்தேன் !
என்ன இருந்தாலும் சென்னை காத்து சென்னை காத்துதான்..

வீ எம்

தகடூர் கோபி(Gopi) said...

ஏனுங்க, அப்படியாவது டைம் கண்ட்ரோல் ஆச்சா? இல்லாட்டி நல்ல தாம்புக் கயிறா ட்ரை பண்ணிப் பாருங்க :-P

Anonymous said...

நல்ல இருக்குப்பா.

ஏஜண்ட் NJ said...

பணமே செலவு செய்யாம,
சொந்தமா படம் பண்ற ஐடியா....
நல்லாருக்கு!! நல்லாருக்கு!!

- ஞானபீடம். <<== ரெண்டுல நீ ஒன்னத்தொட வாரீயா...! Link-கு... ==>> ஞானபீடம்.

தருமி said...

necessity is the mother of invention - அப்டீம்பாங்களே, அது இப்படிதானோ.
அடுத்ததுக்குக் காத்திருக்கேன்.

கலை said...

ரொம்ப நல்லா இருக்கு. கார்ட்டூனிஸ்டாகவும் கலக்க வாழ்த்துக்கள்.

வீ. எம் said...

மாயவரத்தான், கோபி, மூர்த்தி, பரணீ, ஞான்ஸ், தருமி, கலை, கார்த்திக்ராமாஸ் அனைவருக்கும் நன்றி

//சூப்பரு.. எப்படி சார் இப்படி எல்லாம் திங்க் பண்றீங்கோ//
எல்லாம் உங்க நம்பர் 1 வலைப்பதிவை பார்த்து தான் மாயவர்ஸ்
// இல்லாட்டி நல்ல தாம்புக் கயிறா ட்ரை //
கூடிய சீக்கிரம் தேவைபடும் கோபி...
//எல்லாம் போகப்போக இன்னும் நன்றாக வரைய வரும்//
இப்படி ஊக்கம் தரும் வார்த்தைக்கு நன்றி மூர்த்தி
//நல்ல இருக்குப்பா. //
அப்படியாபா , நன்றிபா!
//<<== ரெண்டுல நீ ஒன்னத்தொட வாரீயா...! Link-கு... /
விளம்பரக்கட்டணம் 1750
ஞான்ஸ் discount - 500 , ஆக 1250 எப்போ தருவீங்க ஞான்ஸ்??
necessity is the mother of invention

சரியா சொன்னீங்க தருமி
.//கார்ட்டூனிஸ்டாகவும் கலக்க வாழ்த்துக்கள். //
அட !! நல்ல ஐடியாவா இருக்கே , கலை !
// :-) //
உங்க படத்தை பார்த்தா பயமா இருக்கு கார்த்திக்..அடிக்க போறீங்களோனு.. நல்ல வேளை :-) போட்டுடீங்க.

வீ எம்

Anonymous said...

Nice Cartoon ,, More than Good for a first timer !
Congrats

Vivek B

குழலி / Kuzhali said...

கேலிச்சித்திரம் மிக அருமையாக உள்ளது, பல இடங்களில் முக்கியமாக மென்பொருள் துறையில் நடப்பது தான் இது...

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

கேலிச்சித்திரம் நல்லாருக்கு!

வீ. எம் said...

விவேக், குழலி, ஷ்ரேயா மிக்க நன்றி
More than Good for a first timer !
Congrats
அப்படியா சொல்றீங்க விவேக்?

முக்கியமாக மென்பொருள் துறையில் நடப்பது தான் இது...
சரியா சொல்றீங்க குழலி, நீங்க எந்த துறையில் இருக்கீங்க.. நான் அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்ததா?
நேரமிருக்கும் போது பதிலனுப்பவும்

கேலிச்சித்திரம் நல்லாருக்கு!
இதை கேட்க எனக்கு சந்தோஷமா இருக்கு ஷ்ரேயா
வீ எம்

enRenRum-anbudan.BALA said...

VM,
கருத்து excellent :) படந்தேன், கொஞ்சம் சுமார் !!!

இருந்தாலும், உங்கள் கன்னி(!) முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது !!!

நீங்களும் இப்படித் தான் TIME MANAGEMENT பண்றீங்களா ??? ஒங்க கம்பெனியை நினைச்சா கவலையா இருக்கு ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

வீ. எம் said...

நன்றி பாலா,
///நீங்களும் இப்படித் தான் TIME MANAGEMENT பண்றீங்களா ??? ///
சமயத்துல, அப்படித்தான் .. வேற வழி :)

படந்தேன், கொஞ்சம் சுமார் !!!

//வாழ்க்கையில போட்ட முதல் படம்ங்க... அதுவும் ms paint ல தட்டு தடுமாறி.. !//
வீ எம்

Anonymous said...

Novel idea to use MS Paint for drawing cartoons. (Atleast I am not aware of)

BTW, I am a new reader to this blog and am new to the BLOG world as well!! Found some very interesting articles!! Keep up the good work folks.

Mey said...

Good one!!!

பத்ம ப்ரியா said...

Hi
VM.. this cartoon is good. And i had read your Bhara "thii" that is too good and humouras. The narration gives the satisfaction of good story.

M. PADMAPRIYA

வீ. எம் said...

marathamillan, "anamika" meyappan and Priya(siragugal)
Thanks to all of you for the comments
Marathamillan
// Novel idea to use MS Paint for drawing cartoons.//
even, I was initially thinking for a long time abt how to do this cartoon.. thought of using symbols in MS word..somehow decided and did with MS Paint.. a trial and run method.. it worked out!
//am a new reader to this blog and am new to the BLOG world as well!!//
welcome and u too can write a blog of ur own , but then a statutory warning : this is a kind of addiction.. :)
thanks for the comment mr.meyyappan
Priya,
I read ur III part of ninaivu pettakam.. when r u planning to come out of SMS and get in to telephonic chat mode?? or is it going to be via sms till the end. i had similar exp.wanted to match it with your story..when is it gonna end?
thanks for ur comment abt barathee.... ! that is the combination of true & imagination !

வீ. எம்

contivity said...

படத்தை விட நீங்கள் சொல்ல வரும் கருத்து நன்றாக (நகைச்சுவையாக) உள்ளது..

Anonymous said...

This is really good for a first timer. Good One Really. do more of this kind

Sandeep

வீ. எம் said...

Hi Sandeep,
Thanks so much for your comments!

V M

Chandravathanaa said...

முதல் முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.