" அவரை தேடி .... "
"ஒருவ"ரை தேடி - தொடங்கிய பயனம்
தூரத்தில் தெரிவது ? நான் தேடியவரோ?
அருகில் சென்றேன், நலமா என்றேன்?
நலமே தம்பி, நீயும் நலமா? - கரகரப்பான கம்பீர குரலில்
நிச்சயம் இவரே அவரென எண்ணி, அவசரமாக
ஐயா, தாங்கள் யாரோ ? என்றேன்
கலைஞர் இவரே, தமிழினதலைவர்
ராஜ தந்திரி , அரசியல் சானக்கியர் , இன்னும் பல பல
அடுக்கின அவரின் தம்பியர் கூட்டம் !
ஏமாற்றம் மட்டுமே எம்மிடம் மிஞ்ச ,
மீண்டும் நடந்தேன் , "அவரை" தேடி
சற்றே தொலைவில் , மற்றொரு உருவம்
நிச்சயம் அவர் தான் , முடிவே செய்தேன்
அருகினில் அமர்ந்து வணக்கம் என்றேன்
திடமாய் அவரும் வணக்கம் என்றார்
தங்களை பற்றி கூறும் என்றேன்
புரட்சிப் புயலாம் , சீறிடும் வேங்கை யாம்..
பளிச்சென சொன்னது பாசறை கூட்டம்..
ஏமாற்றம் மட்டுமே எம்மிடம் மிஞ்ச,
மீண்டும் நடந்தேன் , அவரை தேடி
அரை கல் தூரம் , தனியாய் நடந்தேன்,
கால்கள் வலிக்க சற்றே நின்றேன்
கூட்டம் ஒன்று என்னை கடக்க,
நடுவில் ஒருவர் விறைப்பாய் செல்ல
அருகில் சென்றேன், "அய்யா.." என்றேன்
அடடா வா வா, தெரியுமா என்னை?
உனர்ச்சி வயப்பட உருகியே போனார்
நிச்சயம் இவரில்லை, உணர்ந்தே நானும்
வேறோரு பாதையில் , விரைவாய் நடந்தேன்
வெயில் கொடுமை - வாட்டி எடுக்க,
மரத்தடி நிழலில் சற்றே சாய்ந்தேன்..
வேட்டு சத்தம் - காதை பிளக்க,
அலறி , சுருட்டி எழுந்து அமர்ந்தேன்
ஆயிரக்கனக்கில் வாகனம் தொடர
வந்து இறங்கிய, இவர் தான் அவரோ?
கேட்டே விடுவோம் , வேகமாய் நடந்தேன்
அருகினில் செல்ல முயன்றே தோற்று,
கூட்டத்தில் ஒருவரை ,வாஞ்சையாய் கேட்டேன்
யார் இவர் என நீ சொல்வாய் எனவே !
பொசுக்கும் பார்வையால் பதிலை சொன்னார்
இவர் தான் எங்கள் காவல் தெய்வம்
நிரந்தர முதல்வர், புரட்சித்தலைவி
தெரியாதாடா மடையா என்றார்
நன்றி சொல்லி , வேகமாய் நகர்ந்தேன்
பல மைல் தூரம் நடந்தே முடித்தேன்,
விடுதலை சிறுத்தை , கொள்கை சிங்கம்
தீப்பொறி , தளபதி
காடு வெட்டி, கராத்தே
இன்னும் பலரை வழியெங்கும் பார்த்தேன்.
தேடிய "அவரை" எங்கும் காணாது ,
ஏக்கமாய் நடந்தேன்
நம்பிக்கையோடே நெடுந்தூர பயணம்
"அரசியல்" வீதியில், மீண்டும் தொடர்ந்தேன்
நிச்சயம் ஒரு நாள் "அவரை" காண்பேன்,
நீர் யாரென கேட்பேன் , "மனிதன்" என்பார்,
நம்பிக்கையோடு, காத்து இருப்பேன்
வீதியின் முடிவில், அயர்ந்து அமர்ந்தேன்
நிச்சயம் ஒரு நாள் "அவரை" காண்பேன்
=====
பிடித்திருந்தால், மனதை நிறைத்திருந்தால், 2 நிமிடம் அதிகம் எடுத்து , தங்கள் கருத்தை இங்கே பதிவு செய்து .., நட்சத்திரத்திலும் ஒரு சுட்டு சுட்டுங்கள்... மறக்காமல் ! ! !
மீண்டும் சந்திக்கும் வரை,
வாழ்த்துக்களுடன்,
வீ . எம்