FM - கூறு கெட்ட குறுந்தகவல்

அவ்வப்போது ரேடியோவில் எப் எம் (FM) கேட்பது வழக்கம். அதே போல கடந்த வெள்ளியன்று சூரியன் மற்றும் ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படியே வயாராகா என்ற நிகழ்ச்சி வரும் FM ட்யூன் செய்து கேட்ட எனக்கு அவர்கள் நேயர்களை ஒரு தலைப்பு பற்றி குறுந்தகவல் அனுப்பும்படி கேட்டனர்... அந்த தலைப்பை கேட்டவுடன் எனக்கு சற்று நெருடல் கலந்த அதிர்ச்சி.. அதிமுக்கியமான அந்த தலைப்பு என்ன தெரியுமா??? அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி கொடுத்த தலைப்பு இது தான்...

"காமத்தில் நீங்கள் அமைதியா.. அதிரடியா...??"

என்ன தான் இப்பொழுது குறுந்தகவல் அனுப்ப சொல்வது வாடிக்கையாகிவிட்டது என்றாலும்.. இப்படி ஒரு தலைப்பு தேவையா??

காமம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விசயம் , குறிப்பாக யாரும் தங்கள் துனையுடன் ஈடுபடும் இந்த விசயத்தை வெளியே விவாதிக்க மாட்டார்கள்..

இது கனவன் மனைவி / காதலன் காதலிக்கு இடையில் மட்டுமே இருக்ககூடிய அந்தரங்கம்.. அந்தரங்கத்தையே வெளிச்சம் போடும் ஒரு கேள்வி.. அதிலும்.. பல லட்சம் பேர் கேட்கும் ஒரு ஊடகத்தில் கேள்வியாக வைப்பது.... ???

இதனை ஒரு வியாபார உத்தி என்றோ அல்லது அப்படி கேள்வி கேட்பது அந்த FM நிகழ்ச்சியின் தனிப்பட்ட உரிமை என்று எடுத்துக்கொள்ளவோ என்னால் முடியவில்லை..

அதிலும் .. கேள்வி கேட்ட சிறிது நேரத்தில்.. வந்ததாக வாசிக்கப்பட்ட சில குறுந்தகவல்கள் படிக்கபட்ட போது .. அட முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழர்கள் பலர் இருக்கின்றனர் !! என்று எண்ணத்தோன்றியது..

அதிலும் குறிப்பாக அவர்கள் படித்த ஒரு குறுந்தகவல் :

"எனக்கு அனமதி வழி பிடிக்கும் ஆனால் என் மனைவிக்கு எப்பவும் அதிரடி வழி தான் பிடிக்கும் , ஆகவே நானும் அதிரடி தான்"

உண்மையில் இது யரேனும் அனுப்பியதா அல்லது ஒரு விறுவிறுப்புக்காக வந்ததாக சொல்லி படிக்கப்பட்டதா என்று தெரியவில்லை..

வந்ததாக சொல்லி படிக்கப்பட்டிருந்தால் , அந்த FM நிகழ்ச்சியின் வியாபார உத்தியையும்.. இல்லை உண்மையாகவே வந்திருந்தால்... தன் மனைவியின் அந்தரங்க விருப்பத்தை, இதனை வெளியில் பகிர்ந்திட மாட்டார் என்ற நம்பிக்கையில் மனைவி கூறிய ஒரு அந்தரங்க விருப்பத்தை, தமிழ் கூறும் நல்லுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி பகிர்ந்துக்கொண்ட அந்த தமிழனை மனதாற வாழ்த்தலாம்...வேறென்ன செய்ய??????????????????????????

வீ எம்

28 கருத்துக்கள்:

வீ. எம் said...

Test !!

வெங்கட்ராமன் said...

இதெல்லாம் சும்மா வியாபார தந்திரம்,

வியாபாரம் பண்ண விபச்சாரம் பண்ண கூட தயங்க மாட்டாங்க.


சென்னையில் இருக்கும் FM நான் கேட்கிறதே இல்லை.

Anonymous said...

உங்களின் இந்த பதிவுக்கு காலங்காலமாக கலாச்சாரம் என்ற பெயரில் விவாதிக்கக்கூடாத தலைப்பு என்றும் பேசாப்பொருள் என்றும் 'ஆக்க'ப்பட்ட செக்ஸ் தான் காரணம்...

செக்ஸை பற்றி விவாதித்தால் தவறு, செக்ஸை பற்றி அறிந்துகொள்ளல் பெரும்பாவம் என்று உங்கள் உள்ளத்தே கட்டியெழுப்பப்பட்ட பிற்போக்கு சிந்தனையை களையுங்கள் முதலில்...

இதுபோன்ற விடயங்கள் வெளியே விவாதிக்கப்படும்போது தான் இதில் உள்ள ஆரோக்கியமான விடயங்களும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு புரிதல் உருவாகும்...

ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்துக்கு சமம் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் கூட்டம் எப்படி தெளிவது சொல்லுங்கள் ?????

பார்வையை மாற்றுங்கள் அய்யா...காமாலைக்கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாமே...

வெங்கட்ராமன் said...

/////////////////////////

இதுபோன்ற விடயங்கள் வெளியே விவாதிக்கப்படும்போது தான் இதில் உள்ள ஆரோக்கியமான விடயங்களும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு புரிதல் உருவாகும்...

/////////////////////////

நீங்கள் சொல்வது சரி தான். இலை மறையாக சில விஷயங்கள் இருக்க வேண்டும். மேலும் வானொலியில் விவாதத்தினால் கிடைக்க கூடிய விடை தான் என்ன. . . . . . . . . ?

உங்களைப் போல தெளிவான அறிவோடு அவர்கள் இந்த நிகழ்சியை நடத்த வில்லை. இதில் இருப்பது வியாபார நோக்கம் அது தான் தவறு.

வானொலி என்பதை சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் கேட்கிறார்கள், அதை நிகழ்சியை நடத்துபவர்களும் நாமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Anonymous said...

////வானொலி என்பதை சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் கேட்கிறார்கள், அதை நிகழ்சியை நடத்துபவர்களும் நாமும் கவனத்தில் கொள்ள வேண்டும்./////

குழந்தை அதை கேட்டா ஒன்னும் புரியப்போறது இல்லை...

யாருக்கு புரியுமோ அவங்களுக்கு புரிஞ்சா போதும் இல்லையா...

இன்னைக்கு கெட்டுப்போக 1000 வழி இருக்கு...வானொலியை கேட்டு, அதில் வரும் சர்வேயை கேட்டுத்தான் ஒருத்தன் கெட்டுப்போகனும் என்று இல்லை...

டி.வியில் இல்லாத ஆபாசமா ? திரைப்படங்களில் இல்லாத ஆபாசமா ?

அப்படியே வானொலியில் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் வெறும் திரைப்பட பாடல்கள் மட்டும் ஒலிபரப்பினால் அதில் இல்லாத ஆபாசமா ?

வடுமாங்கா ஊறுதுங்கோ, தயிர்சாதம் ரெடிபண்ணுங்கோ வில் இல்லாத ஆபாசமா ?

இதனை மூன்றுவயது குழந்தை பாடினால் அது காம இச்சையில் பாடுகிறது என்று சொல்வீர்களா ?

அதனால் இதனை தடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூற முடியாது...

நமது பார்வையை மாற்றிக்கொள்வது ஒன்றே சரியான வழி...!!!

வெங்கட்ராமன் said...

இதுக்கு பதில் சொல்லுங்க தல.

மேலும் வானொலியில் விவாதத்தினால் கிடைக்க கூடிய விடை தான் என்ன. . . . . . . . . ?

வீ. எம் said...

நன்றி திரு வெங்கட்ராமன், திரு செந்தழல் ரவி.

//உங்களைப் போல தெளிவான அறிவோடு அவர்கள் இந்த நிகழ்சியை நடத்த வில்லை. இதில் இருப்பது வியாபார நோக்கம் அது தான் தவறு//

மிக சரியாக கூறியுள்ளீர்கள் வெங்கட் அவர்களே.

செந்தழல் ரவி அவர்களே,
நிச்சயமாக, செகஸ் பற்றி விவாதிப்பது தவறு என்ற எண்ணம் எனக்கில்லை.. விவாதிப்பது மிக நல்லது என்பதே என் கருத்து.

இனையத்தளத்தில் , செக்ஸ் பற்றிய பல்வேறு ஆக்கப்பூர்வமான விவாதகள் நடைப்பெறுகிறது .. மேலும் சில பத்திரிக்கைகள் செக்ஸ் பற்றி ஆக்கப்பூர்வமான கட்டுரை, கருத்துகணிப்புகள் வெளியிடுகிறது. அப்போதெல்லாம் நான் பதிவிட்டது இல்லையே..

அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியை நீங்கள் சற்று யோசித்து பாருங்கள்..
வெளிப்படையாக பேசுகிறேன் பேர்வழி என்று இப்படி ஒரு கேள்வியா????
காமத்தில் ஒருவரின் மனைவி அதிரடியா அமைதியா என்று தெரிந்துக்கொள்வது எந்த விதத்தில் செக்ஸ் பற்றிய தெளிவை தரும்? இன்னாரின் மனைவி அந்த விசயத்தில் சூப்பரப்பூ என்று சிலர் சொல்லவைப்பதை தவிர்த்து???

ஒருவர் அதிரடியா அமைதியா என்பதை விட விடை தெரிந்துக்கொள்ள செக்ஸ்ல் பல கேள்விகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். என் தனிப்பட்ட கருத்து மட்டுமே இது..

ஒருவருக்கு மஞ்சள் காமாலை என்பதற்காக அவர் முன் மஞ்சள் பத்திரிக்கையை நீட்டி, அவர் இது மஞ்சளாக இருக்கிறதே என்று சொன்னால்.. ?????????????????

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரவி அவர்களே.

வீ எம்

வீ. எம் said...

//..யாருக்கு புரியுமோ அவங்களுக்கு புரிஞ்சா போதும் இல்லையா...//

மிகச்சரி ரவி அவர்களே..
மூன்று நாள் பிரச்சனை, விந்து பிரச்சனை பற்றி கேள்வி கேட்டு, பதில்கள் சொல்லப்பட்ட்டிருந்தால்.. அது சிறுவர்களுக்கு புரிய வேண்டாம்,

ஆனால் ஒரு ஆண் / பெண் காமத்தில் அமைதியா, அதிரடியா என்பது சம்பந்தப்பட்ட அந்த இருவருக்கு மட்டும தானே தெரிய வேண்டும்? மற்றவர்கள் தெரிந்து என்ன செய்ய போகிறார்கள்? -- யாருக்கு புரியுமோ அவங்களுக்கு புரிஞ்சா போதும் இல்லையா ??

பதிவுக்கு காரணம் FM ரேடியோவோ, அந்த நிக்ழ்ச்சியோ.. செக்ஸ் விவாதமோ இல்லை.. இல்லை இல்லை....
குறிப்பிட்ட அந்த கேள்வியும், அதற்கு வந்த பதிலும் மட்டுமே என்று தெளிவுப்படுத்துகிறேன்..

ரேடியோவில்..செக்ஸ் விவாதம் வேண்டாம் என்று நினைக்கவில்லை...செக்ஸ் பற்றிய விவாதம் என்ற பெயரில் அடுத்த வாரம், இதை விட அபத்தமான கேள்வி வரவேண்டாம் என்று நினைத்தேன். (இதே ரீதியில் கேள்விகள் போனால்.. அடுத்த கேள்வி என்னவாக இருக்கும் என்று நான் சொல்லியா தெரியவேண்டும் ? :) )

வீ எம்

வேலவன் said...

//ரேடியோவில்..செக்ஸ் விவாதம் வேண்டாம் என்று நினைக்கவில்லை...செக்ஸ் பற்றிய விவாதம் என்ற பெயரில் அடுத்த வாரம், இதை விட அபத்தமான கேள்வி வரவேண்டாம் என்று நினைத்தேன்////

====CORRECT V.M ====

நந்தா said...

இந்த விஷ்யத்தில் நான் வீ.எம் சொல்வதை வழி மொழிகிறேன். செக்ஸ் கல்வி தேவைதாங்க. ஆனால் இது தேவையா? என்பது நியாயமான கேள்விதான்.

கொஞ்சம் விட்டால் இந்த கேள்விக்கு பதிலை எப்படி உபயோகிப்பாங்க தெரியுமா?

"சூளைமேட்டைச் சேர்ந்த செல்வகுமார் காம்த்தில் நான் அமைதிதான் என்றும் அவரது மனைவி தான் அதிரடி என்றும் Sms அனுப்பியுள்ளார். என்ன செல்வகுமார் இந்த விஷயத்தில் மனைவியே அதிரடிங்கறப்போ நீங்க ஏன் அமைதியா போறீங்க? சரி எஞ்சாய் பண்ணுங்க. ஓ.கேவா? இன்னும் எத்தனை பேரு அவங்கவங்க மனைவியைப் பத்தியும் கணவர்களைப் பத்தியும் SMS அனுப்புவாங்கன்னு பார்க்கலாம். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக். நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது xxx.4 ரெ...போ FM.

இதுல இருந்து என்ன செக்ஸ் கல்வியைக் கற்றுக் கொண்டோம் என்று எனக்குத் தெரிய வில்லை. எனக்குத் தெரிஞ்சு செக்ஸ் கல்வி என்பது அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்ப்பது கிடையாது.

நான் மஞ்சள் காமாலை பிடித்தவனோ, கலாச்சார காவலனோ கிடையாது. செக்ஸ் கல்வி தேவை என்று ஆதரிப்பவன்தான் நானும்.

மாயன் said...

செந்தழலாரே,

சரியாக புரிந்து கொள்ள வேண்டும் ... அதிரடி செக்ஸ் சரியா, அமைதி செக்ஸ் சரியா என்பதல்ல கேள்வி... நீங்கள் செக்சில்( நீங்கள்னா நீங்கள் இல்லை நேயர்கள்) அதிரடியா... அமைதியா? என்பது தான் கேள்வி.. முன்னது விவாதிக்கப்பட கூடிய பொது விஷயம்... பின்னது ஒரு தம்பதியின் தனிப்பட்ட விஷயம் அல்லவா? அதை ஏன் விவாதிக்க வேண்டும்..? இதில் பிற்போக்கு தனம் எங்கிருந்து வந்தது?... :-)

வீ. எம் said...

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி திரு நந்தா , மாயன் அவர்களே.

//சூளைமேட்டைச் சேர்ந்த செல்வகுமார் காம்த்தில் நான் அமைதிதான் என்றும் அவரது மனைவி தான் அதிரடி ................. //

நகைச்சுவையுடன் சிந்திக்கவைத்த கருத்து நந்தா அவர்களே !!

/முன்னது விவாதிக்கப்பட கூடிய பொது விஷயம்... பின்னது ஒரு தம்பதியின் தனிப்பட்ட விஷயம் அல்லவா? அதை ஏன் விவாதிக்க வேண்டும்..? //

மிக சரியாக சொன்னீர்கள் - தெளிவுப்படுத்தியுள்ளீர்கள் மாயன் அவர்களே..

வீ எம்

Anonymous said...

சுறுக்கமான நல்ல பதிவு. காமம் பற்றிய தெளிவிற்கும் ஆபாச குப்பைக்கும் உள்ள வித்தியாசத்தை FM புரிந்துக்கொண்டால் நல்லது.

மதியழகன் சுப்பையா said...

Vanakkam,
Ungalin karuththum kobamum miga chariyaanathu. Innum niraiya chuttik kaatungal.

Nandri.


Mudindal, enakku manase relax-iii anuppavum
madhiyalagan@rediffmail.com

http://madhiyalagan.blogspot.com

வீ. எம் said...

//காமம் பற்றிய தெளிவிற்கும் ஆபாச குப்பைக்கும் உள்ள வித்தியாசத்தை FM புரிந்துக்கொண்டால் //

நன்றி திரு சுதர்சன், அதுவே என் ஆதங்கமும்

வீ. எம் said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி திரு மதியழகன் அவர்களே.

மனசே ரிலாக்ஸ்... நிச்சயம் அனுப்பி வைக்கிறேன்.

வீ எம்

வெங்கட்ராமன் said...

//////////////////////
மனசே ரிலாக்ஸ்... நிச்சயம் அனுப்பி வைக்கிறேன்.
//////////////////////

என்னங்க இது சுவாமி சுகபோகன்ந்தா எழுதியதிய மனசே ரிலாக்ஸ் மின் புத்தக வடிவமா அல்லது
ஒலி வடிவமா. . . . .

வீ. எம் said...

Hi Venkat, See in my Side Bar.. I have it in PDF format (readable).

VM

வீ. எம் said...

மதியழகன் அவர்களே. மனசே ரிலாக்ஸ் அனுப்பி விட்டேன்.
வீ எம்

Anonymous said...

நான் சொல்ல வருவது செக்ஸும் விவாதப்பொருளாக ஊடகங்களில் ஆக்கப்படவேண்டும் என்பதே...

மக்களுக்கு அதற்கான தேவைப்பாடு இருக்கிறது என்பது உண்மை...இல்லையென்றா டாக்டர் மாத்ருபூதம் - ஷர்மிளா நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக வேண்டியதன் அவசியம்...

அந்த நிகழ்ச்சியில் கூட சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் கேட்கப்பட்டு விடையளிக்கப்பட்டது... ( என்ன என்ன அப்படீன்னு கேக்கப்படாது ஆமாம்)

மக்கள் முன்வரவேண்டும், கட்டுபெட்டித்தனங்களை உடைக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்...

அப்படி கட்டுகள் உடையும் போது, வரயறை இல்லாத வகையில் இருந்தால் சில விடயங்கள் சிறுபிள்ளைத்தனமாகவும், அதிகப்பிரசங்கித்தனமாகவும் இருந்துவிட்டுப்போகட்டும்...அவற்றை புறந்தள்ளிடலாம்...

கட்டுகள் உடைவதுதான் மையமாக இருக்கவேண்டும் என்பது நான் சொல்லவருவது...

வீ. எம் said...

செந்தழல் ரவி அவர்களே. உங்கள் கருத்தில் நியாயம் உள்ளது. ஏற்றுக்கொள்கிறேன்.
வீ எம்

Anonymous said...

புரிந்துணர்வுக்கு நன்றி வி.எம். அவர்களே...

தமிழ் ஹிப்பலாக்கும் ஒரு நன்றி...!!!

வேலவன் said...

அட,வலைப்பூ அதிசயம்.. ஒருவர் கருத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டீர்களே..
நல்ல விடயம்..

Anonymous said...

கருத்துக்கள் மட்டுமே மோதுகின்ற மிக அருமையான விவாதம்.

தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி
http://www.desipundit.com/2007/06/22/fmradio/

வீ. எம் said...

வருகைக்கு மிக்க நன்றி டுபுக்கு அவர்களே,

desipunditல் இந்த பதிவை இனைத்தமைக்கு மற்றொரு நன்றி ..

வீ எம்

Anonymous said...

தோழர் வீ. எம்.! FM Rainbowவில் அறிவிப்பாளனாக பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். இப்படி ஒரு கேள்வி அந்த வானொலியில் வெளிவந்திருக்க வாய்ப்பே இல்லையென்று "அடித்துச்" சொல்வேன். அப்படியே வந்திருந்தாலும் முட்டிக்கொள்ள வேண்டிய கலாச்சாரச் சீரழிவுக்கு ஒன்றும் இல்லை. மீடியாவில் அந்தரங்கத்தைப் பேசக்கூடாதென்றால் பச்சையாக நம் 'அம்மணி' பேசுகிற "வயாரகா"வுக்கு முதலில் கண்டனம் தெரிவியுங்கள். அதற்கு மேல் இன்னொரு தகவல், FM Rainbowவில்தான் அந்த கேள்வி கேட்கப்பட்டதென்றால், அதில் வியாபாரம் துளியும் கிடையாது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்.

Anonymous said...

தோழர் வீ. எம்.! FM Rainbowவில் அறிவிப்பாளனாக பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். இப்படி ஒரு கேள்வி அந்த வானொலியில் வெளிவந்திருக்க வாய்ப்பே இல்லையென்று "அடித்துச்" சொல்வேன். அப்படியே வந்திருந்தாலும் முட்டிக்கொள்ள வேண்டிய கலாச்சாரச் சீரழிவுக்கு ஒன்றும் இல்லை. மீடியாவில் அந்தரங்கத்தைப் பேசக்கூடாதென்றால் பச்சையாக நம் 'அம்மணி' பேசுகிற "வயாரகா"வுக்கு முதலில் கண்டனம் தெரிவியுங்கள். அதற்கு மேல் இன்னொரு தகவல், FM Rainbowவில்தான் அந்த கேள்வி கேட்கப்பட்டதென்றால், அதில் வியாபாரம் துளியும் கிடையாது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்.

வீ. எம் said...

தோழர் சக்திவேல் அவர்களே, தவறுக்கு மன்னிக்கவும், அது ரெயின்போ இல்லை.. வயராகா என்ற நிகழ்ச்சி வரும் FM . தவறுதலாக ரெயின்போ என்று எழுதிவிட்டேன்.. மன்னிக்கவும்