சிறுகதை - காகித பூக்களும் ... கலர் டிவியும்..
மிக நடுத்தர பிரிவு குடும்பத்தில் பிறந்து, முட்டி மோதி ஒரு வழியாக ...1999 ல் கல்லூரி முடித்து, எப்போழுது வெளிநாட்டில் வேலை கிடைக்கும், கை நிறைய கிடைக்கும் வருமானத்தில் தங்கைக்கு நல்ல இடதத்தில் திருமணம் முடிக்கலாம் என்ற கனவோடு.. நான்கு வருடம் தாய்நாட்டில் உழைத்து,.. கடைசியில் 2003 ல் வெளிநாட்டு வேலை கிடைத்து விட்டது.மனதில் இருந்த பாரம் குறைந்து, தங்கையை கரையேற்றி விடலாம் என்கிற நம்பிக்கையுடன் விமானம் ஏறி .. 1.5 ஆண்டுகள் கடினமாய் உழைத்து ..பனம் சேமித்து.. இதோ, 2005 ஜனவரி 18, தங்கையின் திருமனம் ... இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது... என் தாய்நாட்டு பயனத்துக்கு. எல்லாம் தயார். நீண்ட நாள் கனவு (லட்சியம் என்றே சொல்ல வேண்டும்.. ) .. நினைவாகும் நாளுக்காக காத்திருக்கிறேன்..
2005 ஜனவரி 17 :
வெகு விமரிசையாக மாப்பிள்ளை அழைப்பு.. அடேங்கப்பா¡¡..... எவ்வளவு பெரிய மண்டபம்... வண்ண வண்ண விளக்குகள் ஜொலிக்க.. அனைவரின் முகத்திலும் அப்படி ஒர் மகிழ்ச்சி.. டேய் ..ஸ்ரீதர் (4 வயது - சித்தி பையன்) .. ஏண்டா அப்படி ஓடுற, விழ போற.. பார்த்து ...பார்த்து அட , குமரன் (அத்தை பையன்) ஹேய் 7 வருஷம் இருக்கும் டா உன்னை பார்த்து... சித்தி , சித்தப்பா .. மாமா , மாமி, பெரியப்பா, பெரியம்மா.. அண்ணன்(பெரியம்மா மகன்) அண்ணி .குழந்த்தைகள்... நன்பர்கள் கூட்டம் அனைவரும் கூடி இருக்க எவ்வளவு சந்தோஷமா இருக்குப்பாஹே ! , யார் இவர்கள்...ஒ !.. மாப்பிள்ளை வீட்டார் போல....அட.. நம்ம சுதா வா இது .. (மாமா மகள்) .. 3 வருடத்தில் எப்படி வளர்ந்த்து விட்டாள்... இவளை தான் எனக்கு கேட்கப்போவதாய் அம்மா சொல்லுவார்கள்.... போங்க்ம்மா ... !! பொய் கோபம் காட்டினாலும் ..உள்ளுக்குள் எனக்கு ஆசை தான்.. ஏதோ நினைவில் அப்படியே சாய்ந்து நின்ற என்னை அருமையான "ஆட்டோக்கிராப்" பட பாடல் தான் நினைவுக்கு கொண்டு வந்தது... அட... ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்து இருந்த மெல்லிசை குழு வாசித்து பாட.... நன்பனின் சிபாரிசின் பேரில் இவர்களை புக் செய்த்தோம் 24000 ருபாய் .... நன்றாக தான் உள்ளது....தங்கையும் மாப்பிள்ளை யும் அங்கே மேடையில் ...தங்கைக்கு அந்த அரக்கு நிற பட்டு புடவை மிக அழகாக உள்ளது... அம்மா காஞ்சிபுரம் வீதிகளில் சுற்றி சுற்றி ...பார்த்து பார்த்து எடுத்த வேளையில், நான் அமெரிக்க - கலிபோர்னீய வீதிகளில் கடை கடை யாக ஏறி இறங்கி வாங்கிய டைமண்ட் பதித்த அந்த கைகடிகாரம் (வாட்ச்) மாப்பிள்ளை கையில் சூப்பராய் மின்னியது. ... இதை வாங்க நான் சுற்றியது சற்று நேரம் மனதில் வந்து போனது...அம்மாவும் , அப்பாவும் அங்கும் ..இங்கும் ஓடிக்கொண்டு....ஏன் தான் இப்படி இழுத்து போட்டு கொண்டு வேலை செய்கிறார்களோ.... ! கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே.... ! சரி சரி ..மகள் திருமணம் ... ஆசை இருக்காதா???..சம்பிரதாய , சடங்கு ஒருபுறம்... மெல்லிசை ஒருபுறம் .. விருந்து ஒருபுறம் ... பார்த்து பார்த்து நல்ல சமையல்காரருக்கு கான்ட்ராக்ட் கொடுத்து.. நீண்ட மெனு (16 வகை) கொடுத்து.. அப்பப்பபா...நான் நினைத்ததை விட இதோ ..மிக நன்றாக அனைத்தும் நடக்கிறது..ஐயோ!!!...எவ்வளவு பெரிய மணிகூண்டு ... மண்டபத்திற்கு எதிரிலேயே ..இவ்வளவு நேரம் கவனிக்கவே இல்லையே... மணி 10:20 ...வந்தவர்கள் பலர் சென்றிருக்க.. நெருங்கிய நன்பர்கள், உறவினர் மண்டபத்திலேயே இருக்க... அனைவரும் உறங்கும் நேரம் ... விடிகாலை 5.30 மணி முகுர்த்தம் அல்லவா ... !!
2005 ஜனவரி 18 காலை 4.40
..அதிகாலையிலேயே அனைவரையும் பரபரபப்பு தொற்றிக் கொண்டது... அனைவருக்கும் காபி ... மங்கல இசை முழங்கி கொண்டிருக்க... இரவு வந்துவிட்டு போனவர்கள் சிலரும், வராவதர்கள் பலரும் மண்டபத்திற்குள் வந்தவாறே இருக்க ... பட்டு சட்டை , வேட்டி யில் அப்பா அவர்களை கை கூப்பி வரவேற்க.....ஆசிர்வதிக்க 'பூக்களும் , மஞ்சள் அரிசியும்' எல்லோருக்கும் ஒருவர் கொடுத்து கொண்டிருக்க .. மறுமுனையில், அனைவரும் ..சிரித்து ..மகிழ்ந்த்து... மண்டபமே கலகலப்பாய் இருக்க....கெட்டி மேளம் கெட்டி மேளம் ... என்ற குரல் வர, பாரம்பரிய கெட்டி மேள இசை இசைக்கபட..இதோ .. வெகு விமரிசையாய் நடத்த வேண்டும் என்று உழைத்து உழைத்து .இந்த நாளில் நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என பல ஆண்டாக திட்டம் தீட்டி......... நான் பெரிதும் கனவு கண்ட அந்த காட்சி - சுற்றம் சுழ ..தங்கையின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட....தங்கையை மானசீகமாய் ஆசீர்வாதம் செய்து, கையில் இருந்த காகித பூக்களை டிவி (TV) மீது தூவி விட்டு, ரீமொட் எடுத்து டிவி மற்றும் டி.வி.டி ப்ளேயரை அனைத்துவிட்டு .....கிளம்ப இரண்டு நாள் இருக்கும் போது, கடைசி நேரத்தில் .. ஜனவரி 20 ம் தேதி முடிக்க வேன்டிய அவசர ப்ரொஜெக்ட் ஐ காரனம் காட்டி என் விடுப்பை (LEAVE) ரத்து செய்த என் உயரதிகாரியை மனதிற்குள் மற்றும் ஒரு முறை பலமாக அர்ச்சித்து கொண்டே கனத்த இதயத்துடன் கட்டிலில் விழுந்தேன். காலன்டர் ஜனவரி 26, 2005 காட்டி கொண்டிருந்தது....விழியோரத்தில் வழிந்த கண்ணீரை துடைக்க ஏனோ மனம் வரவில்லை ..............இந்தியா சென்று திரும்பும் பொழுது மறக்காமல் என் வீட்டிற்கு சென்று மறக்காமல் திருமண டி.வி.டி வாங்கி வந்த நன்பன் தினேஷ்க்கு நன்றி... அவன் தங்கைக்கு ஜுன் 11 ல் திருமணம்...
= வீ. எம்
6 கருத்துக்கள்:
வாழ்த்தறதா இல்ல வருத்தப்படறதான்னு தெரியல வீஎம்.
இந்த கதையை நீங்கள் 1.5 ஆண்டுக்கு முன்னரே உங்கள் வலைபதிவில் படித்துள்ளேன் அனாஇயாக எனினும். மீண்டும்படித்த போது, அப்போது படித்த போது என்ன உனர்வு ஏற்ப்பட்டதோ , அதே உனர்வு ஏற்ப்பட்டது. மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளீர்கள். வருக, வருக.
வீ.எம்,
நீங்க கதை சொன்ன விதம் நல்லாயிருக்குது.கதையில் இருக்கும் உங்க சோகத்தை படிச்சு முடிச்ச உடன் முழுமையா உணர முடிந்தது
நன்றி திரு கொங்கு ராசா, முரளி, கதிரவன் அவர்களே,
கொங்கு ராசா, தங்கள் வாழ்த்துக்களையும் வருத்தங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்..
======
முரளி - ஆம், பல தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நீண்ட இடைவெளி ஏற்ப்பட்டது.. நியாபகம் வைத்துள்ளமைக்கு மிக்க நன்றி
=====
கதிரவன் - என் நன்பனுக்கு ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வை கருவாக வைத்து சற்று கற்பனை கலந்து எழுதப்பட்ட கதை இது, நேரம் கிடைக்கும் போது என் மற்ற கதைகளை படியுங்கள்.
நன்றி
வீ எம்
please send me the pdf file of "manese relax please"
and also have u any other pdf file
please send me ramshere2003@yahoo.com, ramshere2003@gmail.com
Ram,
Thanks for visiting my blog. Sent u the document via email
VM
Post a Comment