Showing posts with label FM. Show all posts
Showing posts with label FM. Show all posts

FM - கூறு கெட்ட குறுந்தகவல்

அவ்வப்போது ரேடியோவில் எப் எம் (FM) கேட்பது வழக்கம். அதே போல கடந்த வெள்ளியன்று சூரியன் மற்றும் ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படியே வயாராகா என்ற நிகழ்ச்சி வரும் FM ட்யூன் செய்து கேட்ட எனக்கு அவர்கள் நேயர்களை ஒரு தலைப்பு பற்றி குறுந்தகவல் அனுப்பும்படி கேட்டனர்... அந்த தலைப்பை கேட்டவுடன் எனக்கு சற்று நெருடல் கலந்த அதிர்ச்சி.. அதிமுக்கியமான அந்த தலைப்பு என்ன தெரியுமா??? அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி கொடுத்த தலைப்பு இது தான்...

"காமத்தில் நீங்கள் அமைதியா.. அதிரடியா...??"

என்ன தான் இப்பொழுது குறுந்தகவல் அனுப்ப சொல்வது வாடிக்கையாகிவிட்டது என்றாலும்.. இப்படி ஒரு தலைப்பு தேவையா??

காமம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விசயம் , குறிப்பாக யாரும் தங்கள் துனையுடன் ஈடுபடும் இந்த விசயத்தை வெளியே விவாதிக்க மாட்டார்கள்..

இது கனவன் மனைவி / காதலன் காதலிக்கு இடையில் மட்டுமே இருக்ககூடிய அந்தரங்கம்.. அந்தரங்கத்தையே வெளிச்சம் போடும் ஒரு கேள்வி.. அதிலும்.. பல லட்சம் பேர் கேட்கும் ஒரு ஊடகத்தில் கேள்வியாக வைப்பது.... ???

இதனை ஒரு வியாபார உத்தி என்றோ அல்லது அப்படி கேள்வி கேட்பது அந்த FM நிகழ்ச்சியின் தனிப்பட்ட உரிமை என்று எடுத்துக்கொள்ளவோ என்னால் முடியவில்லை..

அதிலும் .. கேள்வி கேட்ட சிறிது நேரத்தில்.. வந்ததாக வாசிக்கப்பட்ட சில குறுந்தகவல்கள் படிக்கபட்ட போது .. அட முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழர்கள் பலர் இருக்கின்றனர் !! என்று எண்ணத்தோன்றியது..

அதிலும் குறிப்பாக அவர்கள் படித்த ஒரு குறுந்தகவல் :

"எனக்கு அனமதி வழி பிடிக்கும் ஆனால் என் மனைவிக்கு எப்பவும் அதிரடி வழி தான் பிடிக்கும் , ஆகவே நானும் அதிரடி தான்"

உண்மையில் இது யரேனும் அனுப்பியதா அல்லது ஒரு விறுவிறுப்புக்காக வந்ததாக சொல்லி படிக்கப்பட்டதா என்று தெரியவில்லை..

வந்ததாக சொல்லி படிக்கப்பட்டிருந்தால் , அந்த FM நிகழ்ச்சியின் வியாபார உத்தியையும்.. இல்லை உண்மையாகவே வந்திருந்தால்... தன் மனைவியின் அந்தரங்க விருப்பத்தை, இதனை வெளியில் பகிர்ந்திட மாட்டார் என்ற நம்பிக்கையில் மனைவி கூறிய ஒரு அந்தரங்க விருப்பத்தை, தமிழ் கூறும் நல்லுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி பகிர்ந்துக்கொண்ட அந்த தமிழனை மனதாற வாழ்த்தலாம்...வேறென்ன செய்ய??????????????????????????

வீ எம்