நான் அவன் இல்லை.. .. திருமணமானவர்கள் ஸ்பெஷல்
திருமணமானவர்களுக்கு எல்லாம் சமர்பணம் :)
திருமணத்திற்கு முன் :
அவன் : ஆமாம், காத்திருப்பது மிக கடினமாக உள்ளது
அவள் : என்னை விட்டு பிரிய நினைக்கிறாயா?
அவன் : இல்லை, அப்படி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை
அவள்: என்னை நேசிக்கின்றாயா?
அவன் : இதிலென்ன சந்தேகம் உனக்கு?
அவள் : என்னை எப்பொழதாவது ஏமாற்றி இருக்கிறாயா??
அவன் : இல்லை, இல்லை, இப்படி கேட்பதே தவறு
அவள்: எனக்கு ஒரு முத்தம் தருவாயா?
அவன்: ஆம், நிச்சயமாக.
அவள் : என்னை கடிந்துக்கொள்வாயா? அடிப்பாயா?
அவன் : வாய்ப்பே இல்லை , நான் அப்படிபட்டவன் இல்லை.
அவள் : நான் உன்னை நம்பலாமா? நீ நம்பிக்கையானவனா?
திருமணத்திற்கு பின்:
மேலே உள்ள அதே உரையாடலை , கீழிருந்து மேலாக படிக்கவும்
====================
திருமணமானவர்களே - இது உண்மையா என்று சொல்லுங்கள் (கருத்துப்பெட்டியில்)
திருமணமாகாதவர்கள் - திருமணமானவர்கள் தரும் பதிலை பார்த்து முடிவு செய்யுங்கள்..என்ன முடிவு... அது எனக்கு தெரியாதுங்கோ.. உங்க இஷ்டம்...
வீ எம்
6 கருத்துக்கள்:
TEST COMMENT :)
வீ.எம் நீங்க எப்படி . . . . .
திருமனம் ஆனவரா. . . . . .?
திருமனம் ஆகாதவரா. . . . ?
அருமையான எழுத்து நடை
வித்தியாசமான கோனம்
சுட்டதா? சுடாததா?
எப்படி இருந்தாலும் நன்றாக இருந்தது.
நன்றி வெங்கட்ராமன், மின்னுது மின்னல், வடுவூர் குமார் அவர்களே,
//திருமனம் ஆனவரா. . . . . .?
திருமனம் ஆகாதவரா. . . . ?///
அந்த சோகத்தை ஏன் வெங்கட் சார் இப்போ கேட்குறீங்க.. :)
//அருமையான எழுத்து நடை
வித்தியாசமான கோனம்//
மின்னல் : சொந்த சரக்கு இல்லைங்க.. மின்னஞலில் ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் மொழிப்பெயர்த்தேன் அவ்ளோதான்... இருந்தாலும் சில வரிகள் மொழிபெயர்க்க கொஞ்சம் கடினமாக இருந்தது.. பொருள் மாறிவிடாமல் இருக்கனுமேனு கொஞ்சம் மெனகெட வேண்டியிருந்தது...
வடுவூராரெ, இப்போ தெரிஞ்சிருக்குமே சுட்டதா இல்லயானு.. :) என்ன பன்றது.. சில நேரம் சொந்தமா யோசிக்க நேரம் இல்லாதப்போ, இப்படி எதையாச்சும் போட்டு ஒப்பேத்தனுமே.. :)
என் மற்ற சொந்த சரக்கை நேரம் இருக்கப்போ படித்துப்பாருங்க..
அன்புடன்
வீ எம்
எல்லா பக்கமும் போய், கலைச்செல்வங்கள் கொண்டு வாங்கன்னு பாரதிதாசன் சொன்னது இது மாதிரி முயற்சிகள் தான்னு நினைக்கிறேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
Post a Comment