மதியம் வியாழன், ஜூன் 19, 2008

ஞாநியும் அவர் யோசனைகளும்.

இது ஒரு தொடர்கதையாகிவிட்டது. ஞாநி பக்கங்கள் எழுதுவதும் அது சர்ச்சையாவதும். 2 வரிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் எழுதிவிட்டு, 25 வரிகளை கட்டுரையை நிரப்ப எழுதுவதை ஞாநி வழக்கமாக்கிகொண்டுள்ளார்.

ஆக்கப்பூர்வமான விஷயங்கள் எழுதுவதை விடுத்து, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தினிப்பதாகவே அவரின் பக்கங்கள் போகிறது.

இந்த வார பக்கத்தை பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து எழுதி நிரப்பியுள்ளார்.. அவர் விலையுர்வு பற்றி எழுதியுள்ளது, வரி விதிப்பு , அரசியல் பற்றி எழுதியது ஒரு பக்கம்..

ஆனால் சில யோசனைகளை அவர் கூறியுள்ளது தான் வியப்பாக உள்ளது. யோசித்து தான் எழுதினாரா.. அல்லது நக்கல் அடித்து யோசனைகள் தெரிவித்துள்ளாரா புரியவில்லை.

யோசனை 1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.

மக்களிடம் அநியாய வசூல் செய்யும் ஆட்டோக்கு சலுகை விலை, கஷ்டப்பட்டு உழைத்து டூவீலர் கார் வாங்கியவருக்கு 100 ரூ. அதிலும் அவர் அரசுக்கு வரி கட்டுபவர். ஆட்டோ ஓட்டுனர் வரி கட்டுகிறாரா என்று தெரியவில்லை.. அல்லது டூ வீலர் வைத்திருப்பவர்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் , அவர்கள் நடுத்தர வர்க்கம் என்பது ஞாநியின் வாதமா??

யோசனை 2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது.

யோசனை 3. சைக்கிளில் சென்று வரும் தொலைவில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த வட்டாரப் பள்ளி,கல்லூரிகளில் அட்மிஷன் தரப்படவேண்டும்.

ஒன்றோடு ஒன்று தொடர்புடை இந்த 2 யோசனைகள் பற்றி என்ன சொல்ல??

ஞாநி அவர்களே, என்ன பிரச்சனை உங்களுக்கு, நீங்கள் கருணாநிதிக்கு அறிவுரை சொன்னது போல, நீங்களும் எழுத்துப்பனியில் இருந்து ஒய்வு பெற்று,அமைதி காணலாம். ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட்டை பார்க்கலாம்.

சைக்கிளில் சென்று வரும் தூரம் என்பதற்கு என்ன அளவுகோல் வைப்பீர்கள்? ஓரு வேளை அப்படி சேர்த்த பிறகு, ஒரு மாணவன் சூழ்நிலை காரணமாக வீடு மாறினால், உடனடியாக டி. சி கொடுத்துவிடுவீர்களா?

இன்றைய சூழலில் நடுத்தர வர்கத்தினர், நகர்புறத்திற்கு சற்று தள்ளி வீடு கிடைத்தாலும் தங்கள் பட்ஜெட்டுக்கு அடக்கமாக இருக்கட்டும் என்று, வீடு வாங்குவதோ அல்லது வாடகைக்கோ செல்கிறார்கள். அந்த நிலையிலும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கு வீட்டிலுருந்து சற்று தள்ளி இருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் சார்?

அந்த பள்ளிக்கு அருகில் எவ்வளவு விலை இருந்தாலும் அங்கே தான் வீடு வாங்க வேண்டும், அல்லது குடி புக வேண்டுமா? இல்லை, வீட்டின் அருகில் இருக்கும் ஏதோ ஒரு பள்ளியில் படிக்க வைக்கட்டும் என்றா??
பள்ளிகள் இப்போது வேன், பஸ் வசதி செய்து தருகிறதே, அவர்களுக்கு என்ன விலை பெட்ரோல் தரலாமென்று சொல்லுங்களேன்?

யோசனை 4. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கிழிஞ்சது கிருஷ்ணகிரி, ஏற்கனவே அவங்கவங்க கார் ல போகும் போதே பொது மக்கள் படும் அவஸ்தை தாங்கல, இதுல இவங்களும் பஸ், ரயில்னு வந்துட்டா.. அவ்ளோதான்.. மான்புமிக... . பயனம் செய்யும் பேருந்து, ரயில்னு பேருந்து நிலையம், ரயில் நிலையம் அமர்களப்படும்.. நல்லாத்தான் இருக்கும்..

யோசனை 5. நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

நல்லதொரு யோசனை.. எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்துடா நு சொல்றீங்க.. இந்த யோசனையால் என்ன சாதிக்க முடியும்? இதுக்கு பெட்ரோல் விலைக்கும் என்ன சம்பந்தம்..

பாலம் எல்லாம் சிமென்ட் - தண்ணி கலந்து தானே கட்டுறாங்க?? இல்லை சிமென்ட் டீசல் கலந்து கட்டுறாங்களா?

, ஒரு வேளை பாலங்கள் இல்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், மக்கள் டூ வீலர், கார் வாங்க பயப்படுவாங்களா?? அப்படி பார்த்தா , இதே கட்டுரையில் நீங்க சொன்ன கூடுதல் பஸ் விடும் மேட்டர் எப்படி?? அந்த கூடுதல் பஸ் எல்லாம் போக்குவரத்து நெரிசல் இல்லாம எப்படி போகும்?? ஓ போட வைத்த இது தான் "ஓ" பக்க யோசனை

அப்படியே பத்தாண்டுக்கு எந்த திட்டமும் போடகூடாது, எந்த வளர்ச்சி பனிகளும் நடக்ககூடாது, அரசாங்கத்தை முடக்கிட்டா, வேலை வாய்ப்பு இல்லாம பன்னிட்டா.. யாரும் வெளிய போற வேலை இருக்காது, டூ வீலர், கார், பஸ் ஓடவேண்டிய அவசியமில்லாம, பெட்ரோல் விலை தானா குறைந்திடும்நு ஒரு யோசனை சொல்லுங்களேன்..

யோசனை 7. ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.

இந்த யோசனை தான் டாப்.. இதை போய் 7 வது யோசனையா சொல்லிட்டீங்களே. இது தான் நெ 1 ல இருக்கனும்..
ஒரு குடும்பத்துல 4 பேரு. அப்பா, அம்மா 2 குழந்தைகள். காலைல எல்லோரும் கிளம்பி 2 குழந்தைகளை பள்ளில விட்டுட்டு அங்கிருந்து 2 கிமீ தூரத்துல இருக்க அலுவலகத்துல மனைவியை விட்டுட்டு அங்கிருந்து 5 கிமீ தூரம் இருக்கும் தன் அலுவலகத்துக்கு கனவர் போகிறார்,
இப்போ எப்படி, எங்கெல்லாம் ஸ்பாட் ஃபைன் போட வேண்டும்?

நமக்கே ஒரு அவசரமென்றால், டூ வீலர் எடுத்துக்கொண்டு ஓடுவோம்.. அந்த நேரத்தில் அக்கம் பக்கம் வீடுகளில் விசாரித்து யாரையாவது கூட்டிக்கொண்டு போகவேண்டுமா? இல்லை ஸ்பாட் ஃபைன் தவிர்க்க சும்மான்வானும் ஒருவரை பின்னால் அமர வைத்து செல்லவேண்டுமா?

அப்படியே அரசாங்க பேருந்து கூட்டம் இல்லாமல் சென்றால் அதற்கும் ஸ்பாட் ஃபைன் போடலாமா?

இருந்தாலும் உங்க இந்த யோசனை டராபிக் கான்ஸ்டபிள், போலிஸ்காரர்களுக்கு சர்க்கரை பொங்கல் தான்.. கல்லா கட்டலாமே...

இந்த யோசனைகளுக்காக உங்களுக்கு ஸ்பெஷல் ஓ போடலாம் திரு
யோசனை திலகம் ஞாநி அவர்களே.

காசா , பணமா, இன்னும் நிறைய யோசனை சொல்லுங்க அடுத்த ஓ பக்கத்துல.. எப்படி பண வீக்கத்தை குறைக்கலாம், எப்படி வேலை வாய்ப்பை பெருக்கலாம்னு..

நன்றி

18 கருத்துக்கள்:

Unknown said...

யோசனை திலகம் ஞாநி -- பட்டம் சூப்பர்

மதுசூதனன் said...

உண்மையாகவே சும்மா நச்னு இருக்கு உங்க கட்டுரை..

superb..

மதுசூதனன் said...

உண்மையாகவே சும்மா நச்னு இருக்கு உங்க கட்டுரை..

superb..

வெங்க்கி said...

உங்கள் பதிவை வழி மொழி கிறேன்.. இங்கன வந்து பாத்துட்டு போங்க.. same மேட்டர் தான்.. வேற taste ட்டுல ..

http://keysven.blogspot.com/2008/06/blog-post_4206.html

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதைப் படித்ததும் நானும் ஒரு பதிவு போட்டேன் :

http://jyovramsundar.blogspot.com/2008/06/blog-post_13.html

மிக ஆபத்தன வன்முறை நிறைந்த ஆலோசனைகள். என்ன செய்ய :)

வீ. எம் said...

அனானி, கூல், உங்களின் இது போன்ற கருத்துக்கள் வெளியிடப்படமாட்டாது.. அனைத்து இடத்திலும் நீங்கள் இதே வாந்தி எடுப்பது தெரிகிறது.. வேறு வேலை இருந்தால் பாருங்கள்.. பாவம் உங்களை பெற்றவர்கள்.. !

Bleachingpowder said...

ரொம்ப முத்திடுத்து ஒன்னும் பண்ண முடியாது. வேனும்னா கொண்டு போய் ஏர்வாடில சேத்திரலாம். என்ன ஒரே பிரச்சனைனா மத்த பைத்தியங்கள் வயலண்ட் ஆயுடும்

வீ. எம் said...

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றீ முத்து, மதுசூதனன், கீ வென் .

rapp said...

மிக மிக நல்லப் பதிவு வீ.எம். நல்லாவே சொல்லி இருக்கீங்க. அவருக்கு ரெகுலரா ப்ளாக் படிக்கிற பழக்கமிருப்பதால் தன்னைப் பத்தி யாராவது ஏதாவது எழுதமாட்டாங்களானு அலையறாரு போலருக்கு. செம முட்டாள்தனமா இவர் இப்டி எழுதினாலும் எப்டித்தான் குமுதம்ல வெறும் தொழில் போட்டிக்காரணமா இன்னும் எழுத விடறாங்களோ தெரியல. ஹையய்யோ என்னங்க அந்த அனானி சொன்னாரு. இப்டி லேசா தொட்டு விட்டீங்கன்னா எனக்கு தலையே வெடிச்சிடும் போலருக்கே. ஞாநியோட முந்தின கேணத்தனமான கட்டுரை பத்தின என் பதிவுகள் இங்கே, http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_10.html
http://vettiaapiser.blogspot.com/2008/06/blog-post_5058.html

Anonymous said...

நீங்கள் ஞானியின் எல்லா யோசனைகளுக்கும் ஒரு exceptional case-ஐ எடுத்துக்கொண்டு வாதிடுகிறீர்கள். என்ன சொல்ல!

PPattian said...

//ஒரு குடும்பத்துல 4 பேரு. அப்பா, அம்மா 2 குழந்தைகள். காலைல எல்லோரும் கிளம்பி 2 குழந்தைகளை பள்ளில விட்டுட்டு அங்கிருந்து 2 கிமீ தூரத்துல இருக்க அலுவலகத்துல மனைவியை விட்டுட்டு அங்கிருந்து 5 கிமீ தூரம் இருக்கும் தன் அலுவலகத்துக்கு கனவர் போகிறார்,
இப்போ எப்படி, எங்கெல்லாம் ஸ்பாட் ஃபைன் போட வேண்டும்?//

வழியில எங்காவது பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி கெஞ்சி கூத்தாடி யாரையாவது ஏத்திக்கிட்டு போகணும். அப்படி ஏத்தின ஆளு திருடனாவோ, மொள்ளமாறியாவோ இருந்தாக்க.. காரை கொடுத்துட்டு நடந்தே போக வேண்டியதுதான்.. காரா முக்கியம், பெட்ரோல் சேமிக்கறதுதாங்க முக்கியம்..

//நமக்கே ஒரு அவசரமென்றால், டூ வீலர் எடுத்துக்கொண்டு ஓடுவோம்.. அந்த நேரத்தில் அக்கம் பக்கம் வீடுகளில் விசாரித்து யாரையாவது கூட்டிக்கொண்டு போகவேண்டுமா? இல்லை ஸ்பாட் ஃபைன் தவிர்க்க சும்மான்வானும் ஒருவரை பின்னால் அமர வைத்து செல்லவேண்டுமா?
//

இது மேட்டரு.. ஞாநி பேசாம சிந்தனை வறட்சி வந்துருச்சுன்னு ஒத்துக்கலாம்..

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர், ப்ளீசிங் பவுடர், மொக்கை, RAPP, புபட்டியன்..

சுந்தர், உங்கள் பதிவை படித்தேன்.. அருமை..

அதென்னங்க பேரு ப்ளீசிங் பவுடர்னு :) பாவங்க அவரு விட்டுடுவோம்... ஏர்வாடி எல்லாம் வேண்டாம்.

RAPP, உங்கள் பதிவை படிச்சுட்டு அங்கே கருத்து சொல்றேன்.

மொக்கை - எது உங்களுக்கு exception என்று தெரிகிறது.. சொல்லுங்கள் பார்க்கலாம்.. everything stated is a clear cut examples on the practical issues if implemented,.. none are exceptions..


//இது மேட்டரு.. ஞாநி பேசாம சிந்தனை வறட்சி வந்துருச்சுன்னு ஒத்துக்கலாம்..//
இது பன்ச் புபட்டியன்

களப்பிரர் - jp said...

கிளப்பிட்டீங்க..... அந்த ஆளுக்கு உடம்பெல்லாம் மூளை ....

Kalaingar said...

Mokkai - please understand the difference between example and exception. exception is something that had least probability to occur/.. just .1 or .2 percent.. or even 2 or 3% can be considered as exception. what VM said here.. for every case has 90% probability to occur,

dropping kids and wife and then going to office - it happens in more than 70% family

putting kids in a school away from their home for good education happened 80%

politicians putting banners for everything is 100% occurance

so all these are not exceptions, these are clear examples

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கள்ப்பிரர், கலைஞர்

//அந்த ஆளுக்கு உடம்பெல்லாம் மூளை ....///

சரியா சொன்னீங்க சார், இருக்கவேண்ய இடத்துல இல்லாம எல்லா இடத்திலயும் இருந்தா இப்படித்தான் பிரச்சனை ஆகும். :)

சூப்பர் பதில்மொக்கைக்கு கொடுத்ததற்கு நன்றி கலைஞர்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இந்தியா தவிர வேறு ஏதாவது ஒரு நாட்டுக்கு ஒருமுறை சென்று வந்தபின் (அரபு நாடுகளுக்கு அல்ல,அங்கு ஆயில் கொட்டிக் கிடக்கிறது!) இந்த உங்கள் பதிவை மறுவாசிப்பு செய்யுங்கள்,அவ்வளவுதான் சொல்லலாம் !

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அறிவன்..

மற்ற நாடுகளில் கார் ப்பு முறை கேள்வி பட்டுள்ளேன். நல்ல யோசனை தான்.. மற்ற அனைத்து யோசனைகள் பற்றி தெரியவில்லை.. ஏதேனும் நாடுகளில் இருப்பதாக தெரியவில்லை.. தெரிந்தவர்கள் யாராவது சொல்லலாம்..

மேலும், நம் நாட்டு சூழலுக்கு ஏற்றவாறு தான் யோசனை சொல்ல வேண்டும், அந்த நாட்டில் இருக்கிற்து , இந்த நாட்டில் இருக்கிறது என்று யோசனைகள் அடுக்கும்போது தான் பிரச்சனை..

நம் நாட்டு சூழலுக்கு ஏற்றவாறு தான் யோசனைகளுக்கு அந்த பதிலை சொன்னேன்..

ஜோசப் பால்ராஜ் said...

ஞாநிக்கு இதே வேலையா போச்சுங்க. சென்றவார குமுதம் இதழ்ல அப்துல் கலாம் அவர்களை தாக்கி எழுதியிருக்காரு. அதை கண்டித்து நான் எழுதிய பதிவை பார்க்கவும்.
http://maraneri.blogspot.com/2008/07/blog-post_05.html

இன்னும் எப்படி இவரை குமுதம் எழுத அனுமதிக்கின்றது என்று தெரியவில்லை.