தசாவதாரம் பார்த்தவர்களே.. - ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்

தசாவதாரம் ரீலிஸான தியேட்டர்களின் எண்ணிக்கையை விட இங்கே தசாவதாரம் படம் பற்றிய விமர்சன பதிவுகள் அதிகம்..

பல படத்தை புகழ்ந்தும், வெகு சில படம் நல்ல இல்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. மிகச்சிலர் வழக்கம் போல இதனையும், பார்பனீயம் அது இது என்று உளறிக்கொட்டியுள்ளார்கள்..

படம் பார்த்த மக்களே இங்கே எனக்கு 2 விஷயங்களை மட்டும் தெளிவு படுத்துங்களேம்.. தயவு செய்து.. இது தெரியாமல் சிந்து பைரவி ஜனகராஜ் நிலையில் இருக்கின்றேன்...

1. உங்கள் விமர்சனம் படிக்கும் போது , கதை என்பது ஒரு அரிய கண்டுபிடிப்பை தீவரவாதிகள் கையில் சிக்காமல் காப்பற்ற நடக்கும் நிகழ்வுகள் என்று தெரிகிறது. கமலின் பல வேடங்கள் இந்த கதையின் ஓட்டத்தில் எப்படி சேரும் என்று ஓரளவு ஊகிக்க முடிகிறது ஆனால், இந்த ரங்கராஜன் கேரக்டரும், 12, நூற்றாண்டு நிகழ்வுகளும், சைவ - வைணவ போராட்டங்களும் ஏன்? இந்த கதையோட்டத்தில் எப்படி ஒன்றி வருகிறது என்று யாரும் எழுத வில்லையே ஏன்? அது மிகப்பெரிய சஸ்பென்ஸா???

2. இந்த படத்தில், சைவ , வைணவ சன்டை காட்சி.. ரங்கநாதருடன் கமலை கட்டி கடலில் போடுவது, கீதை மேல் நிற்பது போன்று பல காட்சிகள் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு , அவை தள்ளுபடி செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

நீதிமன்றமும், படத்தை பார்த்துவிட்டு ஆட்சேபம் இருந்தால் வழக்கு போட சொல்லியுள்ளது..

படம் பார்த்தவர்களே சொல்லுங்கள்.. மீன்டும் வழக்கு போட முகாந்திரம் உள்ளதா?? ட்ரையிலரில் பார்த்தது போல, கடவுள் சிலையுடன் கமலை கட்டி கடலில் போடுவது போல இருக்கிறதா?? ஆட்சேபத்திற்குறய காட்சிகள் உள்ளதா??

விமர்சனங்கள் படித்த போது, சைவ , வைணவ சன்டை இருப்பதாக, கடலில் வீசும் காட்சிகள் இருப்பதாக தெரிகிறது.. ஆனால் தெளிவாக யாரும் அது பற்றி எழுதாததால், புரியவில்லை..

படம் பார்த்து விமர்சனம் எழுதிய யாரும் இது பற்றி எழுதாததால் இந்த பதிவு போடும்படி ஆகிவிட்டது.. !!!

குறிப்பாக , சர்ச்சையை கிளப்பிய 2 வது விஷயம் பற்றியாவது எழுதியிருக்கலாம் நன்பர்களே.. லக்கியார் எழுதியிருப்பார் என நினைத்தேன்.. விட்டு விட்டார்..

படம் பார்த்தவர்களே, கொஞ்சம் தெளிவுப்படுத்துங்களேன்..
நன்றி..

7 கருத்துக்கள்:

.:: மை ஃபிரண்ட் ::. said...

//1-இந்த கதையோட்டத்தில் எப்படி ஒன்றி வருகிறது என்று யாரும் எழுத வில்லையே ஏன்? அது மிகப்பெரிய சஸ்பென்ஸா???//

சொல்லக்கூடாது என்று எதுவும் இல்லை. முழு கதையையும் விமர்சனம் எழுதுபவரே சொன்னால் அது spoiler ஆகி விடுமே. அப்புறம் கதை விருவிருப்பா இல்லை; ஏனென்றால் நீங்க முழு கதையும் சொல்லிட்டீங்க. அடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சதுனால அந்த காட்சி சப்புனு போச்சுன்னு சொல்ல கூடாதுல.. எல்லா படமும் அப்படித்தானே? ;-)

2- நான் பார்த்த வரை எனக்கு தப்பாக தெரியவில்லை. மற்றவர் கண்ணோட்டத்தில் எப்படி அமைகிறது என்று எனக்கு தெரியாது. :-)

✪சிந்தாநதி said...

தசாவதார விமர்சனங்கள் அனைத்தையும் தனித்தொகுப்பாக இங்கே படிக்கலாம்.

http://tamil.kanimai.com/

ARUVAI BASKAR said...

//1. உங்கள் விமர்சனம் படிக்கும் போது , கதை என்பது ஒரு அரிய கண்டுபிடிப்பை தீவரவாதிகள் கையில் சிக்காமல் காப்பற்ற நடக்கும் நிகழ்வுகள் என்று தெரிகிறது. கமலின் பல வேடங்கள் இந்த கதையின் ஓட்டத்தில் எப்படி சேரும் என்று ஓரளவு ஊகிக்க முடிகிறது ஆனால், இந்த ரங்கராஜன் கேரக்டரும், 12, நூற்றாண்டு நிகழ்வுகளும், சைவ - வைணவ போராட்டங்களும் ஏன்? இந்த கதையோட்டத்தில் எப்படி ஒன்றி வருகிறது என்று யாரும் எழுத வில்லையே ஏன்? அது மிகப்பெரிய சஸ்பென்ஸா???//
இதற்க்கான பதில் கமலுக்கும் ரவிகுமாருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் !
அதனை அப்படியே டீலில் விட்டுவிடுகிறார்கள் .
அந்த கோவில் இருக்கும் தெருவிற்கு அந்த வைரல் பார்சல் வருகிறது அது ஒன்று தான் அதற்கும் படத்திற்கும் உள்ள தொடர்பு .!!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Anonymous said...

ரொம்ப சிம்பிள்
கமலுக்கு தான் எப்பவுமே அறிவு ஜீவின்னு காட்டிக்க புடிக்கும்

சம்பந்தல் இல்லாம நம்பி கதாப்பாத்திரம்.. அந்த நம்பி ககாதாபாத்திரத்தை வைச்சே முழு படத்தையும் எடுத்து இருந்தா தேறி இருக்கும்.. கடைசியில் உப்புக்கு சப்பாணி போல அந்த விழணு சிலை கடைசியில் வருது..

காரணம் - கமல் சார் ரொம்ப சமீபத்தில் ஏதாச்சும் அதன் வரலாறு படிச்சு இருப்பாரு அதான் அதை வைச்சு தான் அறிவு சீவினனு காட்ட நினைப்பு..


சரி .. அந்த கிருமி பாம் விலைக்கு வாங்க நினைத்த அந்த பெயர் தெரியாத வில்லன் ஏதுக்கு இந்தியாவுக்கு வந்து கைதாகனும்.. அதனால் பிரச்சனியாச்சுன்னு தெரியுதுல்லா பின்ன எதுக்கு வரணும்?? இவ்வள்வு தூரம் ப்ளான் போடறவன் என்ன மடசாம்பிராணியா??

Sridhar Narayanan said...

இன்னொரு பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தினை இங்கு மீள்பதிவு செய்கின்றேன் :-))

சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு காரணம் கடலுக்கடியில் நடக்கும் tectonic plates-ன் உரசல்கள். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவினால் வேறு எங்கோ வேறு ஏதோ ஒரு சக்தி விடுபட்டு போகும் சாத்தியகூறுகளை ஆராயும் chaos theory-இன் அடிப்படையில் - பல்வேறு முன்னர் கடலுக்கடியில் சென்று ஒரு கல் கூட இந்த சுனாமிக்கு காரணமாக இருக்கலாம் என்பதுதான் இதன் பின் உள்ள கற்பனை.

ஒரு பேரழிவு ஆயுதம் அந்த கடற்கரையில் வெளிப்பட நேரிடும் வேளையில் அந்த கல்லினால் மெதுமெதுவாக ஏற்படுத்தப்பட்ட அந்த அழுத்தமானது விடுபட உப்புத்தண்ணீரால் அந்த பேரழிவு ஆயுத்ததை nullify செய்துவிடுகிறது.

இறுதிக் காட்சிகளில் வரும் சில வசனங்கள் இதை புரிய வைக்கின்றன.

சகாதேவன் said...

கோவில் யானைக்கு விபூதி பூசுவதா, நாமம் இடுவதா என்ற அளவில்தான் வைணவர்களும் சைவர்களும் சண்டை போட்டதாக யாமறிவோம். கோவிலில் இருக்கும் ரங்கநாதரை கடலில் போட்டதை யாமறியோம். நெப்போலிய குலோத்துங்கன் போல நானும் ஹரிஓம் சொன்னேனா?
என் விமர்சனத்தை பாருங்கள். அதான் கடைசியில் சுனாமி ரங்கநாதரை மீண்டும் கரையில் கொண்டுவந்து போட்டு விட்டதே. விடுங்கள்
சகாதேவன்

வீ. எம் said...

நன்பர்களே, வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி!