மதியம் ஞாயிறு, டிசம்பர் 23, 2007

அரசியல்வாதி

ஆட்டோவில் இருந்து இறங்கி பங்களாவை நோக்கி நடந்தாள் கவிதா..

கவிதா 30 ஐ நெருங்கிக்கொண்டிருந்தாள், பார்பவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் வசீகர முகம் மற்றும் உடலமைப்பு...


ஏதோ ஒரு சோகம், அவள் முகத்தில் இழையோடியது

பங்களா வாசலில் வந்து, கறுப்பு கிரானைட்ல் தங்க நிற எழுத்துக்களில் பதிக்கப்பட்டிருந்த பெயர் பலகையை படித்தாள்.. "சாம்பவசிவம், மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர்"
படித்துக்கொண்டே உள்ளே நுழைய முற்பட்டவளை , செக்க்யூரிட்டி குரல் தடுத்தது..

யாரும்மா நீ.. என்ன வேணும்..

சார், என் பேரு கவிதா, விதவைகள் மறுவாழ்வு நிதி சம்பந்தமா மனு கொடுத்தேன், அமைச்சர் ஐயா வந்து பார்க்க சொன்னாங்க.. இதோ கடிதம் என்று காண்பித்தாள்..

வாங்கி சரி பார்த்த செக்யூரிட்டி, சரி போய் அந்த பெஞ்சில உட்காருமா.. கூப்பிடுவாங்க..


அவளின் உடலை மேலிருந்து கீழ் கண்களால் அளந்த செக்யூரிட்டி, அமைச்சர் ஐயா காட்டுல இன்னைக்கு மழை தான்.. மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

கரை வேட்டிகள் வருவதும், போவதுமாக இருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே அமர்ந்து கொன்டிருந்த கவிதா, யாரும்மா கவிதா என்ற குரல் கேட்டு திரும்பினாள்..

வெள்ளை சட்டை பேண்ட் அனிந்த, படித்த தோற்றத்தில் இருந்த இளைஞன் தன்னை அமைச்சரின் உதவியாளர் ராஜன் என அறிமுகபடுத்திக்கொண்டான்..

உங்க கனவர் எப்போ இறந்தாரு?

6 மாசம் ஆகுதுங்க.. இன்னும் அரசு தர விதவைகள் உதவி பணம் வரலைங்க. அதான் ஐயாவ பார்த்து.. விசும்பினாள் கவிதா...

சரி சரி, அழாதே.. அதான் ஐயாவ பார்க்க வந்துட்டேல.. கிடைச்சுடும்,.. கவலை படாதே.. கொஞ்சம் ஐயாவ அனுசரிச்சு போனா.. எல்லாம் நல்லபடியா சீக்கிரம் நடக்கும்.. புரியுதா..சொல்லிக்கொண்டே நடந்தான் ராஜன்.. குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள் கவிதா..

அமைச்சரின் அறைக்குள் நுழைந்ததும் 'வணக்கம் ஐயா' என்றாள் பவ்யத்துடன்..

வணக்கம், உட்காரும்மா .. இருக்கையை காட்டினார் அமைச்சர்...அவளின் அங்கங்களை அனு அனுவாக ரசித்தன அவரின் கண்கள், கருப்பு கண்ணாடிக்கு பின்னாளிருந்து..

உன் மனுவை படிச்சேன்.. நிறைய சம்பிரதாயம் இருக்குமா .. அதெல்லாம் முடிச்சப்புறம் தான் உனக்கு பணம் வரும்.. நான் எல்லாம் பாத்துக்குறேன்.. மத்த விஷயங்களை என் பி. ஏ சொல்லுவார்.. கேட்டுக்கோமா.. சொல்லிவிட்டு.. ராஜனை அர்த்த புஷ்டியுடன் பார்த்தார்.. ராஜனும் கண்களால் அவருக்கு சைகை செய்தான்..

சரிங்கய்யா.. ரொம்ப நன்றிங்கய்யா.. சொல்லிவிட்டு வெளியே வந்தாள்..

பின்னாலேயே ராஜனும் வந்தார்...

என்னம்மா ஐயா சொன்னத கேட்டியா ??.. எல்லாம் உன் கையில தான் இருக்கு.. அடுத்த சனிக்கிழமை சாயந்திரம் 7.00 மனிக்கு மதுரவாயல்ல இருக்க ஐயாவோட பன்னை வீட்டிற்கு வந்துடு.. ஐயா அங்கே இருப்பார்... ஒரு ரெண்டு மனி நேரம்..

திங்கட்கிழமை உனக்கு அரசாங்கம் தரும் விதவைக்கான உதவி பணம் வீடு தேடி வரும்.. அவள் கையில் பன்னை வீட்டு விலாசத்தை தினித்து அனுப்பி வைத்தார்.யோசிச்சு பாரு.. காலைல எனக்கு போன் போட்டு நல்ல சேதியா சொல்லு..

இரண்டு நாட்கள் மிகப்பெரிய மனப்போராட்டத்துக்கு பிறகு.. போன் எடுத்து, ராஜனின் என்னை அழுத்தி, ஒரே வார்த்தையில், சரி என்று சொல்லி, கட் செய்தாள்..

சனிக்கிழமை மாலை 3 மனி, அமைச்சர் பரபரப்பாக இருந்தார்..அவர் துறையில் நடந்த ஒரு ஊழல் பற்றி அக்கு வேறு ஆனிவேறாக ஒரு புலனாய்வு இதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.. அதன் அடிப்படையில், முதல்வர், அமைச்சரை வந்து பார்க்கும்படி கட்டளையிட்டிருந்தார்.. படபடப்புக்கு அதுவே காரனம்..

சந்தர்ப்பம் சரியில்லாததால், தயங்கி தயங்கி அவர் அருகில் வந்த ராஜன் , ஐயா, இன்னைக்கு 7 மனிக்கு பன்னை வீட்டுல கவிதா..... இழுத்தான்..

வேண்டாம் ராஜன், அதை கேன்சல் பன்னிடு, அந்த பொண்ணை நாளைக்கு வரச்சொல்லு.. சொல்லிவிட்டு படபடப்புடன் அவர் அறைக்கு சென்றுவிட்டார்..

இரவு 7 மனி, மதுரவாயல் பன்னை வீடு..

இதோ பாரு கவிதா.. அமைச்சர் ஐயா வர முடியாத சூழ்நிலை, நாளைக்கு வெச்சுக்கலாம், ஆனா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. எதுவா இருந்தாலும், ஐயாகிட்ட நான் சொன்னா தான் எடுபடும். புரிஞ்சுக்கோ... வந்ததே வந்துட்டே.. எவ்வளவோ பேர தொட்டிருக்கேன்... ஆனா உன்னை மாதிரி... அம்சமான தேக்கு உடம்பு... எனக்கும் அடுத்த வாரம் கல்யாணம்.. கல்யாண நெருக்கத்துல ஒரு ட்ரியல் பார்த்த மாதிரியும் இருக்கும்.. என்ன சொல்றே ... கேட்டுக்கொண்டே அவள் தோள் மீது கைப்போட்டான்... சிறிது தயக்கத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல் அவனுடன் அறைக்குள் சென்றாள் கவிதா...

சுமார் 2 மணி நேரம் கழித்து அவள் வெளியே தெருவில் நடந்தாள்...

தன் கைப்பையில் சினுங்கிய கைப்பேசிய எடுத்தாள்.. மறுமுனையில்

அமைச்சரின் குரல்..

என்ன சுதா எல்லாம் திட்டம் போட்டபடி நடந்ததா???

ஆமாம் சார், நீங்க சொன்ன மாதிரியே வந்தாரு.. பேசினாரு .. எல்லாம் முடிஞ்சது..

அதானே, அவன் சபல கேஸ்னு எனக்குத் தெரியுமே... சரி.. எதுவும் பாதுகாப்பு இல்லாமத்தானே நடந்தது...??


ஆமாம் சார்... எந்த பாதுகாப்பும் இல்ல..

குட்...சரிம்மா... நீ இனிமே அந்த தொழிலுக்கு போக வேண்டாம் .. HIV பாசிடிவ் பாதிக்கபட்டோருக்கான அரசு உதவி உனக்கு கிடைக்க ஏற்பாடு பன்னிடுறேன்... அது மட்டுமில்லாம.. .. பேசின மாதிரி 50,000 உன் வீடு தேடி வரும்..

சரிங்க சார். ரொம்ப நன்றி.

கைப்பேசி துண்டிக்கப்பட்டது..

இலவச சைக்கிள் திட்டத்துல, எனக்கு வர வேண்டிய கமிஷன் தொகை 35 லட்சத்தை மொத்தமா அடிச்சு உன் பெயர்ல போட்டுகிட்டா , உன்னை சும்மா விட்டுடுவானா இந்த சாம்பவசிவம்.. வெச்சேன் பாரு உனக்கும் , உன் சந்ததிக்கும் வேட்டு.. நான் அரசியல்வாதிடா.... சிரித்துக்கொண்டே 3 வது ரவுண்ட் ஸ்காட்ச் விஸ்கியை உள்ளே தள்ளினார் சமூக நலத்துறை அமைச்சர்..

ரீது டார்லிங், இப்போ தான் உன் பெயர்ல ஒரு அர்ச்சனை பன்னிட்டு கோயில்ல இருந்து வெளியே வரேன்டா...

எதையோ சாதித்த திருப்தியில், அடுத்த வாரம் தான் திருமணம் செய்ய இருக்கும் பெண் ரீதுவுடன் கைப்பேசியில் பேசிக்கொண்டே , பன்னை வீட்டை விட்டு வெளியே வந்தான் ராஜன்..

முறையற்ற உறவுகளை தவிர்ப்போம் - எய்ட்ஸை ஒழிப்போம்..

.பன்னை வீட்டின் எதிரே இருந்த டிஜிட்டல் பேனர் நியான் வெளிச்சத்தில் மின்னியது

வீ எம்..


சர்வேசனின் ந ஓ க போட்டிக்கு.....

சிறந்த நச் கதை GROUP A வாக்கெடுப்பில் பங்குபெற இங்கே சொடுக்கவும்.. http://surveysan.blogspot.com/2008/01/blog-post.html -

26 கருத்துக்கள்:

tommoy said...

எய்ட்ஸ் சார்ந்து... சரியான நேரத்தில் எழுதிய கதை.. நன்றாக உள்ளது.. கடைசி வரை அனுமானிக்க முடியாத விதத்தில் இருந்தது முடிவு.
அரசியல்வாதியை தான் கவிதா பழி வாங்க போகிறாள் என நினைத்தேன்.. சூப்பர் ட்விஸ்ட்.. அதுவும்.. எதிர்பாராத விதமான பழிவாங்கள்.. கடைசி வரை சஸ்பென்ஸ்.
உதவியாளரை அமைச்சரே பழிவாங்கியது அடுத்த ட்விஸ்ட்..

வெற்றி பெற எல்லா அம்சம் உள்ள கதை.. வாழ்த்துக்கள் வீ எம்

முரளி

வாக்காளன் said...

நன்றாக உள்ளது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்

MyFriend said...

நல்ல கருத்துள்ள நச் கதை. :-)

Anonymous said...

கதை நல்லாவே இருக்கு. எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கூடுதலோ?

ன/ண வைக் கொஞ்சம் சரி செய்யுங்க.

டக்குன்னு ப்ளோவைக் குறைக்குது.

வீ. எம் said...

நன்றி முரளி, வாக்காளன், துளசியக்கா, மை ப்ரண்ட் அவர்களே..

ஆமாம் துளசியக்கா, கொஞ்சம் அவசரத்துல எழுதினதுல, நிறைய எழுத்துப்பிழை.. திருத்திக்கொள்கிறேன்

SurveySan said...

நல்ல திருப்பம். :)

குழலி / Kuzhali said...

எளிதில் ஊகிக்க முடியாத திருப்பத்துடன் கதை சூப்பரப்பு...

வீ. எம் said...

நன்றி திரு குழலி, திரு சர்வேசன்.

முதலில் கவிதா அரசியல்வாதியை (கல்வி அமைச்சராக வைத்து) பழிவாங்குவது போல் தான் எழுதினேன் (தன் தம்பிக்கு கல்வி கற்க தடை ஏற்படுத்தியதால்)..

அது வழக்கமான திருப்பமாக பட்டதால், அடுத்த 15 நிமடத்தில் யோசித்து, கல்வி அமைச்சரை சமூக நலத்துறை அமைச்சராக மாற்றி.. நடுவில் உதவியாளரை நுழைத்து.. கதையை இந்த போக்கில் எடுத்து சென்றேன்.

நன்றி
வீ எம்

வினையூக்கி said...

அமைச்சரைத் தான் பழிவாங்கப் போகிறாள் என்று நினைத்தால்..முடிவு நச்சுன்னு சூப்பரா இருந்துச்சு

வெட்டிப்பயல் said...

கதை சூப்பர் :-)

Nithi said...

எய்ட்ஸ் சார்ந்து... சரியான நேரத்தில் எழுதிய கதை.. நன்றாக உள்ளது.. கடைசி வரை அனுமானிக்க முடியாத விதத்தில் இருந்தது முடிவு.

வீ. எம் said...

வினையூக்கி, வெட்டிபயல், நித்யா - மூவருக்கும் மிக்க நன்றி.. GROUP A வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டீர்களா.. இல்லையெனில் அதையும் கையோடு முடித்துவிடுங்களேன்.. நன்றி வீ எம்

நந்து f/o நிலா said...

சரிதான் இப்போதெல்லாம் அமைச்சரை விட அவரது உதவியாளார்கள்தான் மோசமாக ஆடுகிறார்கள். நல்ல ட்விஸ்ட்தான்.

வாழ்த்துக்கள் வீ.எம்

வீ. எம் said...

என் கதையை படித்த, கருத்தளித்த, வாக்களித்த, வாக்களிக்க தவறிய அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி .

இந்த போட்டியின் மூலம் , பெரிய இடைவெளிக்கு பிறகு என்னை எழுத ஊக்கமளித்த சர்வேசனுக்கு ஸ்பெஷல் நன்றி.

//http://etamil.blogspot.com/2007/12/group.html//

கூரு A கதைகள் அனைத்தும் படித்து, என் கதைக்கு 'நச்' க்கு முதலிடமும், மொத்தத்தில் 2 வது இடமும் கொடுத்த பாஸ்டன் பாலாவுக்கு மிகப் பெரிய நன்றி.

அன்புடன்
வீ எம்

சதங்கா (Sathanga) said...

super twist. oottum pottaachu v.m. vetri pera vaazthukkal

வீ. எம் said...

மிக்க நன்றி சதங்கா..

manjoorraja said...

உங்களின் கதை நல்ல கதை. நச் போட்டிக்கு ஏற்ற கதை வெற்றிக்கான தகுதிகள் இருக்கிறது என்றாலும் ஒரு சில மதிப்பெண்கள் குறையும் என்றே நினைக்கிறேன்.

இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு கிடைக்கும்

enRenRum-anbudan.BALA said...

நல்ல கருத்துள்ள நச் கதை. :-)

FYI, I have voted for you ONLY, though your chance of winning does not look very bright !!!

வீ. எம் said...

மிக்க நன்றி மஞ்சூர் ராசா / என்றென்றும் பாலா..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//கதை வெற்றிக்கான தகுதிகள் இருக்கிறது என்றாலும் ஒரு சில மதிப்பெண்கள் குறையும் என்றே நினைக்கிறேன்.//

காரணத்தையும் சொல்லியிருந்தால், திருத்திக்கொள்ள வசதியாக இருந்திருக்கும் ராசா.

//FYI, I have voted for you ONLY, though your chance of winning does not look very bright !!!//
வெற்றி தோல்வியை விட போட்டியில் பங்கு பெற்று முதல் சுற்றில் வெற்றிப்பெற்றது மன நிறைவை தருகிறது பாலா.

வோட்டிங் முறையில் சில நேரங்களில் personal influence factor வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஆகவே தோல்வியை நினைத்து வருந்தப்போவதில்லை..

57 பேரில் முதல் 8 ல் வந்ததும். பாஸ்டன் பாலா என் கதைக்கு தந்த மதிப்பெண்னையும் நினைத்து சந்தோஷப்படுவேன்.

வீ எம்

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கதை...நச் முடிவு..

வீ. எம் said...

பாச மலர்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வீ எம்

Sathiya said...

ஆஹா! இந்த மாதிரி ஒரு நிஜ அரசியல்வாதி கூட யோசிச்சிருக்க மாட்டாரே! ஒரு நல்ல மெசேஜ் சொல்லி இருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நெல்லைக் கிறுக்கன் said...

நல்ல கதை. வாக்களிக்கலாம்னு போனா அதுக்குள்ள முடிஞ்சு போச்சுன்னு போட்டுட்டாங்க...

உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வீ. எம் said...

திரு நெல்லை கிறுக்கன், திரு சத்யா வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி,

வெற்றி.. சந்தேகம் தான்.. முதல் சுற்று வெற்றிய நெனைச்சு சந்தோஷபடவேண்டியது தான்..

cheena (சீனா) said...

நல்லதொரு கதை. நச்சென்ற முடிவு - முதல் பரிசுக்குத் தகுதியான கதை. எதிர்பாராத திருப்பம் - பாவம் ராஜன் - HIV சார்ந்த கதை - நல்ல ட்விஸ்ட் - வெற்றி பெற வாழ்த்துகள்.

எழுத்துப் பிழைகள் அதிகம் -
பின்னாளிருந்து : பின்னாலிருந்து
பன்னை : பண்ணை
மனி : மணி
என்னை : எண்ணை

இவை வெற்றி வாய்ப்பை பாதிக்குமா

SurveySan said...

டாப்-8க்கு வாழ்த்துக்கள்!

Click here to view results