அ தி மு க இனி தேறவே தேறாது.

அதிமுக இனி தேறவே தேறாது என்று சேலம் மாவட்ட அ தி மு க முன்னாள் செயலாளர் / முன்னாள் எம் எல் ஏ வெங்கடாசலம் குமுதத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அ தி மு க வில் இருக்கும் போது இதை சொல்லவில்லை, நேற்று தே மு தி கவில் சேர்ந்த பிறகு இப்படி ஒரு பேட்டி.

அவர் அ தி மு கவை விட்டு போனது, தே மு தி கவில் சேர்ந்தது பற்றி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அரசியல்வாதி எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று பார்கின்ற போதுதான் அடப்பாவிங்களா என்ற சொல்லத்தோண்றுகிறது.

அவர் பேட்டியில் சொல்லியிருக்கும் சில விஷயங்கள்

இது உடனடி முடிவில்லையாம் , 6 மாத காலமாக யோசித்து எடுத்த முடிவாம்.

அதே பேட்டியில் அவர் சொல்லியிருப்பது - இரண்டு முறை ஆட்சியிலிருந்தும் ஜெயலலிதா நல்ல விஷயங்கள் எதுவும் செய்யவில்லையாம்.. (ஜெ உருப்படியாக ஒன்றும் அதிகமாக செய்யவில்லை என்பது உண்மை என்ற போதிலும்)

அதாவது , 1991 - 2006 வரையான காலகட்டம் பற்றி சொல்கிறார்... ஆக, 15 வருடங்கள் கழித்து, இப்போது தான் இவருக்கு தெரிந்திருக்கிறது.. அல்லது இந்த 6 மாதமாக மட்டுமே இவர் சுயமாக சிந்தித்துள்ளார். 14.5 வருடங்கள் சிந்திக்கும் திறனற்று வெறுமனே வாழ்ந்திருக்கிறார்.

ஒரு கட்சியை விட்டு போகும் எவருமே இதனை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பிரிகின்ற நேரத்தில் அப்போது நடந்த பிரச்சனை, தவறுகள் என எதையும் காரணம் சொல்லாமல், ஒட்டு மொத்தமாக 15 , 20 வருடங்களாக சேர்த்து குறை சொல்லுவது என்பது இவர்கள் இயல்பாகிவிட்டது

ஆக, ஊழல் , கொள்ளை போன்றவற்றிக்கு இவர்களுக்கு முடிவெடுத்து செயல்பட 2 நாள் போதும், மற்ற விசயங்களுக்கு (மக்களுக்கு நல்லது செய்வது உட்பட) எல்லாம் இவர்களுக்கு 10 - 15 வருடங்கள் ஆகும்.
நல்ல அரசியல்வாதிங்கடா நீங்க..

பிப்ரவரி 24 - சேலம் பக்கம் சென்றிருந்தால் இவர் எப்படியெல்லம் கட் அவுட் வைத்து ஜெ வை புகழ்ந்திருப்பார் என தெரிந்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இப்போது கேப்டனிடம் போய் சேர்ந்திருக்கிறார். "விஜயகாந்த் ஒன்றுமே செய்யவில்லை ஆகவே என் தாய்க்கட்சியான தி மு க வில் இனைந்து தலைவர் கலைஞர் வழி நடக்கப்போகிறேன்" என்று சொல்லும் நாள் வரும் என நம்புவோம்..

வந்தவரை அன்போடு அரவனைத்துக்கொண்டுள்ளார் கேப்டன், அவர் கட்சியில் இப்படி வந்தவர்கள் தான் 75%.. அன்போடு அரவனைத்துக்கொண்டுள்ள கேப்டன், விரைவில் பிரியா விடை கொடுக்கவேண்டி வரும் என்பதையும் அறிந்திருப்பாரா???

நல்ல அரசியல்வாதிங்கடா நீங்க... !

4 கருத்துக்கள்:

tommoy said...

இந்திய -- குறிப்பாக தமிழக அரசியலின் தலையெழுத்து இது.. என்ன செய்ய..

//ஆக, ஊழல் , கொள்ளை போன்றவற்றிக்கு இவர்களுக்கு முடிவெடுத்து செயல்பட 2 நாள் போதும், மற்ற விசயங்களுக்கு (மக்களுக்கு நல்லது செய்வது உட்பட) எல்லாம் இவர்களுக்கு 10 - 15 வருடங்கள் ஆகும்.
//

இது நச் வரிகள்

வீ. எம் said...

Thanks for the visit Murali

Anonymous said...

அரசியல் ஊழல் பொய் பித்தலாட்டம் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே வார்த்தைகள் தான்.

ஆனாலும் அளவுக்கு மீறிய அநியாயம்,திமிர்,யாரையும் மதிக்காமல் அவமானப் படுத்திப் பேசுவது,

தன்னை ஆளாக்கிய நடிகரையே ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் தேவையென்ற
உடன் படங்காட்டுவது,

அசுரர்கள்,கடைசிப் போராட்டம் அறிக்கைகள் பேச்சுக்கள் பி.ஜே.பி யுடன் எப்போதும் கூட்டு இல்லையென்று சொல்லிவிட்டு மீண்டும் கூட்டு

இவை போதும்.இனி தேறாது என்பதற்கு.ஓட முடிந்தவர்கள் ஓடுகிறார்கள்.ஓட முடியாதவர்கள் மனம் புழுங்கிக் கொண்டு வெளியே
சிரிக்க முயலும் பரிதாபம்!

வீ. எம் said...

Hi Mr Coward Anony. thanks for your comments. hope you had nice time. I am rejecting it any way. thanks
VM