Showing posts with label தி மு க பொதுக்குழு. Show all posts
Showing posts with label தி மு க பொதுக்குழு. Show all posts

தினவெடுத்த தினமலருக்கு முதல்வர் கொடுத்த செருப்படி

திமிர் பிடித்த தினமலர் அவ்வப்போது தமிழர் எதிர் கருத்தும், சின்டு முடியும் வேலையையும் செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.

நேற்று கூட ஒரு செய்தியில், கீ . வீரமனி அவர்கள் தன் தாயின் முதலெழுத்தை தன் இனிஷியலாக போட்டுக்கொண்டதை கொச்சைப்படுத்தும் வகையிலும் அதே போல சின்டுமுடியும் விதமாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு பல பதிவர்களிடம் செருப்படி பட்டது.. ஒரு சில பதிவர்கள் மட்டும் பரிந்துவந்தார்கள்..

இதோ பட்ட செருப்படி போதாது போலும்.. இந்த கேடு கெட்ட பத்திரிக்கை எப்போது திருந்துமோ தெரியவில்லை.

மீன்டும் இன்று தன் விஷமப்பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது.

தி மு க வின் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெறுகிற செய்தியை போட்டிருக்கும் இந்த கேடுகெட்ட பத்திரிக்கை நடுவில் வழக்கம்போல தன் விசமத்தனத்தை காட்டியுள்ளது..

எப்படி நேற்று, கீ வீரமனி அவர்களின் இனிஷியில் பற்றிய செய்தியை கலைஞரின் பேட்டி செய்தியோடு இனைத்து , அது ஏதோ கலைஞர் சொன்னது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி சின்டு முடியும் வேலையை செய்ததோ, அதே போல்

தி மு க பொதுகுழு பற்றிய செய்தியை வெளியிட்டு, அதே செய்தியின் தொடர்ச்சியாக , இன்று நல்ல நாள் என்ற பத்தி தலைப்பிட்டு கீழ்க்கண்ட செய்தியை தந்துள்ளது.. (சுருக்கம் இங்கே)

இன்று நல்ல நாள் - முழுதும் மூல நட்சத்திரம், அனுமன் ஜெயந்தி , 9.30 வரை மகர லக்னம், எந்த காரியம் தொடங்கினாலும் வெற்றி, இன்றைய நாளின் சிறப்பு படி குரு பார்வையினால் குடும்பத்தலைவர் எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் நல்ல முடிவு எடுப்பார், பொதுக்குழுவில் எதிர்ப்பு வராது, வந்தாலும் இடம் தெரியாது போய்விடும்

என்ற ரீதியில் இந்த கேடுகெட்ட பத்திரிக்கை, ஒரு விஷயத்தை இங்கே சேர்த்து விஷமத்தனம் செய்துள்ளது. தி மு க ஏதோ இந்த நாளை ஜோதிட நம்பிக்கையில் குறித்துள்ளதாக தோண்றும் விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளது இந்த தினமலர்.

தி மு க பொதுக்குழு செய்தியில் இந்த இனைப்பு செய்தி தேவையா?அதே போல மற்ற செய்திகளில் எல்லாம் பார்த்தேன். இப்படி இனைப்பு இருக்கிறதா என்று.. எங்கும் இல்லை

பொதுக்குழு கூடிய சில நிமடங்களில் ஸ்டாலின் கலைஞரிடம் தினமலர் பத்திரிகையை கொடுத்து ஏதோ சொல்வதை நேரலையில் காண முடிந்தது. என்ன இது பொதுக்குழு நடக்கும் வேளையில் கலைஞரின் கையில் தினமலர் என்ற யோசித்தேன்..

என்ன விஷயம் என்பது கலைஞர் ஏற்புரையின் போது தான் புரிந்தது..
கலைஞரின் ஏற்புரையிலிருந்து..

இன்றைய தினமலர் பத்திரிக்கை ஒரு செய்திவெளியிட்டுள்ளது, நம் கழக பொதுக்குழு கூட்டம நடக்கும் செய்தியை வெளியிட்டு, அதோடு ஒட்டி இந்த நாளின் சிறப்புகள் என்று சிலவற்றை குறிப்பிட்டுள்ளது. இன்று நிறைந்த அமாவாசையாம், நாள் முழுதும் சிறப்பான மூல நட்சத்திரமாம், அனுமார் ஜெயந்தி நாளான இன்று 9.45 வரை மகர ராசியாம், மிகச்சிறப்பான நாளாம், என்றும் அது தொடர்ந்து சில செய்திகளையும் அந்த ஏடு இன்று வெளியிட்டுள்ளது.
உள்ள படியே நானோ, பேராசிரியரோ இல்லை ஆற்க்காட்டாரோ பஞ்சாங்கம் பார்த்து. எது நல்ல நாள் என்று தேடி இந்த 27 ம் நாளை பொதுக்குழு கூடும் நாளாக அறிவிக்கவில்லை . எங்களுக்கு 27 ம் தேதி வசதியென்று பட்டதால் இந்த நாளில் இந்த பொதுக்குழு கூடியுள்ளது..
நாமே செய்யாத ஒரு விஷயத்தை தினமலர், ஜோதிடத்தை ஆராய்ந்து செய்தி வெளியிட்டுள்ளது.


9.45 வரை நல்ல நேரம், செய்யும் காரியம் நன்றாக முடியும் என்று செய்தியை பார்த்துவிட்டு.. நான் இங்கே 10.10 , 10.15 க்கு தான் வந்தேன்.. 9.45 வரை நல்ல நேரம் என்றும், அப்பொது எடுக்கப்படும் முடிவுகள், செய்யப்படும் செயல்கள் வெற்றிப்பெறும் என்ற அந்த செய்தி ஏதோ நல்ல நேரம் பார்த்து இந்த பொதுக்குழு நடத்தப்படுகிறதோ என்ற தோற்றம் வரலாம் என்பதால், நான் 9.45 க்கு இங்கே வராமல் , 10 மனிக்கு மேல் வந்தேன்..

நேரடியாக கலைஞர் அவர்களுக்கு செருப்படி கொடுத்திருக்கவேண்டும்
ஆனால் நாசூக்காக கொடுக்கப்பட்ட செருப்படி இது. இதெல்லாம அந்த கேடுகெட்ட பத்திரிக்கையின் தோலுக்கு உரைக்காது..

இந்த பத்திரிக்கை , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுக்கும்,குறைந்தது அரசியல் நிகழ்வுகளுக்கு இப்படி நாள் பார்த்து , ஜோசியம் பார்த்து , பலன்களை அந்த செய்தியினுடன் சேர்த்து போடுமா??

டேய் தினமலர் முன்டங்களா - உங்களின் இந்த பொதுநல சேவை தி மு க எனும் ஒரு கட்சிக்கு மட்டும்தானா?
தொடரட்டும் உங்கள் குல வழக்கமான சின்டு முடிதல் வேலை.. !!