Showing posts with label கணக்கு. Show all posts
Showing posts with label கணக்கு. Show all posts

உங்களால் முடியுமா ? முயன்று பாருங்களேன்

இது தாங்க கணக்கு TAN X = N எனில் , வரிக்குதிரை = குதிரை என நிரூபிக்கவும்.



ரொம்ப யோசிச்சு மன்டைய ஒடைச்சுக்காதீங்க.. விடை கீழே இருக்கு பாருங்க
__________________________________________________________

விடை


TAN X = N


முதல் படி


TAN X = N இதனை இருப்பக்கமும் N ஆல் வகுக்கவும்

TAN X / N = N/N

=> TAX = 1 ( TAN X/ N = TAX & N/N = 1)


இரண்டாம் படி


வந்திருக்கும் விடையின் இரு பக்கத்தையும் குதிரையால் பெறுக்கவும்


TAX * குதிரை = 1* குதிரை


ஆக, இப்போது நமக்கு கிடைத்திருக்கு விடை


TAX குதிரை = குதிரை


இது தான் இந்த கணக்கின் மிக முக்கியமான கட்டம் மாணவர்களே, ஆகவே என் அருமை மாணவச்செல்வங்களே, கூர்ந்து கவனியுங்க.. சரியா? "TAX" என்பதன் தமிழாக்கம் "வரி" என்பது உங்கள் அனைவருக்கு தெரிந்திருக்கும் இல்லையா?


நிச்சயம் தெரிந்திருக்கும், ஏனெனில் நீங்கள் எல்லாம் புத்திசாலி மாணவர்கள்.

மூன்றாம் படி


நமக்கு மேலே கிடைத்துள்ள விடையை (இரண்டாம் படி விடை) இரு பக்கமும் முழுமையாக தமிழ் படுத்தினால், நமக்கு கிடைப்பது

TAX குதிரை = குதிரை

வரிக்குதிரை = குதிரை

என் அருமை மாணவர்களே, நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து, இந்த கணக்கினை முடித்து, வரிக்குதிரை = குதிரை என்பதை நிரூபித்து விட்டோம்..

நம்மை நாமே பாராட்டிக்கொள்ள, பலத்த கையொலி எழுப்புவோமா? . அனைவரும் ஜோராக கைத்தட்டுங்கள்..
_______________________

PIT, Wifeology, Husbandalogy மட்டும் தான் வீட்டுப்பாடம் தருவார்களா.. ??

இதோ இந்த வகுப்பின் வீட்டுப்பாடம்..


COS X = X என்றால், கழுதைப்புலி = புலி என்று நிரூபிக்கவும்..

விட்டுப்பாடத்தின் விடையை கருத்து பெட்டியில் செல்லுங்கள் மாணவர்களே..


மின்னஞலில் இது வந்த போது , யாம் பெற்ற கடுப்பு , பெறுக இவ்வலைப்பதிவர் உலகம் என்ற நல்ல என்னத்தில்...


அப்பாடா, பொங்கல் மொக்கை போட்டாச்சு..


அன்பு பொங்கல் வாழ்த்துக்களுடன்

வீ எம்

பொங்கலோ பொங்கல்.