யோ.., ஆ..றி ஆராய்ச்சியில் கரை கண்டவர்
அன்பான வலைப்பூ நன்பர்களே
வாக்களித்தமைக்கு நன்றி. அப்படியே ஏன் அந்த குறிப்பிட்டவருக்கு வாக்களித்தீர் என கருத்து சொல்லவும்
விளம்பரதாரர் நிர்பந்தம் இல்லா அரட்டை அரங்கம். சுதந்திரமாக, எதை பற்றியும் விவாதிக்கலாம்- அன்புடன் வீ எம்
அன்பான வலைப்பூ நன்பர்களே
வாக்களித்தமைக்கு நன்றி. அப்படியே ஏன் அந்த குறிப்பிட்டவருக்கு வாக்களித்தீர் என கருத்து சொல்லவும்
1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?
இப்போது எதிர்ப்பு வராத பட்சத்தில் அடுத்த ஆட்சியாளர் இதனை மாற்றாமல் இருக்கலாம்.
இது தாங்க கணக்கு TAN X = N எனில் , வரிக்குதிரை = குதிரை என நிரூபிக்கவும்.
வலைப்பதிவு நன்பர்களே,
வணக்கம்.
சர்வேசன் அவர்களின் நச் கதை போட்டி பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை.. உங்களுக்கே நன்றாக தெரியும்.
பல மாதங்களாக எழுதாமல் இருந்த என்னை , இவரின் போட்டி அறிவிப்பு மீண்டும் எழுத தூண்டியது, மிக்க நன்றி சர்வேசன்.
57 கதைகளில், என் மனதுக்கு பிடித்த கதைகள் 11 (என் கதையும் சேர்த்து). ஆக என் கதை இறுதி சுற்றுக்கு வருமா , வராதா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஒரு வழியாக என் கதை இறுதி சுற்றுக்கு வந்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி.
இறுதி சுற்றுக்கு வந்த மற்ற 7 கதாசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள் , இறுதியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.
ஆர்வமுடன் நல்ல கதைகள் தந்த மற்ற 49 கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நீங்களும் அருமையான கதாசிரியர்கள்.
முதல் சுற்றில் என் கதையை படித்த, கருத்தளித்த, வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றிகள் பல..
கூரு A கதைகள் படித்து அருமையான விமர்சனம் தந்த திரு பாஸ்டன் பாலா அவர்களுக்கு நன்றிகள் பல. மக்களே நீங்களும் படித்து பாருங்களேன்.
அனைவரும் தவறாம வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள், மிக முக்கியம், மின்னஞ்சலில் அப்ரூவ் செய்ய மறக்காதீர்கள்.
எனக்கு பிடித்திருந்த 11 கதைகளில், 3 இறுதி சுற்றுக்கு வந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. போட்டி கடுமையாக இருக்கும் என நினைக்கிறேன்...
மற்ற 8 வராததில் எனக்கு சற்று வருத்தமே. எனக்கு பிடித்த 11 கதை பற்றி போட்டி முடிந்த பிறகு பதிவு போடுகிறேன்..
சரி, என் கதைக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்??
என் கதையை நன்றாக படித்துவிட்டு , இந்த மூன்று கேள்விகளை உங்களிடமே கேட்டுப்பாருங்கள்.
1. முடிவு யூகிக்க முடியாததாக இருந்ததா?
2. நல்ல திருப்பம் இருந்ததா?
3. வழக்கமான கதையாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததா?
இந்த மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் வந்தால் (என் கதைக்கு நிச்சயம் வரும்) அரசியல்வாதிக்கு வாக்களியுங்கள்.
மேலும் சில விசயங்கள் யோசிக்கலாம்.
1. கதாபாத்திரங்கள் மனதில் பதிந்தா?
2. கதை இழுவையாக இல்லாமல் நேர்கோட்டில் செல்கிறதா.
3. ஏதேனும் மெஸேஜ் உள்ளதா..
இந்த 3 கேள்விக்கும் ஆம் என்று தான் என் கதைக்கு பதில் வரும் என நம்புகிறேன்.
அப்புறம் என்ன தயக்கம் ??? உடனே அரசியல்வாதிக்கு ஓட்டுப்போடுங்க... நியாயமா, அரசியல்வாதிக்கு தானேங்க ஓட்டு போடனும்...
வாக்கெடுப்பில் பங்கு பெற போகும் அனைவருக்கும், எனக்கு வாக்களிக்க போகும் அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!
அன்புடன்
வீ எம்
Powered byIP2Location.com