மு க ஸ்டாலின் துனை முதல்வரானார்.



உள்ளாட்சித்துறை அமைச்சரும், தி மு க பொருளாளருமான மு க ஸ்டாலின் துனை முதல்வரானார் என்ற அறிவிப்பை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

இந்த பொறுப்பு அவருக்கு வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்ததே. எப்போது என்பது மட்டுமே கேள்வியாக இருந்துவந்தது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி பிரச்சாரத்துக்கு போகாத வேலையிலே மு க ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயனம் செய்தார். அவரின் பிரச்சாரமும் தி மு க வின் கணிசமான வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அப்போதே அவருக்கு உரிய பதவி வந்து சேரும் என்றார் கருணாநிதி. இப்போது வந்துவிட்டது.

சில ஆண்டுகள் முன் வரை வாரிசு அரசியலில் அதிகம் வறுத்தெடுக்கப்பட்ட பெயர் மு க ஸ்டாலின்.

கருணாநிதியின் வாரிசு அரசியல் என்பது பல ஆண்டுகாலமாக ஸ்டாலினை முன்வைத்தே நடைப்பெற்றது. வாரிசு அரசியல் என்றதும் ஸ்டாலின் பெயர் தான் அனைவரின் மனதிலும் வந்து போகும் அளவிற்கு நிலை இருந்தது. ஆணால் கடந்த சில ஆண்டுகளாக வாரிசு அரசியல் விமர்சனத்துக்கும் , ஸ்டாலின் என்ற பெயருக்கும் இடை வெளி அதிகரித்துள்ளது தெரிகிறது

மேயராக, அமைச்சராக, கட்சியின் இளைஞரணி செயலாளராக, துனைப்பொது செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளில் அவரின் செயல்பாடு காரணமாக அவர் கட்சியினரிடம் பெற்ற ஆதரவாலோ அல்லது கனிமொழி , அழகிரி, தயாநிதி வருகையாலோ ஸ்டாலினின் மீதிருந்த பார்வை / விமர்சனம் மாறியிருக்கலாம்.

பொதுவானவர்களும் ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தி என்றே சொல்ல ஆரம்பித்தனர். சமீப காலமாக கருணாநிதியின் வாரிசு, குடும்ப அரசியல் மீது கடும் விமர்சனம் செய்பவர்கள் கூட மு க ஸ்டாலினை விட கணிமொழி, அழகிரி, தயாநிதி ஆகியோர் பெயரையே தங்கள் விமர்சனத்திற்கு துனை அழைக்கின்றனர் . ஸ்டாலின் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்..

கட்சியில் பெரும்பான்மையானவர்களும் ஸ்டாலினை அடுத்த தலைமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றால் மிகையாகாது.

துனை முதல்வராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறாரா பார்க்கலாம்..

கட்சியினர், விமர்சகர்கள், எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும் வலைப்பூ கருணாநிதி எதிர்ப்பாளர்கள் வாய்க்கு இனி நல்ல அவல்..

LTTE LEAD PRABAKARAN ALIVE - PHOTOGRAPH