அழகிரி விடுதலை
அழகிரி விடுதலை
தா கிருட்டிணன் கொலை வழக்கிலிருத்து அழகிரி உள்ளிட்ட 13 பேரை சித்தூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலும் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பில் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் வழக்கு போடாமல் இந்த குறிப்பிட்ட வழக்கில் வழக்கு போட்டுவிட்டு சாட்சிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 2003 ல் அதிமுக அரசால் போடப்பட்டு, பின்னர், தி மு க அரசு வந்தவுடன், அ தி மு க வால் மேல் முறையீடு செய்யப்பட்டு, ஆந்திர மாநில சித்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவகாரமான அறிக்கைகளை ஒரு குறிப்பிட்ட சாராரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்
எது எப்படியோ இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பாகியுள்ள நிலையில், உண்மை குற்றவாளிகலை பிடிப்பது காவல்துறையின் கடமை.
5 வருடங்கள் கவனம் எல்லாம் இவர்கள் பக்கம் இருந்திருந்ததால், உண்மை குற்றவாளிகளுக்கு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. அவர்கள் பிடிபடுவார்களா என்பது சந்தேகமே. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று