விஜய் டிவி கடுப்பு நம்பர் 1 சீசன் 3.
இவங்க அலம்பல் தாங்கலயே சாமி.. என்ன கொடுமைடா இது.
விஜய் டீவியின் ஜோடி நம்பர் 1 மட்டுமே ரசிக்கும்படியாக இருந்தது, அதன் பின் நடத்தப்பட்ட ஜோ. நெ. 1 சீசன் 2 வில் பிருத்திவி, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இடையே நடந்த கூத்து மிக பிரபலம்.
அனைத்து தரப்பிலும், பத்திரிக்கைகளிலும் பரபரப்பாக பேசப்பட்டு அதுவே அந்த நிகழ்ச்சிக்கு ஒரு விளம்பரமாக அமைந்து TRP ரேட்டிங்கில் ஏற்றம் காண்பித்தது.
இயல்பாக நடந்தது என்றும், இல்லை திட்டமிட்ட நாடகம் என்றும், பிருத்திவியை ஓரம்கட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், சிம்பு , மற்ற போட்டியாளர்கள் சேர்ந்து கொடுத்த நெருக்கடி அது என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எப்படியோ, அனைத்து களேபரங்களுடன் நிகழ்ச்சி முடிந்து அடுத்த சீசன் 3 ஆரம்பானது சற்று ஆறுதல்.
சிம்பு மட்டுமன்றி மற்றொரு ஜட்ஜ் சங்கீதா, தொகுப்பாளினி டி.டி செய்கின்ற அலம்பல் தனிக்கதை.
இதோ மீண்டும் அதே போல ஒரு நாடகத்திற்கு அச்சாரம் போடப்படுகிறது.. கடந்த இரண்டு எபிசோடுகளில் ஜீவா மற்றும் அவருடன் நடனம் ஆடும் ஜோடி இருவருக்கும் பிரச்சனை. ஜீவா ஒத்துழைக்கவில்லை என அவர் வழக்கம் போல கண்ணீர் விட. இந்த வாரம் நடுவர் எஸ் ஜே சூர்யா தலையிட்டு ஜோடிகளை மாற்ற, வழக்கம் போல் விஜய் டீவி, சோக கீதம் , அதிர்ச்சி கீதம் வாசித்து, நான்கு பேர் அழுவதை காண்பித்து, குழு குழுவாக விவாதிப்பதை காண்பித்து, இறுதியில் ஜீவா நிக்ழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டார்..
தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல், தாங்கள் நடிக்கும் சீரியலில் செய்வது போலவே, இங்கும் மேடையில் ஓ வென ஒப்பாரி வைக்கும் இவர்கள் ஏன் போட்டிக்கு வர வேண்டும். அதிலும் 10 லட்சம் பரிசு என அறிவித்த பிறகு இது போன்ற ஒப்பாரி அதிகமாகிவிட்டது..
சீரியல் கில்லர்களே.. சாரி, சீரியல் நடிகர்களே, அங்கே மட்டும் நடியுங்கள் போதும்.
சென்ற முறை விளம்பரத்திற்கு கைகொடுத்த அதே யுக்தி இந்த முறையும் சற்று மாற்றம் செய்யப்படு கையாளப்படுகிறதோ என தோன்றுகிறது..
பங்கேற்ப்பாளர்கள் , நடுவர்கள் , நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என அனைவரும் ஓவராக உணர்ச்சிவயப்படுவது என்பது விஜய் டீவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமீபகாலமாக தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது..
நடன நிகழ்ச்சியின் விளம்பரத்தில் , நடனத்தை பிரதானமாக காட்டாமல் இது போன்ற உணர்ச்சிவயபட்ட காட்சிகள், பரபரப்பு விவாதங்களையே பிரதானமாக 30 நிமிடத்திற்கு ஒரு முறை காட்டுவது, விஜய் டீவி இது போன்ற சலசலப்பை தூண்டிவிட்டு, அதில் வியாபார குளிர் காய்வதாகவே தெரிகிறது.
ஏற்கனவே விஜய் டீ வி தன் நிகழ்ச்சியின் பங்கேற்ப்பாளர்கள் தோல்வியில் அழுவதை க்ளோசப்பில் , சோக இசையுடன் காட்டுதல், தொகுப்பாளினிகளின் ஆடைக்குறைப்பு போன்றவற்றால் நிகழ்ச்சியை ஓட்டுகிறது. இதில் இப்போது இது ஒரு புது ட்ரெண்ட்..
பொழுதுப்போக்கு நிகழ்ச்சியை, பொழுதுப்போக்கு அம்சங்களுடன் நடத்தாமல் , இப்படி உணர்ச்சித்தூண்டுதல் முறையில் நடத்தும் டரெண்ட் நல்லதல்ல என்பதை எப்போது அந்த தொலைக்காட்சி புரிந்துக்கொள்ளப்போகிறதோ??
நீங்க என்ன நினைக்கறீங்க, கருத்து சொல்லிட்டு போங்க
வீ எம்
