கலைஞரே - திசைமாறிடுமா தமிழின உணர்வு?

நீண்ட நெடிய மவுனத்திற்கு பிறகு இப்போது தான் தமிழ உணர்வுடன் ஒட்டு மொத்த தமிழகமும் (ஒரு சில மைனாரிட்டி தமிழ் எதிர்ப்பாளர்கள் நீங்கலாக) ஈழத்து தமிழர்களுக்கு ஆதரவாக திரண்டு வந்துள்ளனர்.

ராஜீவ் காந்தியின் சம்பவத்துக்கு பிறகு அமைதி காத்தோம். 18 வருடங்கள் ஈழ ஆதரவு நிலையை வெளிக்காட்டாது, உள்ளேயே பொதித்து வைத்தோம்.. நேர்ந்துவிட்ட ஒரு துன்பியல் சம்பவத்துக்காக தன்டனைக்காலாமான 18 ஆண்டுகள் உருண்டோடி இதோ இப்பொழுது ஒருமித்த கருத்து வந்துள்ளது.

இந்த நேரத்தில் வந்துள்ள வைகோ கைது என்ற செய்தி, இந்த உணர்வை திசை திருப்புமா?

காலையில் ஜெயலலிதாவின் அறிக்கை "விடுதலை புலி ஆதரவு / பிரிவினைவாதம் பேசுவோரை நான் ஆட்சியில் இருந்திருந்தால் கைது செய்து இருப்பேன்" என்று , மாலையில் வைகோ கைது.

கலைஞரே, ஏன் இந்த முடிவு?

நாளை முதல் தலைப்பு செய்திகளில் 'வைகோ கைது' மற்றும் அது தொடர்பான அரசியல் செய்திகள் முன்னிலைப்பட்டு, ஈழம் பற்றிய செய்திகள் பின்னுக்குத்தள்ளப்படுமா?

பலவாறான கருத்துக்கள் வரலாம். வைகோ மட்டும் ஏன் கைது?
விடுதலை புலி ஆதரவு என்றால், ராமதாஸ், பழ நெடுமாறன், பாரதிராஜா, சீமான், அமீர், திருமா என்று பலரை நோக்கி கைகள் நீளலாம்..

இன்று ஈழ்விடுதலைக்காக உங்களுடன் நிற்கும் அனைவரையும் நோக்கி இரு விரல் நீளலாம்.. என்ன செய்வீர்கள்? அனைவரும் உள்ளே சென்று விட்டல் , பிறகு??

இல்லை பிரிவினைவாதம் என்று சொல்லப்பட்டாலும், கேற்றவாறு விரல்களும், கைகளுலும் நீளும்..

நிச்சயம் வைகோவிற்கு பரிந்து இல்லையென்றாலும், ஈழத்து பிரச்சனையில் ஒன்றுப்பட்டோரின் ஒற்றுமையை குலைக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.. என்ன செய்யப்போகின்றீர்கள்?

ஈழத்துப்பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் சில பத்திரிக்கை, தொலைகாட்சி ஊடகங்களும், வைகோ கைதினை வைத்து நடுவில் புகுந்து குட்டையை குழப்பிடுவார்களோ?

குறிப்பாக தங்களின் (உள்நாட்டு) !! பிரச்சனைக்காக, தங்களை தற்காத்துக்கொள்ள சன், தினகரன் எப்போது தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் கானலாம் என்று காத்திருக்கிறது.. அதே போல, இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் உங்களுக்கே தெரிந்த காரணங்களுக்காக ஈழம் குறித்து ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை எப்படி திசை திருப்பலாம் என்று காத்திருக்கிறது.. இந்த நிலையில் அவர்களுக்கு இந்த செய்தி அல்வா சாப்பிட்டது போல் ஆகாதா?

ஜெயலலிதா தந்திரமாக ஒரு சித்து விளையாட்டு விளையாடிவிட்டாரோ என தோண்றுகிறது

இலங்கை பிரச்சனை பேசியதற்கு வைகோ கைது என்று திரித்து பாமரனை நம்ப வைத்திடும் அளவுக்கு சாமர்த்தியம் நிறைந்தவர்கள் நம் பத்திரிக்கையாளர்கள்..

மேலும் மூக்கு , கண் , காது வைத்து சின்டு முடித்து, இந்த பிரச்சனையை முன்னுக்கு எடுத்து வந்து ஈழப்பிரச்சனையை பின்னுக்கு தள்ளிட சாமர்த்தியம் நிறைந்த கழுகார்களும், வம்பானந்தாக்களும், ராங் கால் ராஜாக்களும் இங்கே அதிகம்.

கலைஞரே, இந்த கைதின் காரணத்தை தெளிவாக மக்களிடம் எடுத்து செல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.. நிச்சயம் இப்போது உங்களோடு கைக்கோர்த்திருக்கும் தமிழீழ ஆதரவாளர்களிடம் இருந்தும் கேள்விக்கனைகள் வரலாம். அதனை எப்படி எதிர்கொன்டு, இந்த கைது ஏற்படுத்தப்போகும் அரசியலில் சுழலில் சிக்கிவிடாமல், சீரழிந்து விடாமல் இந்த ஈழ உணர்வை எடுத்து செல்ல வேண்டிய கடமையும் உங்களுக்குள்ளது.

வைகோ மேல் பல அதிருப்தி இருந்தாலும், இந்த நேரத்தில் ஒரு தமிழ் ஈழ உணர்வாளனை (அரசியல் காரணமாக எதிரனியில் இருந்தாலும்) சிறை கம்பிக்குள் அடைத்து வைப்பது சற்று கஷ்ட்டமாகவே உள்ளது.. நீண்ட நாட்கள் அவரை முடக்கி விட வேண்டாம்..

சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு

சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு

இன்று நான் பார்க்க நேர்ந்த இந்த இரண்டுமே சில்லறைத்தனமான விஷயங்கள். சற்று வித்தியாசமாக எனக்கு பட்டதால் , நம் பதிவர்களுடன் இதை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இந்த பதிவு. படித்துவிட்டு அட போயா சில்லறை பையா என்று சொல்லிவிடாதீர்கள்.. :)

வழக்கமாக என் பைக்கில் அலுவலகம் வரும் நான் இன்று மழை காரணமாக பேருந்தில் வர தீர்மானித்தேன்.. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை.. அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்தது போக , ஒரு 10 , 12 பேர் நின்று கொண்டிருந்த்தார்கள். நான் நடத்துனருக்கு அருகில் நின்றிருந்தேன். ஏறிய ஒரு நடுத்தர வயதுக்காரர் 10 ரூ கொடுத்து கின்டிக்கு பயனச்சீட்டு வாங்கினார். பயனச்சீட்டின் விலை 4.50 ரூ. 4.50 போக மீதமாக 5.50 கொடுக்கவேண்டிய நடத்துனர் மீதமாக 5 ரூ மட்டும் கொடுத்துவிட்டு, 50 காசு இருந்தால் கொடுத்துவிட்டு 1 ரூ வாங்கிக்கொள்ள சொன்னார்.. சென்னையில் இப்படியான காட்சிகள் பிரபலம்..

அந்த பயனியிடம் 50 காசு சில்லறை இல்லை.. சென்னையில் பேருந்து பயனம் செய்த அனைவருக்கும் அடுத்து என்னவிதமான உரையாடல் அங்கே நடந்திருக்கும் என்று நிச்சயம் தெரியும். பயனி நடத்துனரை திட்ட, நடத்துனர் பயனியின் மீது எரிந்து விழ, ஒரு கட்டத்தில் இருவரும் அரசாங்கத்தின் மீது கரித்துக்கொட்ட... அதே தான் இங்கும் நடந்தது..

கடைசி வரை விடாப்படியாக இருந்து அந்த பயனி 50 காசு வாங்க்கிகொண்டு தான் நடத்துனரின் இடத்தை விட்டு விலகி சென்றார்.

உண்மை என்னவென்றால், நடத்துனரின் பையில் 50 காசு இருந்துள்ளது.. அத்துனை காசுகளின் இடையே அதனை தேடியெடுக்க நடத்துனருக்கு சோம்பேறித்தனமோ அல்லது அவரின் அலட்சியமோ.. எதோ ஒன்று அந்த 50 காசை தந்துவிடாமல் அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்தது..

அடுத்து இரண்டாவது நிகழ்வு.

அதே நாள் மாலையில், அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஒரு கடையில் நன்பர்களுடன் டீ குடித்துக்கொண்டிருந்தேன்.


அப்போது அந்த கடைக்கு வந்த ஒருவர் (பெயர் தெரியாததால், தலைவர் என்று வைத்துக்கொள்வோம்) கடைக்காரரிடம் , அண்ணே ஒரு பூமர் ப்புள்கம் கொடுங்க என்றார்..

உங்களுக்கு தெரிந்திருக்கும், 1 பூமரின் விலை 1 ரூ. அந்த கடைக்காரர் பூமர் எடுத்து நீட்டிய போது , நம் தலைவர் கொடுத்த நோட்டை பார்த்து நாங்களே கொஞசம் ஆடிப்போய்விட்டோம்... 1 ரூபாய் பூமருக்கு அவர் கொடுத்தது ஒரு 100 ரூ நோட்டு.. 1 ரூபாய்க்கு 100 ரூ நீட்டுவதற்கெல்லாம் ஒரு தில் வேனும்பா..

நாங்களே ஆடிப்போய்விட்டோம் என்றால், அந்த கடைக்காரரை நினைத்துப்பாருங்கள். 100 ரூபாயை பார்த்த மாத்திரத்தில், வெடுக்கென கையை பின்னுக்கு இழுத்து பூமரை மீண்டும் டப்பாக்குள் அடைத்துவிட்டார்.. பூமர் கை மாறிவிடக்கூடாது என்ற அவரின் அவசரம் தெரிந்தது...

சில்லறை கொடுங்க - இது கடைகாரர்..

சற்று நேரம் அப்படியே நின்றுக்கொண்டிருந்த நம் தலைவர், சரிப்பா ஒரு பூமர், ஒரு ரூபா அஜெந்தா பாக்கு ஒன்னு கொடு என்று மீண்டும் அதே 100 ரூபாயை நீட்டினார்..

கடைக்காரர் கடுப்பாகிவிட்டார் போல, சிறிது நேரத்துக்கு நம் தலைவரை கண்டுக்கொள்ளவே இல்லை..

சில நிமிடங்கள் நின்று பார்த்த நம் தலைவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. சட்டென்று பாக்கெட்டில் கை விட்டு 2 ரூ நாணயம் ஒன்று எடுத்துக்கொடுத்துவிட்டு 1 பூமர், 1 அஜந்தா பாக்கு வாங்கிக்கொண்டு நடையை கட்டினார்...

சட்டென்று எனக்கு அந்த நடத்துனரின் ஞாபகம் வந்தது... நம்ம தலைவருக்கும் , அந்த நடத்துனருக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவே பட்டது..

நம் தலைவரின் செய்கையில் எங்களுக்கு ஒன்று புரியல.. 100 ரூபாய்க்கு சில்லறை கேட்டால் கிடைக்காது என்று 1 பூமர் கேட்டாரா அல்லது பூமர் சாப்பிட ஆசையில் கேட்டாரா?

சில்லறைக்காகத்தான் என்றால், ஏன் இருந்த 2 ரூபாயையும் கொடுத்து தேவையில்லாமல பூமரும் , பாக்கும் வாங்க வேண்டும்..

எது எப்படியோ.. ஒரே நாளில் நான் பார்த்த இந்த சாதாரன நிகழ்வுகள், சற்று வித்தியாசமாகவும், ஏதோ ஒரு விதத்தில் ஒற்றுமை இருப்பதாகவும் பட்டது.. அதை பகிர்ந்துக்கொள்ளவே இந்த சில்லறைத்தனமான பதிவு :)

இப்படியான சில்லறை அனுபவங்கள் உங்களுக்கு ஏதாவது உள்ளதா? இந்த பதிவை படித்ததை தவிர்த்து :)

தூயாவின் அழைப்பை ஏற்று..

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

அனுபவங்கள் என்று ஏதும் இல்லை. அன்டை நாட்டில் என் இனம் அழிக்கப்படுகிறது. அதனை இலங்கை அரசு நடத்தும் போர் என்று சொன்னாலோ அல்லது திட்டமிட்ட இனப்பட்கொலை என்று சொன்னாலே, எப்படி சொன்னாலும், அங்கே அழிக்கப்படுவது தமிழினம். தமிழன், அதையும் தாண்டி மனித உயிர்கள் எனும் போது வேதனையாக உள்ளது.

வேறு வழியின்றி போரின் மூலமே தீர்வு என்று ஏற்படுத்தப்பட்ட குழு, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அவர்கள் எடுத்த சில முடிவுகளாலும் போராளிகள் என்ற நிலையில் இருந்து "தீவிரவாதிகள்" என்று முத்திரைக்குத்தப்பட்டு, நம் இந்திய மன்னிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது வேதனையான விஷயமே.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனையில், இந்தியாவில் எந்த பத்திரிக்கையும் , உரிய மற்றும் தொடர் செய்திகள் தராததும், அரசியல் காரணங்களுக்கான சுழலில் இந்த பிரச்சனை சிக்கி சிதைந்ததும் வேதனையே..

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

ஈழத்துக்காண அங்கீகாரம் கிடைத்திட வேண்டும். நிச்சயம் கிடைக்கும். வெடிச்சத்தம் கேட்டும், உயிருக்கு அஞ்சியோடியும் தமிழ் இனம் அங்கே பட்ட இன்னல் போதும்.. விரைவில் தீர்வு வரவேண்டும் எனபதே அனைவரின் விருப்பமும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?
அதீத ஆர்வம் என்று கொள்ளமுடியாவிட்டாலும், அங்கே என்ன நடக்கிறது.. இந்த முறையாவது அமைதி திரும்பிடாதா? , 30 வருட போராட்டம் முடிந்துவிடாதா என்ற ஏக்கத்தில் ஈழத்து செய்திகளை படிப்பதுன்டு.
அதிகமாக, வலைதளங்களிலும், பத்திரிக்கை வாயிலாகவுமே படிக்க வாய்ப்புள்ளது.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
வரவேற்கபடவேண்டிய ஒன்று. இது தொடர்ந்திட வேண்டுமே என்ற அச்சம் அதிகமாக உள்ளது. இந்த குரல்கள் இன்னும் தீர்கமாக ஒலிக்கவேண்டும், முந்தய காலங்களில் நடந்தது போல தற்காலிக குரலாக ஒலித்து, பின்பு ஓய்ந்தது போல் அல்லாமல், ஒரு நல்ல முடிவு வரும் வரை ஓங்கி ஒலிக்கவேண்டும். ஈழத்து தமிழர்களுக்கு பாதுக்காப்பு அரணாக இந்த ஒலி இருக்கவேண்டும்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

தமிழினமே, இது பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் தமிழகத்தில் ஆதரவு குரல் கேட்க்கிறது. முன்பை விடவும் தீரமாக ஒலிக்கிறது. நிச்சயம் உங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும். ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைத்திடும்.கடல் கடந்து இங்கே வரும் செய்திகளின் நம்பகத்தன்மை புரியவில்லை.பலவித கருத்துக்குள் பரப்பபடுகிறது. அங்கே இருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் ஈழ நிலவரம் குறித்த நடுநிலை, உண்மையான செய்திகளை ஊடகங்களின் வாயிலாக பரப்பிடவேண்டும்.

நிச்சயமாக ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும், அந்த நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன்.
வீ எம்

அனைவரையும் அசரடிக்கும் அண்ணி பிரேமலதா விஜயகாந்த்..



சென்னையில் நடைப்பெற்ற தே மு தி க வின் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்தின் பேச்சு அனல் தெரித்தது. உணர்சிக்கொந்தளிப்பான அந்த பேச்சு , தமிழகக்தில் அடுத்து தே மு தி க வின் ஆட்சி என்று பறைசாற்றியது.

அவரின் பேச்சின் சில பகுதிகள் இங்கே..
'வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளும் ஜெயிப்போம், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.."

அதென்னங்க லோக்சபா தேர்த்தல்ல 40 ம் வெற்றினு அடிச்சு சொல்றீங்க.. சட்டமன்ற தேர்தலில் 234 ல் போட்டினு மட்டும் சொல்றீங்க..?? என்ன கணக்கு இது அம்மனி?

காசா பனமா.. சும்மா அடிச்சு விட்டிருக்கவேண்டியது தானே 234 தொகுதியிலும் அமோக வெற்றினு...

"இலங்கையில் அன்று ராவணனால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது இன்று ராசபக்சேவால் இன்னல் நடக்கிறது.. "
அட! அட! என்னே உங்கள் அறிவு.. மெய் சிலிர்க்குது அம்மனி.. அதெப்படிங்க.. கொஞ்சம் கூட யோசிக்காம அடிச்சு விடுவீங்களா??

கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஆத்தா.. என்ன சொல்ல ??

நிச்சயமா நீங்க ராவணன் ஆட்சியில போர்படை தளபதியாகவோ , இல்லை ராமர் படையின் போர்ப்படை தளபதியாகவோ, அட, குறைந்தபட்சம் சீதையின் ஒன்னுவிட்ட சித்தப்பா பொன்னோட முப்பத்து முனாவது தலைமுறை பேத்தியாகவோ இருந்து இந்த கருத்தை சொல்லியிருக்க மாட்டீங்க.. சரியா..?

நிச்சயமா.. 10 வருஷத்துக்கு முன்னால தூர்தர்ஷன்ல போட்ட ராமாயன தொடரை சமையற்கட்டு வேலைக்கு நடுவுல எட்டி பார்த்துட்டு, அதிலிருந்து வந்த அபார அறீவை வைத்து நீங்க இங்கே அடிச்சுவிட்டுருக்கீங்க.. சரிதானே அண்ணி??

ராவணன் யாராக சித்தரிக்கப்பட்டான் , அவனுக்கு எதிரா போரிட்டது யார்.. அதிலே யார் திராவிட இனத்தின் தலைவனாக , யார் ஆரிய இனத்தின் காவலராக சித்தரிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் தெரியாமல். ஏதோ புலம்பிவிட்டு போய் இருக்ககூடாதுங்க..

இலங்கைனா உடனே ராவணன், சீதை , ராமர், அனில், அனுமான் தான் உங்களுக்கு தோனுமா?? . அட கண்றாவியே... குறைந்த பட்சம் ராவணண் எந்த இனம். அவன் எந்த தமிழருக்கு இன்னல் கொடுத்தான் என்று ஒரு 2 நிமிடம் பேசியிருக்கலாம் நீங்க..

சரி, விடுங்க.. ராமாயானம் சி டி வாங்கி போட்டு பார்த்துட்டு அடுத்த மநாட்டுல ஒழுங்கா பேசனும் சரியா?? இப்படி அச்சுபிச்சுத்தனமா பேசக்கூடாது.. சொல்லிட்டேன்..

என்றும் இலங்கை தமிழருக்கு அதரவு தருவது விஜயகாந்த். இன்றைக்கு யார் யாரோ பேசுறாங்க..
அட்றா , அட்றா.. அசத்திட்டீங்க அம்மனி.. இது தான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதா??

அண்ணன் என்னவெல்லாம் பன்னாரு சொல்லுங்க.. ஓ, பிறந்தநாள் கொண்டாடறத விட்டுவிட்டாறா?? அடேங்கப்பா என்ன பெரிய நஷ்டம் இலைங்கைக்கு.. வி கா பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்த நாள் மீண்டும் கொண்டாடப்படனும்னே,உடனே ஈழம் கிடைச்சுடும் அம்மனி.. கவலை வேண்டாம்..

அப்புறம், விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்துல நடிச்சாரு... அவரோட 3 படம் இலங்கைல படமாக்கப்பட்டது.. அப்படி இப்படினு நீட்டி முழக்கி இருக்க வேண்டியது தானே... ஏன் விட்டுடீங்க??

யார் யாரோ பேசுறாங்கனு யாரை சொல்றீங்க?? நம்ம வைகப்புயல் வடிவேலுவையா??? :)

தமிழகத்தில் தே மு தி க ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்து சொந்தகாலில் நிற்க வைப்போம்..
அட, 40 ம் உங்களுக்குனு சொல்லீட்டீங்க.. அப்புறமென்ன தமிழகம், அது இதுனு அசிங்கமா பேசிகிட்டு.. கேப்டன் தான் அடுத்த பிரதமர்.. இன்றைய தேதிக்கு ஒரே கட்சில 40 பாராளுமன்ற உறுப்பினர்கள்னா சும்மாவா.. விடுங்கம்மா , இந்திய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்திடலாம்...

பயங்கரவாதத்தை ஒடுக்க மக்கள் பங்கேற்ப்புடன், என் சி சி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்..

அம்மனி சூப்பரு.. நான் கூட சமுக சேவை செய்ய என் சி சி அமைப்பு ஏற்பட்டுத்த சொல்றீங்கனு நெனைச்சேன்.. பயங்கரவாதத்தை தடுக்கவா... சரி சரி. நிச்சயமா செய்யலாம்.. காவல்துறை, ரானுவம் எல்லத்துக்கும் 5 வருஷம் லீவு விட்டுடலாம்.. சரியா அண்ணி?

அம்மா தாயே. அப்படியே, ஸ்கவுட், கைட், என் எஸ் எஸ், பீ டீ பிரியட் எல்லாம் ஆரம்பிச்சுடலாம்.. எல்லோருக்கும் மஞ்ச சட்டை தான் யூனிபார்ம் , இப்பவே சொல்லிட்டேன் சரியா...
தே மு தி க வளர்ச்சியை பார்த்து மற்ற கட்சிகள் கதிகலங்குது..
சொன்னாங்க.. ஜார்ஜ் புஷ் உங்க கட்சிய பார்த்துட்டு கதிகலங்கிபோய், அமெரிக்க தேர்தலை தள்ளி வெக்கலாமானு பாக்குறாங்கனு சொல்லுங்களேன்..

கட்சிகள் கதிகலங்குதோ இல்லயா.. உங்க மாநாட்டுக்கு வந்த உங்க மஞ்ச சட்டை மாக்கானுங்க பன்ன அலம்பல பார்த்து சென்னை மக்கள் அடிவயரு கலங்கி போய் இருக்காங்க ஆத்தா.. கொஞ்சம் அடக்கி வைங்கோ..

நீங்க பேசின பேச்ச பார்த்தா, சீக்கிரமே கேப்டன பின்னாடி தள்ளிட்டு நீங்க முதலமைச்சர் வேட்பாளர் ஆகிடுவீங்க போல இருக்கோ..

கேப்டன் சார், இனிமே அம்மனிய மாநாட்டுக்கு கூட்டிட்டு போறதா இருந்தா.. என்ன பேசப்போறாங்கனு வீட்லயே கேட்டு கரெக்ஷன் பன்னிக்கொடுங்க.. அட, உங்க பேச்சயே யாரோ கரெஷன்பன்னி கொடுக்கறாங்க.. உங்க கிட்ட போய் சொல்றேன் பாருங்க....
சரி என்னமோ பண்ணித்தொலைங்கோ..
தமிழ் மக்கள் எதை எதையோ பார்த்துட்டோம்.. இத பார்க்க மாட்டோமா... ??