கலைஞர் டீவியில் - கூடல் நகர்

இதை போன வாரமே பதிவிட வேண்டும் என நினைத்தேன்.. சில காரணங்களால் பதிவிட முடியாமல் போனது..
பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலில், சற்று தாமதமானாலும் இதோ..

பலரும் இதனை கவனித்திருக்கலாம்..

சன் டீவி ஆரம்பித்து வைத்த கலாசாரம்.. ஏதேனும் விஷேச நாட்களுக்கான நிகழ்ச்சியெனில், குறிப்பாக அந்த நாட்களில் ஒளிப்பரப்பாகும் திரைபடத்தை பற்றிய விளம்பரத்தை 5 நாட்களுக்கு முன்னரே "உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக .. வெளி வந்து சில மாதங்களே ஆன சூப்பர் திரைப்படம்" என்று நீட்டி முழக்கி 10 நிமிடத்திற்கு ஒரு முறை காட்டிக்கொண்டே இருப்பார்கள்..

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று , கலைஞர் டீவியில் ஒளிப்பரப்பாகிய , பரத், பாவனா, சந்தியா நடித்த கூடல் நகர் திரைப்படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் செய்யப்பட்டது..

உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்.. என்று ஒரு வாரமாக விளம்பரம் செய்யப்பட்டது..

இதில் என்ன இருக்கிறது?? நிச்சயமாக இதில் எதுவும் இல்லை.. வழக்கமாக விடுமுறை நாட்களில் போடப்படும் சிறப்பு திரைப்படம், விளம்பரம்.. காந்தி ஜெயந்தி நாளில் காந்தியவாதிகள், விடுதலை போராட்டத்தியாகிகள் பேட்டி போன்ற நிகழ்ச்சிகள் தான் போடவேண்டும் என்று பதிவெழுத நான் என்ன மொக்கை பதிவரா? :) :)

வழக்கமாக இந்த விளம்பரங்கள் போடும்போது, அந்த படத்தின் க்ளிப்பிங் காட்டப்படும்.. சில முக்கிய காட்சிகள் , வசனங்கள் வரும்.. முடிக்கும் போது அந்த படத்தில் மிகவும் பேசப்பட்ட (மக்களால் பேசப்பட்ட) பாடல் ஒன்றுடன் முடிப்பார்கள்..

அப்படி இந்த கூடல் நகரின் விளம்பரத்தில் க்ளிப்பிங் காட்சியில் வந்த முதல் வசனம் "அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா.." தன் மகள் பாவனாவை கதலிக்கிறார் என்றதும் , பரத்தை கொன்றுவிடுமாறு தன் அடியாட்களுக்கு நெடுமுடி வேணு கட்டளையிடுவதாக ஒரு காட்சி..

இப்போது இனைத்துப்பாருங்கள்.. விளம்பரம் + முதல் க்ளிப்பிங் வசனம்.

உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன " <க்ளிப்ப்பிங்> " அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா. <க்ளிப்ப்பிங்> , <க்ளிப்ப்பிங்> , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில்,
:) :)

டிஸ்கி - பதிவு சன் , கலைஞர் தொலைக்காட்சி , காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிகள், விளம்பர முறை, கூடல் நகர் திரைப்படம் என்று எதை பற்றியும் குறை சொல்வதற்கு இல்லை.. , அக்டோபர் 2, விளம்பரமும் , அது தொடர்ந்து வந்த க்ளிப்பிங்ல் வசனமும் ஒரு சேர கேட்டது (CO-INCIDENCE) சற்று வித்தியாசமாக இருந்தது .. அதை பகிர்ந்துக்கொள்ளவே.. :)

தந்தி அடிக்கலாம் வாங்க..

"தந்தி போராட்டம்" இப்போது தமிழகத்தில் பிரபலம் அடைந்துள்ளது. கலைஞரின் தந்தி போராட்ட அறிவிப்பு தொடர்ந்து மத்திய அரசு கூட இலங்கை தூதரகத்துக்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது..

இதன் தொடர்ச்சியாக வேறு யாருக்கெல்லாம் தந்தி அடிக்கலாம்..??

தந்தி # 1 - மின்சார தேவையை அதிகரிக்கும் முயற்சியை மேற்க்கொண்டு தமிழக மக்களை இருளில் இருந்து காப்பாற்றக்கோரி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணண் ஆற்க்காட்டருக்கு ஒரு ஷாக் தந்தி.

தந்தி #2 - பணவீக்கத்தை கட்டுபடுத்தி , விலைவாசி அரக்கனிடமிருந்து மக்களை காத்திடும் முயற்சி மேற்க்கொண்டிடுக என்று கேட்டு பொருளாதார மேதை மதிப்பிற்குறிய சிவகங்கை சிங்கம் சிதம்பரத்துக்கு ஒரு சிறப்பு தந்தி.

தந்தி # 3 எப்போது உங்கள் பின்னாலேயே வால் பிடித்து வரவேண்டும் என்று விரும்பும் உங்கள் உடன்பிறப்பு ஆற்க்காட்டாருக்கு அமைச்சர் பதவியில் இருந்து விடை கொடுத்து, அவரை திரு சன்முகநாதன் அவர்கள் இடத்தில் அமர வைத்து , சன்முகநாதன் அவர்களை மின்சாரத்துறை அமைச்சராக்கிட. ஆவன செய்திட வேண்டும் என கேட்டு முதலவர் கலைஞருக்கு ஒரு விண்ணப்ப தந்தி.

தந்தி # 4 முதல்வரின் மகன் என்ற காரணத்துக்காக மட்டுமே, மதுரையில் தனி ராஜாங்கம் நடத்தி, ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் சேர்த்திடும் அஞ்சாநெஞ்சன் அவர்களின் போக்கை கொஞ்சமேனும் அடக்கி வைக்க கோரி தந்தை என்ற முறையில் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள் தந்தி.

தந்தி # 5 காதலில் விழுந்தேன் பிரச்சனையை சமூக பிரச்சனையாக சித்தரித்து ஒப்பாரி வைக்கும் சன் டீவி சகோதரர்களுக்கு, கடந்த காலங்களில் , அரசின் ஆதரவு மற்றூம் அமைச்சர் வீட்டு தொலைகாட்சி என்ற ஓரே காரணத்துக்காக என்னவெல்லாம் ஆட்டம் போட்டார்கள், எத்துனை இருட்டடிப்பு, ஊடகத்துறையில் உள்ள சக மனிதர்களை அழித்திட என்னவெல்லாம் செய்தனர் என்பதை பட்டியலிட்டு ஒரு மெகா சைஸ் சுயசரிதை தந்தி.

தந்தி # 6 தனக்கென ஒரு கட்சி இருக்கிறது , அது தனிக்கட்சி.
அ தி மு க வின் கிளைக்கட்சியல்ல என்பதை நினைவூட்டி அண்ணன் வைகோவிற்கு ஒரு நினைவூட்டல் தந்தி.

தந்தி # 7 "உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப புண்ணாக்கிட்டாங்கப்பா" என்று ஒற்றை வரியில் வைகைபுயல் வடிவேல் அண்ணாச்சிக்கு ஒரு அவசர தந்தி.

தந்தி # 8 பத்திரிக்கை செய்திகளையும், கருத்துக்கணிப்புகளையும் பார்த்து , 2011 ல் நான் தான் முதல்வர் என்ற கற்பனையில் , மிதமிஞ்சிய மிதப்பில் செயல்பட்டு உள்ளதையும் கோட்டை விடவேண்டாம் என்று , கடந்த கால அரசியல் நிகழ்வுகளை பட்டியல் இட்டு , கருப்பு தங்கம் கேப்டனுக்கு ஒரு புள்ளியல் தந்தி.

தந்தி # 9 தமிழக காங்கிரஸ் தலைவர் என்னும் பதவியை உன்மையாகவே தலைவர் பதவி என்று நினைத்து, வாய் கொடுத்து புண்ணாகிக்க்கொள்ளாமல், இருக்கும் வரை அனுபவித்துவிட்டு போகவும் என்று திரு "கோல்ட் மில்க்" தங்கபாலு அண்ணனுக்கு ஒரு அறிவுரை தந்தி.

தந்தி # 10 உங்களால் தான் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச போகிறது என்று இன்னமும் நம்பி, போயஸ் வீட்டிற்கும், ராகவேந்திரா மண்டபத்துக்கும் நடையாய் நடந்து சீரழிகிர ரசிகன் பட்டாளம் இன்னும் இருக்க்கிற வரை உங்கள் எந்திரனும் சரி,ஒரு வேளை 2015 வரும் உங்கள் சுந்தரனும் நிச்சயமாக உங்கள் கையை கடிக்கவே கடிக்காது என்று ஒரு சந்தோஷ தந்தி நம் சூப்பர் ஸ்டாருக்கு.

கோடிக்கணக்கில் குவியப்போகும் தந்திகளை பட்டுவாடா செய்ய வேண்டிய வசதிகள் செய்திட (அதை மட்டுமாவது) வேண்டும் என திரு ராசாவுக்கு ஒரு கடைசி தந்தி.

மக்கள்ஸ் - இன்னும் பலருக்கு தந்தி அனுப்பவேண்டும் என்று ஆசை, முதல் பத்தோடு நிறுத்திக்கொண்டு அடுத்த பதிவில் மற்றதை போடுகிறேன்.. நானே போடுகிறேன்.. அதற்குள் யாரும் எனக்கு நினைவூட்டல் தந்தி அனுப்பிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..

உங்கள் மனதிலும் உதிக்கும் தந்திகளையும், பெருநர்களையும் கருத்துப்பெட்டியில் சொல்லிவிட்டு போங்கள் நன்பர்களே.. பார்க்கலாம் யாருடையது சிறந்த தந்தி என்று.

நன்றி
வீ எம்

சின்ன அய்யா - சிறு யோசனை

மான்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்களே, வணக்கம்.

புகையிலைப்பொருட்களால் ஏற்படும் ஆபத்தில் இருந்து மனிதர்களை காப்பாற்றும் தங்களின் அவா பாராட்டப்படவேண்டியதே. பல காலமாகவே இது பற்றி பேசி வரும் நீங்கள் , இப்போது எடுத்திருக்கும் இந்த பொது இடங்களில் புகைக்க தடை என்ற முடிவு நல்ல முடிவு.

பான் பராக் போன்ற வஸ்த்துக்கள் விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?? எனக்கு தெரிந்து 3 வருடங்களுக்கு முன் பான்பராக் விற்பனை தடை செய்யப்பட்ட்து.. முதல் 2 மாதங்கள் விற்பனை இல்லாமால் இருந்தது , விற்றவர்கள் பிடிபட்டனர் என்று பத்திரிக்கைகள் செய்தி வாசித்தது.. பின்பு , சில மாதங்களுக்கு வெளியில் தொங்கவிடாமல், உள்ளே வைத்து தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு, பின்னர் தைரியம் வந்து எப்போதும் போல வெளியே சரம் சரமாக தொங்கவிடப்பட்டு வியாபாரம் சக்கை போடு போடுகிறது.. ஆனால் தமிழகத்தில் பான்பராக் விற்பனக்கு தடை என்று அரசானை சொல்லும்..

இந்த தடையினால் என்ன நடந்தது தெரியுமா??
பான்பராக் என்ற ஒரே ஐயிட்டம் இருந்தது போய், லஷ்மி சூப்பார், Hஆன்ஸ், அது இது என்று புது புது வகைகள் வந்தது தான் மிச்சம்.

சரி, சிகரெட்டுக்கு வருவோம்..
உள்ளபடியே மக்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கரை புரிகிறது.. உங்களின் இலக்கு புகைப்பிடிக்காதவர் உள்ள நாடுஎன்பது தானே.. புகையிலையால் புற்று வந்து மனிதர்கள் இறக்க கூடாது என்ற நல்ல எண்ணம் என்பது தெரிகிறது..

விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் புகையிலைப்பழக்கதை ஒழிக்கமுடியுமா என்றால், மிக மிக மிக சொற்பமானவர்கள் மட்டுமே காது கொடுத்து கேட்டு புகைப்பதை தவிர்ப்பார்கள். அகவே அது முழு பலன் தராது.

பொது இடங்களில் புகைக்க தடை என்பதன் மூலம் முழு பலன் வருமா என்றால் சந்தேகமே.புகைப்பிடிப்பதை நிறுத்திடவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே, இந்த சட்டத்தை பயன்படுத்தி புகைப்பதை தவிர்ப்பவர். மற்றவரெல்லாம், திருட்டுத்தனமாக இன்டு இடுக்கில் புகுந்துக்கொண்டு புகைக்கத்தான் போகிறார்கள்..
ஓவ்வொரு சந்துக்கும் ஆட்களை நியமித்து உங்களால் கண்கானிக்க முடியுமா அமைச்சரே?

வீட்டுக்கு பயந்து திருட்டு தம் அடித்தவர்கள் இப்போது போலிஸுக்கும் , சட்டத்துக்கும் பயந்து திருட்டு தம் அடிப்பார்கள்.. அவ்வளவே..இன்னும் சிலர், பிடித்தால் பார்க்கலாம் என்று பொது இடங்களில் புகைப்பதை பார்க்க முடிகிறது.இந்த சட்டமும், பான் பராக் தடை சட்டம் போல் 6 மாதத்தில் நீர்த்து போகாது என்ற உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா அன்புமனி சார்.
உங்களின் பசுமை தாயகம், பா ம க சார்ப்பாக ஒரு பொதுக்கூட்டம் ஒன்று நடத்திப்பாருங்களே... மேடையின் பின்னால், மேடையில் கீழே இருந்தெல்லாம் புகை வருகிறதா இல்லயா என்று..

இவ்வளவு உயரிய நோக்கில் நீங்கள் கொண்டுவந்த இந்த சட்டம், இத்துனை நடைமுறை சிக்கலோடு இருப்பது சற்று வேதனையே.. ஏன் தலையை சுற்றி மூக்கை தொடும் இந்த வேலை?? .

இதைவிட, புகையிலை பொருட்கள் தயாரிப்பையே நீங்கள் தடை செய்யலாமே..இப்போதிருக்கும் இந்த சட்டத்தின் மூலம் 15 - 20 % குறிக்கோள் நிறைவேறும்.. ஆனால் நீங்கள் துனிந்து புகையிலை பொருட்கள் உற்பத்தியை தடை செய்தால், 90% குறிக்கோள் நிறைவேறும்..

உங்களின் நோக்கமும், இந்த தடையும் போற்றுதலுக்குரியது.. அதை குறை சொல்லவில்லை.. ஆனால் செய்வன திருந்தச்செய் என்றே சொல்கிறோம்..
அதை செய்வதில் உங்களுக்கும் உங்கள் அரசுக்கும், கட்சிக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா??

உண்மையிலேயா உங்களுக்கு மக்களின் உடல்நலத்தில் அவ்வளவு அக்கரை இருக்கும் பட்சத்தில், இதற்கு முயற்சி செய்யுங்கள் சின்ன அய்யா...!

லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பும் - எதிர்வரும் சட்டமன்ற தேர்தலும்

சமீபத்திய, லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் படி அ தி மு க விற்கு 38.3 சதகிவித ஆதரவும், தி மு க விற்கு 25.8 சதகிவித ஆதரவும், தே மு தி க விற்கு 19.5 சதகிவித ஆதரவும் உள்ளது.

இதனடிப்படையில் வலையுலகில் சில பல பதிவுகள் வந்துவிட்டது. ஆனால் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலை நிச்சயமாக யாரும் தரமுடியாது.

தமிழக தேர்தலுக்கு இன்னும் 2.5 வருடங்களுக்கு மேல் உள்ளது. அரசியலில், ஒரு வார காலமே பல எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திடும் என்பது நிதர்சனம். இந்நிலையில் 2.5 வருடமென்பது அரசியலில் ஒரு யுகம் போல.. ஒளிந்திருக்கும் பல அதிசயங்கள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் , கேலிகூத்துக்கள், திருப்பங்கள் எக்கச்சக்கமாக நிகழும் சாத்தியம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தங்களின் கருத்துக்கணிப்பில் கூட "இந்த நிலையில் தேர்தல் வந்தால் .. " என்ற அளவிலே தான் இந்த சதகிவிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

2011 ல் சட்டமன்ற தேர்தலுக்கோ அல்லது அடுத்த வருடம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கோ இவருடன் இவர் கூட்டணி என்பது தெரியாத இந்த நேரத்தில், 2009 / 2011 - இரண்டு தேர்தல்களின் முடிவுகள் இந்த கணக்குடன் ஒரளவாவது ஒத்துப்போகுமா என்பது சந்தேகமே.

அதிலும் குறிப்பாக தமிழக தேர்தல் முடிவுகள் என்பது கடைசி நேரத்தில் ஏற்ப்படும் சில சம்பங்களின் அடிப்படையில் அமைவதும், கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து வாக்களிக்கும் ஒரு குறிப்பிட்ட சதகிவித மக்களின் வாக்குகளின் பாதிப்பில் மாறுவதும் உண்டு. கூட்டணியும் தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதை கடந்த சில தேர்தலில் பார்த்துள்ளோம்.. ஏன், கடைசி நேர இலவச அறிவிப்புகளும் தங்கள் பங்களிப்பை செய்ததை போன தேர்தலில் பார்த்தவர்கள் தானே..

இன்று இருக்கும் மின்சாரப்பற்றாக்குறை , டீசல் தட்டுப்பாடு , விலைவாசி போன்ற விசயங்கள் 2.5 வருட காலத்தில் மாறலாம்.. நிலமை சீராகலாம் , யார் கண்டது, தேர்தலை முன்னிட்டு இலவச டீசலும், இலவச மின்சாரமும் கூட 2011 மார்ச் மாதம் முதல் கிடைக்கலாம்.. முன்பெல்லாம் விலைவாசி உயர்வென்றால் ஆளும்கட்சியை காய்த்தெடுத்த காலம் போய்.. ஊடக வளர்ச்சி மற்றும் பல காரணங்களாலும் இப்போது விலைவாசி உயர்வை, அமெரிக்க பொருளாதாரத்துடனும், சர்வதேச சந்தை விலை நிலவரத்துடனும் ஓப்பீடு செய்வதும், அரசாங்கத்தை குறைகூறிக்கொண்டேனும் , அட என்னப்பா அங்கேயே டீசல் ஒரு பீப்பாய் இவ்ளோ விக்குதாம், இவங்க என்ன பன்னுவாங்க என்பது போன்ற பேச்சுக்களும் கேட்கிறது.

கூட்டணியிலும் பல மாற்றங்கள் வரலாம், இனைந்தே இருப்பவர்கள் பிரியலாம், பிரிந்தோர் சேரலாம், சில கட்சிகளில் கரைந்து போகலாம், புது கட்சிகள் வரலாம்..

எந்த கட்சியின் தலைமையிலும் மாற்றம் வரலாம்.. இதே தலைமை தான் 2011 ல் இருக்கும் என்று அடித்க்துக்கூற முடியாது..


இரண்டு வரியில் சொல்வதென்றால், பொதுவாக 5 வருடங்களையும் மக்கள் அசைப்போட்டாலும், கடைசி 1 - 1.5 ஆண்டுகளின் நிகழ்வுகளே வாக்காளானின் மனதில் வாக்களிக்கும் முன் நிழலாடும்.. பெரும்பாலும் இவையே தேர்தல் முடிவுகளை பாதிக்கவும் செய்யும்

ஆனாலும் இந்த கருத்துகணிப்பு நிச்சயமாக அ தி மு க விற்கு ஒரு எழுச்சி டானிக்காகவும், தி மு க விற்கு கொஞ்சம் கசப்பு மருந்தாகவும் இருக்கும்.. இதனை ஒரு எச்சரிக்கை மனியாக எடுத்து சுதாரித்துக்கொண்டால் தி மு க விற்கு நலம்..
சாதகமான இந்த நிலையை 2011 வரைக்கும் நிலைநிறுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டால் அ தி மு க விற்கு நலம். பார்க்கலாம் யார் புத்திசாலிகள் என்று..

எப்படியோ மீண்டும் அதிமுக அல்லது தி முக தான் என்கிறது இந்த கணிப்பு.. அப்புறம் 2011 நாங்கள் தான் ஆட்சி அமைப்போம், நான் தான் முதல்வர் என்று சொல்லித்திரியும் மற்ற முக்கால் டசன் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்.. :)

திரு ரத்னேஷ் அவர்களின் பதிவில் எழுதியது போல, தி மு க வில் ஸ்டாலின் முயன்று முயற்சி எடுத்தால் 2011 எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம்.. சில வருடங்களுக்கு முன் ஸ்டானில் மீது பொதுவாகவே மக்களுக்கு இருந்த ஒரு விதமான விமர்சனம் இப்போது மாறியுள்ளது, அவரின் சமீப கால நடவடிக்கைகள் அந்த பார்வையை மாற்றியிருக்கிறது.. பார்க்கலாம் அவர் என்ன செய்கிறார் என்று.. வேறு பதிவில் அது பற்றி விரிவாக.. !

நன்றீ
வீ எம்