வடிவேலு பிரச்சாரம்

இதுவரை எத்தனையோ நடிகர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத உச்ச அந்தஸ்து, ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் வடிவேலு! திருவாரூரில் கலைஞர் முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, 'இதென்ன ஏகத்துக்கும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துகிறாரே' என சற்று முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஊர்களில் அவர் பிரச்சாரம் செய்த விதம், மக்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது. வடிவேலு அடுத்துப் பேசும் இடம் எங்கே என விசாரிக்கும் அளவுக்கு ஆர்வமாகிவிட்டனர் மக்கள். சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர். "எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள். திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல், அனைவருமே வடிவேலுவைப் பார்க்க வருகிறார்கள். அவர் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். 'யத்தா... நம்ம ஸ்டாலின் அய்யா மேல ஒரு மாசு மருவு சொல்ல முடியுமா... எவ்வளவு தங்கமான மனுசன். நீங்க போனாலும் வாசலுக்கு வந்து வரவேற்பாரு... அப்படி ஒரு மனுசன் ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தா நாடும் நல்லாருக்கும், உங்க தொகுதியும் நல்லாருக்கும். குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்", என பெண்களிடம் அவர் பேசும் விதம் நன்றாகவே ஒர்க் அவுட்டாகிறது - Thanks - Thatstamil.com

மு க ஸ்டாலின் துனை முதல்வரானார்.



உள்ளாட்சித்துறை அமைச்சரும், தி மு க பொருளாளருமான மு க ஸ்டாலின் துனை முதல்வரானார் என்ற அறிவிப்பை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

இந்த பொறுப்பு அவருக்கு வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்ததே. எப்போது என்பது மட்டுமே கேள்வியாக இருந்துவந்தது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி பிரச்சாரத்துக்கு போகாத வேலையிலே மு க ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயனம் செய்தார். அவரின் பிரச்சாரமும் தி மு க வின் கணிசமான வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அப்போதே அவருக்கு உரிய பதவி வந்து சேரும் என்றார் கருணாநிதி. இப்போது வந்துவிட்டது.

சில ஆண்டுகள் முன் வரை வாரிசு அரசியலில் அதிகம் வறுத்தெடுக்கப்பட்ட பெயர் மு க ஸ்டாலின்.

கருணாநிதியின் வாரிசு அரசியல் என்பது பல ஆண்டுகாலமாக ஸ்டாலினை முன்வைத்தே நடைப்பெற்றது. வாரிசு அரசியல் என்றதும் ஸ்டாலின் பெயர் தான் அனைவரின் மனதிலும் வந்து போகும் அளவிற்கு நிலை இருந்தது. ஆணால் கடந்த சில ஆண்டுகளாக வாரிசு அரசியல் விமர்சனத்துக்கும் , ஸ்டாலின் என்ற பெயருக்கும் இடை வெளி அதிகரித்துள்ளது தெரிகிறது

மேயராக, அமைச்சராக, கட்சியின் இளைஞரணி செயலாளராக, துனைப்பொது செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளில் அவரின் செயல்பாடு காரணமாக அவர் கட்சியினரிடம் பெற்ற ஆதரவாலோ அல்லது கனிமொழி , அழகிரி, தயாநிதி வருகையாலோ ஸ்டாலினின் மீதிருந்த பார்வை / விமர்சனம் மாறியிருக்கலாம்.

பொதுவானவர்களும் ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தி என்றே சொல்ல ஆரம்பித்தனர். சமீப காலமாக கருணாநிதியின் வாரிசு, குடும்ப அரசியல் மீது கடும் விமர்சனம் செய்பவர்கள் கூட மு க ஸ்டாலினை விட கணிமொழி, அழகிரி, தயாநிதி ஆகியோர் பெயரையே தங்கள் விமர்சனத்திற்கு துனை அழைக்கின்றனர் . ஸ்டாலின் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்..

கட்சியில் பெரும்பான்மையானவர்களும் ஸ்டாலினை அடுத்த தலைமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றால் மிகையாகாது.

துனை முதல்வராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறாரா பார்க்கலாம்..

கட்சியினர், விமர்சகர்கள், எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும் வலைப்பூ கருணாநிதி எதிர்ப்பாளர்கள் வாய்க்கு இனி நல்ல அவல்..

LTTE LEAD PRABAKARAN ALIVE - PHOTOGRAPH


அரசியல்வாதியின் பல்டியே மேல் போலிருக்கிறது.. !